குறுஞ்செய்தி இலவசமாக அனுப்ப ! - EThanthis

Recent Posts


குறுஞ்செய்தி இலவசமாக அனுப்ப !

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
தற்கால  இளைஞ ர்களின் தகவல் பரிமாற்ற த்திற்கு மிகப்பெரும் உதவியாக இருப்பது குறுஞ்செய்தி எனப்படும்  SMS-Short Messaging Service.
இளைஞர்கள் மட்டு மல்லாமல் தொழில் முனைவோர், விற்பனைத் திட்டம் கொண்டு ள்ளோர்

மற்றும் பலருக்கு  குறுஞ்செய்தியின் உதவி மிகப்பெரும் தேவையாகவே உள்ளது. 

இத்தகைய குறுஞ்செய்தியை இணைய தளம் வாயிலாக அனுப்பும் முறை தற்பொழுது பிரபலமாகி வருகிறது.

சமீபத்திய கணக்கெடுப்பில் இந்திய மக்கள் தொகை சுமார் 1.22 நிகற்ப்புதம்(billion), 

இதில் 929 பத்து நூறாயிரம் (million)  சதவிகிதத்தினர் அலைபேசி  வாடிக்கை யாளர்களாக உள்ளனர். 

ஆகவே ஒரு செய்தியை பகிர்ந்து கொள்ள குறுஞ்செய்தியின் பங்கு மிகப்பெருமளவில் கண்டிப்பாக இருக்கும்.

இத்தகைய குறுஞ்செய்தியை அனுப்புவதற்கு பல இணைய தளங்கள் உள்ளன. 

உதாரணத்திற்கு way2sms, fullonsms, site2sms, youmint, ultoo, என்று பல்வேறு வகையான இணையத் தளங்கள் இருக்கின்றன.

இதில் அப்படி என்ன சிறப்பம்சம் உள்ளது?
  • முக்கிய சிறப்பம்சம் என்று சொல்லப்போனால் இணையதளத்தின் மூலம் அனுப்பும் குறுஞ்செய்திக்கு எந்த வித கட்டணமும் வசூலிப்பதில்லை. 

  • ஆகையால் இணையதளம் அதிகம் உபயோகிப் பவர்கள் கட்டண  குறைப்பானை (sms rate cutter)  பயன்படுத்துவது சற்று குறைந்துள்ளது.
அலைபேசி நிறுவனங்களின் கட்டண விவரங்கள்:

ஏர்செல்-35 ரூபாய் செலுத்தினால்  உள்ளூர் மற்றும் வெளியூர் களுக்கு குறுஞ்செய்தி அனுப்பலாம். 

அதிலும் நாள் ஒன்றுக்கு 100 குறுஞ்செய்திக்கு மேல் அனுப்பினால் கட்டணம் வசூலிக்கப்படும். 

இதன் கால அவகாசம் ஒரு மாதம் ஆகும். இதே போலவே மற்ற நிறுவனங்களும் அதிக கட்டணம் வசூலிக்கின்றனர்.

டாடா டோகோமோ 38 ரூபாய்க்கு 45 நாள் கால அவகாசம் தருகிறது.

வோடபோன் 21 ரூபாய்க்கு 100 உள்ளூர் மற்றும் வெளியூர் குறுஞ்செய்திகள் அனுப்பலாம். 15 நாள் கால அவகாசம் தருகிறார்கள்.

இவ்வளவு செலவு செய்து அனுப்புவதை விட இணையதளம் வாயிலாக எந்தவித கட்டணமுமின்றி அனுப்பத்தானே எல்லோரும் விரும்புவர்.

மற்றொரு முக்கிய காரணமாக விளங்குவது இதன் எண்ணிக்கை இல்லா குறுஞ்செய்தி அனுப்பும் வசதி. 

இவ்வசதி மூலம் நாம் பல பேருக்கு குறுஞ்செய்தியை பகிர்ந்து கொள்ளலாம். 

விற்பனைத் திட்டம் கொண்டுள் ளோருக்கு இதன் தேவை அதிகம் இருக்கும்.
  • Smsintegra.com என்ற இணையத்தளத்தின் மூலமாக நாம் ஒரு சொடுக்கில் ஆயிரக்கணக் கான நபர்களுக்கு குறுஞ்செய்தியை அனுப்ப முடியும். 
  • மற்ற இணையதளத்தில் Group Message  எனப்படும் வசதி கிடையாது. ஆனால் இவ்வசதியை பெறுவதற்கு நாம் கட்டணம் செலுத்த வேண்டும். 
  • தொழில் நிறுவனங்கள் இவ்வசதி மூலம் வாடிக்கை யாளர்களை ஈர்க்கின்றனர்.
இணைய தளக் குறுஞ்செய்தியை  கணினி வைத்திருப் பவர்கள் மட்டும் தான் அனுப்ப முடியும் என்பதில்லை, 

தற்போதைய புதுரக கைபேசியின் வாயிலாகவும் நாம் இவ்வசதியை பெறமுடியும்.

இதற்கென பல Application கள் உள்ளன. உதாரணத்திற்கு (Free sms India) என்ற android app. வழியாக குறுஞ்செய்தியை அனுப்பலாம்.

இத்தகைய வசதிகளை நாம் அனைவரும் பயன்படுத்தி பயன் பெறுவோம்.
குறுஞ்செய்தி இலவசமாக அனுப்ப !  குறுஞ்செய்தி இலவசமாக அனுப்ப ! Reviewed by Fakrudeen Ali Ahamed on September 08, 2018 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 EThanthis All rights reserved
close