வாட்ஸ்அப் என்ற பெயர் உருவான ஒரு சுவாரஸ்யமான கதை !
புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..
லைக் பண்ணுங்க... "
ஜேன் கௌம் என்றவருக்கு ஒரு யோசனை தோன்றியது. அவர் ஆரம்ப கால கட்டத்தில் அவருடைய செயலிக்கு மூன்று விதிகளை வகுத்து வைத்து இருந்தார்.
* அந்த செயலி விளம்பரங் களை எடுத்துக் கொள்ளாது.
* அனைவருக்கு ஒரு சிறந்த செயலி யாகவும், அனைத்திலும் அனுபவமாக இருக்க வேண்டும்.
* அந்த செயலியானது மிகவும் பாதுகாப்பாகவும், வாடிக்கை யாளர்களின் தனி சுதந்திரத்தை மதிக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும். இதுவே இவரை தாரக மந்திரமாகும்.
செய்திகளை பரிமாறிக்கொள்ளும் வாட்ஸ்அப்பில் வேறெந்த குறுக்கீடுகளும், எந்த காலத்திலும் இருக்கக் கூடாது என்பதில் இவரும்,
இவரின் நண்பர் களுக்கும் இருவரும் உறுதியாக இருந்தார்கள்.
தங்களின் அனுபவங்களை கொண்டு கடந்த 2009ஆம் ஆண்டு ஜேன் கௌம் மற்றும்
பிரையன் ஆக்டன் இருவரும் இணைந்து முதலில் ஒரு சாதாரண குறுஞ்செயலியை உருவாக்க திட்டமிட்டனர்.
அதன் பயனாக கிடைத்தது தான் தற்போது நாம் பயன்படுத்தும் "வாட்ஸ்அப்".
தான் புதியதாக உருவாக்க இருக்கும் செயலுக்கு "வாட்ஸ்அப்" என்று ஜேன் கௌம் தான் பெயரிட்டார்.
ஒவ்வொருவரும் கண்டிப்பாக தங்களது பேச்சை நீட்டிக்க குறுஞ்செய்தி அனுப்பும் போது,
அடிக்கடி அப்புறம் என்ன?" (Whats Up?) என்று கேட்போம் இல்லையா? அதையே தன் நிறுவனத்து க்கும் பெயராக வைத்தார்.
இதனை தன்னுடைய பிறந்த நாளான பிப்ரவரி 24, 2009ஆம் ஆண்டு அன்று வாட்ஸ்அப் இன்கார்ப்பரேஷனை கலிஃபோர்னியா வில் ஜேன் கௌம் தொடங்கினார்.
வேலை தொடங்கி நன்றாக போய் கொண்டிருந்த நேரத்தில் திடீரென வாட்ஸ்அப்பில் சில பிரச்சனைகள் ஏற்பட்டது.
இந்த பிரச்சனை பல நாட்களுக்கு நீடித்ததால் இருவருக்கும் மன அழுத்தம் உண்டானது.
ஒரு கட்டத்தில் இந்த செயலி வேலைக்கு ஆகாது எனவே இந்த ப்ரொஜெக்ட்டை டிராப் செய்யல ஜேன் கௌம் முடிவு செய்தார்.
ஆனால், பிரையன் ஆக்டன், ஜேன் கௌம்-க்கு அறிவுரைக் கூறி ஊக்கப் படுத்தினார்.
சில காலத்திற்கு பின் ஆப்பிள் நிறுவனம் மூலமாக இவர்களுக்கு ஒரு உதவி கிடைத்தது.
வாட்ஸ்அப்-ன் அறிவிப்புகளை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டு இவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைத்து கொடுத்தது.
இருந்த போதிலும் வாட்ஸ்அப்பிற்கு சொல்ல கூடிய அளவிற்கு வளர்ச்சி இல்லாதது ஒரு பெரும் பிரச்சனையாக இருந்தது.
அப்போது பிரையன் ஆக்டனிடம், ஜேன் கௌம் உதவிக் கேட்டார்.
பிரையன் ஆக்டன் தனது யாகூ நண்பர்களிடம் கேட்டு 2 இலட்சத்து 50 ஆயிரம் அமெரிக்கன் டாலர் நிதியை பெற்றுத் தந்தார்.
இதனால் பிரையன் ஆக்டனுக்கு வாட்ஸ்அப்-ல் இணை நிறுவனர் பதவி கிடைத்தது.
அன்று தொடங்கிய வாட்ஸ்அப்-ன் வளர்ச்சி இன்று வரை குறையவே இல்லை.