விண்டோஸ் வால் பேப்பர்க்கு சொந்தக்காரர் ! - EThanthis

Recent Posts


விண்டோஸ் வால் பேப்பர்க்கு சொந்தக்காரர் !

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
நீங்க கம்ப்யூட்டரை திறந்ததும் வர்ற படத்தை எடுத்தது யார்னு தெரியுமா....? உலகிலேயே அதிகம் பேர் அதிக தடவை பார்த்த புகைப்படம் எது என்று தெரியுமா.. 
 
அதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் இந்த செய்தியை குளோஸ் செய்து விட்டு உங்களது கம்ப்யூட்டரை ஷட் டவுன் செய்யுங்கள்.

மீண்டும் ஆன் செய்யுங்கள். இப்போது கம்ப்யூட்டர் திரையில் வரும் விண்டோஸ் வால் பேப்பர் தான் அந்தப் புகைப்படம்!

இந்தப் புகைப் படத்தை பல நூறு முறை பார்த்திருப்போம். 

ஆனால் அதை எடுத்தவர் யார் என்று ஒரு முறையாவது யோசித்தி ருப்போமா.. 
அந்தப் புகைப் படத்தை எடுத்தவர் சார்லஸ் ஓ ரியர் என்ற தாத்தா தான்.

அமெரிக்கா வின் நபா வில்லி பள்ளத்தாக்குப் பகுதியில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது.

இதைப் பார்த்த பில் கேட்ஸ் இதை வாங்கி விண்டோஸின் வால் பேப்பராக மாற்றி விட்டார்.

இவருக்கு சக் என்ற செல்லப் பெயரும் உண்டு. 1941ம் ஆண்டு பிறந்தவர். புகைப்படக் கலைஞர்.

இவர் எடுத்த படம்தான் இந்த பிளிஸ்.. இதைத் தான் விண்டோஸ் வால் பேப்பராக நாம் பார்க்கிறோம்.
பிரபலமான பல பத்திரிகைகளில் புகைப்படக் கலைஞராக பணியாற்றி யுள்ளார் சார்லஸ் ஓ ரியர்.

மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், இனனொரு வருடன் இணைந்து முன்பு கோர்பிஸ் போட்டோகிராபி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார்.

இதில் புகைப் படக்காரராக ரியர் வே்லை பார்த்த போது தான் அவரது பிளிஸ் படம் கேட்ஸைக் கவர்ந்து அதை வாங்கி வால் பேப்பராக்கி விட்டார்.

உலகில் அதிகம் பேர் பார்த்த புகைப்படம் என்ற பெருமையை இது பெற்றுள்ளது.

கம்ப்யூட்டர் (windows) வைத்துள்ள அத்தனை பேரும் பார்த்த படமுமாக வும் இது மாறியுள்ளது.
விண்டோஸ் வால் பேப்பர்க்கு சொந்தக்காரர் ! விண்டோஸ் வால் பேப்பர்க்கு சொந்தக்காரர் ! Reviewed by Fakrudeen Ali Ahamed on December 14, 2018 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 EThanthis All rights reserved
close