8.7 மில்லியன் 'குழந்தை பாலியல்' படங்கள் நீக்கம் - பேஸ்புக் !
புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..
லைக் பண்ணுங்க... "
சமூக வலை தளமான பேஸ்புக்கில் குழந்தைகளை தவறாக சித்தரிக்கும் புகைப் படங்கள்
பேஸ்புக்கில் நிறைந்திருப்பது தொடர்பாக பிபிசி விசாரணையை செய்து செய்தியை வெளி யிட்டது.
இதனை யடுத்து பேஸ்புக் நிறுவனம் கடுமையான விமர்சனங் களுக்கு உள்ளானது.
இதனை யடுத்து குழந்தைகள் பாலியல் தொடர்பான புகைப் படங்களை முடக்க பேஸ்புக் நடவடிகையை மேற்கொண்டது.
இப்போது
உரிய தொழில்நுட்ப வல்லுநர்களை கொண்டு குழந்தைகள் தொடர்பான பாலியல் படங்கள்
முழுவதும் அகற்றப் பட்டுள்ளது என்று பேஸ்புக் தெரிவித்துள்ளது.
கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 8.7 மில்லியன் எண்ணிக்கை அளவில் இடம் பெற்ற குழந்தைகளை
தவறான தோற்றத்தில் காட்டும் படங்கள், தவறாகச் சித்தரிக்கும் படங்களை அகற்றி விட்டதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது.
படங்களை அகற்ற, செயற்கை நுண்ணறிவு பிரிவு மற்றும் மெஷின் கற்றல் தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப் பட்டது.
படங்களை வலைதளத்தில் ஏற்றியவர் களுக்கு தகவல்கள் அனுப்பிய பிறகு கிட்டத்தட்ட
அனைத்து படங்களும் (99 சதவீதம்) அகற்றப்பட்டு விட்டது என தெரிவிக்கப் பட்டுள்ளது.
ஆன்லைன் பாதுகாப்பு, பகுப்பாய்வு மற்றும் தடயவியல் விசாரணைகள் போன்ற வற்றில் செயல்பட,
சட்ட அமலாக்க பின்னணி கொண்டவர் களிடம் பயிற்சி பெற்ற சிறப்பு தொழில்நுட்பக் குழு எங்களிடம் உள்ளது.
இவர்கள் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களை மறுபரிசீலனை செய்வார்கள் என்றும் பேஸ்புக் தெரிவித்துள்ளது.
தேவையற்ற புகைப்படங்கள் மற்றும் புதிய புகைப் படங்களை ஆய்வு செய்யவும்
என்ஜீனியர்கள் குழு கவனம் செலுத்தி வருகிறது என தெரிவிக்கப் பட்டுள்ளது.