PHP எப்படி வேலை செய்கிறது என்பதை பார்ப்போம்? - EThanthis

Recent Posts


PHP எப்படி வேலை செய்கிறது என்பதை பார்ப்போம்?

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
பயனர் தன்னுடைய கணினியில் இருக்கும் இணைய உலாவியைத் திறந்து, உலாவி யினுடைய முகவரிப் பட்டையில் இணைய தளத்தின் முகவரியை கொடுத்து இயக்கும் போது, 

உலாவி வலைப் பக்கத்தின் பிரதியை கேட்டு இணைய வழங்கி க்கு கோரிக்கை அனுப்புகிறது.

இணைய வழங்கி அந்த கோரி க்கையை பெற்றுக் கொண்டு அந்த வலைப் பக்கத்தினை தேடி கண்டு பிடித்து பயனரி னுடைய உலாவிக்கு அனுப்பி வைக்கிறது. 

இவை யனைத்தும் இணைய த்தின் மூலம் கனக்கச்சித மாக நடைபெறும்.

இணைய வழங்கி வலைப் பக்கத்தின் உள்ளடக் கங்களைப் பற்றி எந்த கவலையும் கொள்ளாது. 

கேட்ட பக்கத் தினை உலாவிக்கு கொடுப் பதோடு சரி வழங்கி யின் வேலை முடிகிறது.

உலாவிதான் உள்ளடக் கங்களை காண் பிக்கும் செயல்களில் ஈடுபடுகிறது.

HTML, CSS, JavaScript, jQuery என பல தொழில் நுட்பங் களைக் கொண்டு இன்றைக்கு இணைய தளங்கள் வடிவமைக் கப்படுகி ன்றன. 

மேற்காணும் தொழில் நுட்பங்களின் நிரல்வரி களைத் தான் உலாவி களால் புரிந்து கொள்ள முடியுமே தவிர.

PHP போன்ற நிரல்களை எவ்வாறு காண் பிப்பது என்பது உலாவிக்கு தெரியாது.

ஒரு வலைப் பக்கத்தில் PHP யின் நிரல்கள் இருந்தால், PHP யின் நிரலை உலாவி மறுபடியும்

இணைய வழங்கிக்கு அனுப்பி வைக்கும் அந்த நிரல்கள் PHP pre -processing module க்கு அனுப்பி வைக்கப்படும். 

வலைப் பக்கத்தை வடிவமை த்தவர் என்ன நிரல் எழுதியிரு க்கிறாரோ அதற்கான வெளியீட்டை PHP pre- processing module Web Server க்கு அனுப்பி வைக்கும். 

அதன் பின்பு Web Server ஆனது வலைப் பக்கத்தில் PHP நிரல் இருக்கும் இடத்தில் PHP pre-processing module அனுப்பி வைத்ததை Substitutes செய்யும்.

அதற்கேற் றாற்போல் உலாவி யானது வலைப் பக்கத்தை நமக்கு காண்பிக்கும்.

சுருக்க மாக சொல்ல வேண்டு மானால் ஒரு வலைப் பக்கத்தில் இருக்கும் php நிரல் அந்த உலாவியால் process செய்யப் படாது. 

php pre-processing module ஆல் process செய்யப் பட்டு அதில் கிடைக்கும் வெளியீ ட்டைத்தான் உலாவி காண்பிக்கும்.

இதை ஒரு சின்ன உதாரண த்தின் மூலம் காண்போம். கீழ்காணும் நிரலில் எனும் சிறப்புக் குறியீடுகள் இருக்கிறது.

இந்த குறியீடு தான் உலாவிக்கு php நிரலை உணர்த்து வதற்கான குறியீடு.

எனும் குறியீடு php நிரல் முடிவடை வதையும் குறிக்கிறது.

<!–test1.php –>

test1.php

php 2

சிவப்பு நிறத்தில் இருப்பவைதான் php நிரலின் வெயியீடு.

மேற்காணும் வெளி யீட்டை HTML மூல மாகவே செய்து விடலாமே ஏன் தனியாக php – ஐ பயன் படுத்த வேண்டும்? 

என்று இங்கு உங்க ளுக்கு ஒரு சந்தேகம் எழலாம். இதை ஒரு சின்ன உதாரண த்தின் மூலம் நாம் புரிந்து கொள்ளலாம்.

வங்கியி னுடைய வாடிக்கை யாளருக்கு அவர்க ளுடைய வங்கி எண், பெயர், கணக்கில் இருக்கும்

தொகை ஆகியவை களை காண்பிப்ப தற்காக ஒரு வலைப் பக்கத்தை வடிவமை க்கிறோம். 

