கம்ப்யூட்டருக்குப் புதியவரா - ஹெர்ட்ஸ் குறிக்கும் செயல்பாடு ! - EThanthis

Recent Posts


கம்ப்யூட்டருக்குப் புதியவரா - ஹெர்ட்ஸ் குறிக்கும் செயல்பாடு !

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
கம்ப்யூட்டர் தொழில் நுட்பம் மற்றும் அதன் செயல்பாடு குறித்துப் பேசுகையில் நாம் அடிக்கடி "மெகா ஹெர்ட்ஸ்’ மற்றும் "கிகா ஹெர்ட்ஸ்’ என்ற சொற்களைப் பயன்படுத்து கிறோம்.
 
கட்டுரைகளில் படிக்கிறோம். இந்த ஹெர்ட்ஸ் எதனைக் குறிக்கிறது? ஏன் இந்த பெயர் வந்தது என்று பார்ப்போமா! 

ஹெர்ட்ஸ் என்பதனைச் சுருக்கமாக ஏத் என்று எழுதுகிறோம். இது Hertz என்பதன் சுருக்கம்.

ஜெர்மன் பிசிக்ஸ் விஞ்ஞானி Heinrich Rudolf என்பவரின் குடும்ப பெயர் ஹெர்ட்ஸ். 

 ரேடியோ மற்றும் எலக்ட்ரிக்கல் அலை வரிசையினை, மெட்ரிக் முறையில் அளந்திட இந்த பெயர் வைக்கப் பட்டது.
ஒரு ஹெர்ட்ஸ் என்பது ஒரு விநாடியில் ஏற்படும் ஒரு சுற்று அல்லது அசைவு (ரேடியோ அலை வரிசையில்). 

கம்ப்யூட்டரைப் பொறுத்த வரை இது மானிட்டருடன் அதிகம் சம்பந்தப் படுத்தி பேசப்படுகிறது.

சி.ஆர்.டி. மானிட்டர் (டிவி பெட்டி போல இருப்பது) அதன் ஸ்கிரீன் இமேஜை தொடர்ந்து காட்டாமல் விட்டு விட்டுத் தான் காட்டுகிறது. 

ஆனால் அதனை நாம் நம் கண்களால் பார்த்தால் கண் கெட்டுப் போகும்.

எனவே தான் விநாடியில் பலமுறை இது விட்டு விட்டுக் காட்டப் படுகையில் இடைவெளி தெரிவதில்லை. 

எடுத்துக் காட்டாக 85 ஏத் என்பதில் விநாடி நேரத்தில் 85 முறை இமேஜ் பின் வாங்கப்பட்டு மீண்டும் காட்டப் படுகிறது. 

அத்தனை முறை காட்டப் படுவதனாலேயே இமேஜ் அப்படியே நிலையாக நிற்பது போல நாம் உணர்கிறோம்.

மெஹா ஹெர்ட்ஸ் Mehahertz (MHz):

ஒரு மெஹா ஹெர்ட்ஸ் என்பது பத்து லட்சம் சுற்றுகளாகும். அதாவது ஒரு விநாடியில் பத்து லட்சம் சுற்றுகள் ஏற்படு கின்றன. 

இது எப்படி ஏற்படுகிறது என்பதனை படமாகவோ அல்லது வேறு வழியாகவோ விளக்குவது கஷ்டம்.

கம்ப்யூட்டர் பிராசசரைப் பொறுத்தவரை மெஹா ஹெர்ட்ஸ் என்பது மிகவும் சாதாரணம். 

ஒரு கம்ப்யூட்டர் பிராசசர், உள்ளாக அமைந்த ஒரு கடிகாரத் துடிப்பினை மையமாகக் கொண்டு செயல் படுகிறது.
ஒவ்வொரு துடிப்பிற்கும் ஒரு செயல் மேற்கொள்ளப் படுகிறது. 

எத்தனை முறை இந்த துடிப்பு ஏற்படுகிறது என்பது தான் பிராசசரின் கிளாக் ஸ்பீட் என அழைக்கப் படுகிறது. 

இந்த வேகம் மெஹா ஹெர்ட்ஸ் என்பதில் அளக்கப் படுகிறது.

கிஹா ஹெர்ட்ஸ் Gigahertz (GHz):

கம்ப்யூட்டர் உலகில் இது கம்ப்யூட்டர் பிராசசரின் வேகத்தைக் குறிப்பிடப் பயன்படுத்தப் படுகிறது. 

ஒரு கிகா ஹெர்ட்ஸ் என்பது 1000 மெஹா ஹெர்ட்ஸ். முதலில் வந்த பெர்சனல் கம்ப்யூட்டர்கள் 4.77 மெஹா ஹெர்ட்ஸ் வேகம் கொண்ட பிராசசர்களைக் கொண்டிருந்தன.

அதாவது விநாடிக்கு ஏறத்தாழ 48 லட்சம் கிளாக் துடிப்புகள். தற்போதைய ப்ராசசர்களின் வேகம் கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் காட்டப் படுகிறது.
கம்ப்யூட்டருக்குப் புதியவரா - ஹெர்ட்ஸ் குறிக்கும் செயல்பாடு ! கம்ப்யூட்டருக்குப் புதியவரா - ஹெர்ட்ஸ் குறிக்கும் செயல்பாடு ! Reviewed by Fakrudeen Ali Ahamed on September 25, 2018 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 EThanthis All rights reserved
close