அச்சு வடிவில் விக்கிபீடியாவை விரித்து படிக்கலாம் ! - EThanthis

Recent Posts


அச்சு வடிவில் விக்கிபீடியாவை விரித்து படிக்கலாம் !

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
விக்கிபீடியாவின் மொத்தத் தரவுகளையும் அச்சு வடிவத்தில் 7,600 தொகுதி களாகத் தொகுத்திருக் கிறார்
நியூயார்க்கைச் சேர்ந்த கலைஞர் ஒருவர். அவரின் இந்த லட்சியத் திட்டத்தின் மதிப்பு, 3 கோடியே 17 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்.

ஸ்டேட்டன் தீவு கல்லூரி மற்றும் நியூயார்க் நகரப் பல்கலைக் கழகத்தின் பட்டதாரி மையத்தின் பயிற்றுவிப்பாளர் மைக்கேல் மேண்டிபெர்க். 

இவர் ஆங்கில விக்கிபீடியா வின் தரவுதளத்தைப் பல்வேறு சிறு பிரிவுகளாகப் பிரித்து ஆய்வு செய்து, ஒரு மென் பொருளை எழுதியிரு க்கிறார். 

7,600 பிரதிகளைக் கொண்ட அப்புத்தகம், உறைகளால் மூடப்பட்டு அச்சுப் புத்தக விற்பனையைப் பிரதானமாகக் கொண்ட லுலு.காம் (lulu.com) என்ற வலைதளத்தில் பதிவேற்றப் பட்டுள்ளது. 

நியூயார்க்கின் கிழக்கு கிராமத்தில் நடக்க இருக்கும் கண்காட்சியில் லுலு தளத்தில் பதிவேற்றப்பட்ட 11 ஜிபி அளவு கொண்ட சுருக்கப்பட்ட கோப்புகள் காண்பிக்கப்பட உள்ளன. 

தலா 700 பக்கங்களைக் கொண்ட முதல் 1,980 தொகுப்புகளின் மாதிரிகள், கண்காட்சியில் சுவரோவியங் களாகச் சித்தரிக்கப் பட்டுள்ளன. 

கண்காட்சியின் முதல் பிரவேசமாக 1 கோடியே 15 லட்சம் கட்டுரைகளைக் கொண்ட 91 தொகுப்புகள் இருக்கும் என ஒரு செய்தி தெரிவிக்கிறது.

முதல் 500 தொகுப்புகள் முழுவதுமாக குறியீடுகள் மற்றும் எண்களைத் தொடக்க மாகக் கொண்டிருக்கும், 

விக்கிபீடியா வுக்கு தகவல்களை அளிப்பவர் களைக் கவுரவிக்கும் விதமாக, 36 தொகுப்புகளில் 

விக்கிபீடியா வுக்கு தகவல்களை அளித்த 75 லட்சம் பங்களிப் பாளர்களின் பெயர் குறிப்பிடப் பட்டுள்ளது. 

2011-ல் விக்கிபீடியா துவங்கியதில் இருந்து சிறு திருத்தம் மேற் கொண்டவர்கள் வரை எல்லோரின் பெயர்களும் அதில் அட்டவணைப் படுத்தப் பட்டுள்ளது.

மொத்தத் தொகுப்புகளின் பிரதிகளையும் வாங்க 11-ல் இருந்து 14 நாட்கள் வரை ஆகலாம். தனித்தனியான தொகுப்புகள் இப்போது விற்பனைக்குத் தயாராக உள்ளன. 

2000 முறை விக்கிபீடியா வுக்கு தரவுகளை அளித்த மைக்கேல், 2009-ல் விக்கிபீடியாவை மொத்தமாகத் தொகுக்கும் திட்டத்தை ஆரம்பித்தார். 

2012-ல் முழுமூச்சாக இறங்கியவர், "முடிவே இல்லாத நிரலாக்கப் பணிகளின் தொடர்" என்ற 

நோக்கில் விக்கிப்பீடியா வின் அச்சுப் பிரதிகளைத் தொகுத்து வெற்றிகரமாக வெளி யிட்டிருக்கிறார். 
அச்சு வடிவில் விக்கிபீடியாவை விரித்து படிக்கலாம் ! அச்சு வடிவில் விக்கிபீடியாவை விரித்து படிக்கலாம் ! Reviewed by Fakrudeen Ali Ahamed on September 25, 2018 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 EThanthis All rights reserved
close