அதை HTML இல் வடிவமைத் தால் மற்ற வாடிக்கை யாளர்களி னுடைய விபரங் களையும் எளிமை யாக தெரிந்து கொள்ளலாம். 

காண் பிக்கும் பக்கத்தின் மீது வைத்து view page source கொடுத்தால் அந்த விபரங்கள் தெரிந்து விடப் போகிறது. 

இதை தடுக்கும் விதமாக ஒரு வாடிக்கை யாளருக்கு ஒரு பக்கம் என வடிவமை த்தால் அது மலையளவு கஷ்டமான வேலை. 

ஒரு வங்கியில் 2-லட்சம் வாடிக்கை யாளர் இருந்தால் ஒருவருக்கு ஒரு பக்கம் என 2-லட்சம் பக்கங் களை வடிவமைக்க வேண்டும்.

இன்னொன்று என்ன வென்றால் HTML வைத்து உருவாக்கும் பக்கங்கள் static ஆக இருக்கும் ஆகை யால் ஒரு பக்கத்திற் காக என்ன வடிவமைத் தமோ அதன் content கள் மாறாது.

அதே நேரத்தில் வாடிக்கை யாளரின் விபரங் களை தகவல் தளத்தில் சேமித்து வைத்து அந்த விபரங் களை php மூலமாக பெறும் போது 

ஒரு குறிப்பிட்ட வாடிக்கை யாளரைத் தவிர வேறு யாருடைய தகவல் களையும் யாரும் தெரிந்து கொள்ள முடியாது.

அதோடு php யினுடைய இறுதி வெளியீட்டைத் தான் நம்மால் தெரிந்து கொள்ள முடியுமே தவிர

அதற்காக உள்ளீடு களையோ, நிரல்வரி களையோ தெரிந்து கொள்ள முடியாது. 

இதனால் தான் PHP பயன் படுத்தப் படுகிறது. இது மாதிரியான பாதுகாப்பு அம்சங் களையும், வசதி களையும் கொண்ட தால் தான் PHP சிறந்து விளங் குகிறது.

இப்ப சொல்லுங்க PHP அவசியம் வேணுமா? வேண்டாம?

PHP ஏன் மிகவும் பயனுள்ள தாக இருக்கிறது?

HTML மூலமாக உருவாக் கப்படும் பக்கங்கள் அனை த்தும் Static Page என்று அழைக்கப் படுகிறது.

அதாவது வலைப் பக்கத்தின் உள்ளடக் கங்களில் எந்த மாற்றமும் ஏற்படாமல் அப்படியே இருக்கும். 

JavaScript -ஐக் கொண்டு Dynamic Page -களை வடிவமை க்கலாம். Dynamic Page வடிவமைப் பதற்கான சக்தி மிகுந்த

இயந்தி ரத்தை JavaScript கொண்டிந்த போதிலும் அதன் மூலமாக Client Side மட்டுமே மாற்றங் களை நிகழ்த்த முடியும்.

JavaScript -ஐக் கொண்டு Web Server உடன் தொடர்பு கொள்ள முடியாது. Web Browser க்குள் மட்டுமே மாற்றங் களைக் கொண்டு வர முடியும். 

உதாரணத் திற்குச் சொல்ல வேண்டு மானால் JavaScript – ஆல் Database இல் உள்ள தகவல் களை பிரித்து அதன் வெளி யீட்டை Web Page இல் காண்பிக்க முடியாது.

ஆனால் Database இல் உள்ள தகவல் களை PHP மூலமாக திறமை யாக கையாள முடியும்.

PHP Server Side Scripting Language ஆக இருப்பதோடு, எளிமை யாக கற்றுக் கொள்ளும் வகையி லும் இருப்பதால். 

PHP மிகுந்த பயனுள்ள தாக இருக்கிறது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டு மானால் MySQL தகவல் தளத்துடன் PHP சிறப்பாக ஒத்து இயங்குகிறது. 

MySQL யில் உள்ள தகவல் களை நான் PHP -ஐக் கொண்டு எளிமை யாக பெற முடியும்.
PHP எப்படி வேலை செய்கிறது என்பதை பார்ப்போம்? PHP எப்படி வேலை செய்கிறது என்பதை பார்ப்போம்? Reviewed by Fakrudeen Ali Ahamed on December 13, 2018 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 EThanthis All rights reserved
close