எஸ்எம்எஸ் மூலம் ரயில் பயனச்சீட்டு முன்பதிவு செய்வது ! - EThanthis

Recent Posts


எஸ்எம்எஸ் மூலம் ரயில் பயனச்சீட்டு முன்பதிவு செய்வது !

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
மத்திய அரசு மிக வேகமாக டிஜிட்டல் மயமாகி வருகின்றது, மேலும் இந்திய ஸ்மார்ட்போன் பயனாளிகளின் எண்னிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.
ரயில் பயனச்சீட்டு முன்பதிவு

இருந்தும் அவைகளை பயன்படுத்த பலருக்கும் தெரிய வில்லை என்பது தான் உண்மை, இந்த நிலையை மாற்றுவ தற்காகவே இந்த பதிவு.

 டிஜிட்டல் மயமான அரசு சேவைகளை பயன் படுத்துவது எப்படி என்று தான் பார்க்க இருக்கின்ரீர்கள்.

அந்த வகையில் IRCTCயின் ரயில் பயனச்சீட்டை எஸ்எம்எஸ் மூலம் முன்பதிவு செய்வது எப்படி என்று தான் பார்க்க இருக்கின் றீர்கள்.

இந்திய ரயில்வேயின் IRCTC இணையதளம் மூலம் முன்பதிவு செய்ய சிரமமாக இருந்தால் 

உடனே அருகில் இருக்கும் ரயில் நிலையம் செல்ல வேண்டிய தில்லை, உங்கள் மொபைல் மூலமாகவும் பயனச்சீட்டை முன்பதிவு செய்ய முடியும்.

மொபைலில் எஸ்எம்எஸ் மூலம் ரயில் பயனச்சீட்டை முன்பதிவு செய்வது எப்படி என்று பாரங்கள். 

 முக்கிய குறிப்பு எஸ்எம்எஸ் மூலம் முன்பதிவு செய்யும் போது நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு எஸ்எம்எஸ் க்கும் ரூ.3 வசூலிக்கப் படும்.

1. முதலில் உங்களிடம் IRCTC அக்கவுன்ட் இருக்க வேண்டும், இல்லாத பட்சத்தில் புதிதாக உருவாக்க இங்கு க்ளிக் செய்யவும், 

IRCTC பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் நீங்கள் பயன் படுத்தும் வங்கி அக்கவுன்ட் உடன் பொருந்த வேண்டும்,

பொருந்தாத பட்சத்தில் இதை மேற்கொள்ள இயலாது.

2. அடுத்து நீங்கள் பயன்படுத்தும் வங்கியில் IMPS சேவை உள்ளதா என்பதை சரி பார்க்கவும்.

நீங்கள் பயன் படுத்தும் வங்கியில் இந்த சேவை உள்ளதா என்பதை சரிபார்க்க இங்கு க்ளிக் செய்யவும்,

 எஸ்எம்எஸ் மூலம் பணம் செலுத்த IMPS சேவை அவசியம் தேவைப்படும்.

3. உங்களது வங்கியில் இந்த சேவை இருக்கும் பட்சத்தில், வங்கியை அனுகி MMID எண் பெற வேண்டும்,

ஒவ்வொரு வங்கியிற்கும் இந்த முறை வேறுபடும்.

4. வங்கி மூலம் அனுப்பபட்ட MMID மற்றும் ஒருமுறை பயன்படுத்தும் கடவு எண்களை குறித்து கொள்ளுங்கள்.

5. முன்பதிவு முறை ஆரம்பமாகிறது. இப்பொழுது 139க்கு குருந்தகவல் அனுப்ப வேண்டும்.

அனுப்பும் முறைக்கான எடுத்துக் காட்டு: BOOK 12951 BCT NDLS 2201 2A ARUN 24 M KAMALA 28 F என டைப் செய்ய வேண்டும்.

6. இப்பொழுது IRCTC தரப்பில் இருந்து பரிவர்த்தனை ஐடி, பயனச்சீ்ட்டின் விலை மற்றும்

கிடைக்கும் தன்மை குறித்த தகவல்கள் உங்களுக்கு குருந்தகவல் மூலம் அனுப்பப்படும்.

பணம் செலுத்த PAY IMPS IRCTCUserID என டைப் செய்து 139க்கு அனுப்ப வேண்டும்.
எஸ்எம்எஸ்

7. உங்களது பயனச்சீட்டு முன்பதிவு செய்யப்பட்ட உடன் உறுதிப் படுத்தப்பட்ட குருந்தகவல் IRCTC தரப்பில் இருந்து அனுப்ப ப்படும்.

பயனம் மேற் கொள்ளும் போது இந்த குருந்தகவல் அவசியம் இருக்க வேண்டும். குருந்தக வலை அச்சடிக்க வேண்டிய அவசியம் இல்லை.

பயனத்தின் போது உங்களுக்கு அனுப்பப்பட்ட குருந்தகவல் மற்றும் அதற்கான புகைப்படம்

கொண்ட அடையாள அட்டையை பயனச்சீட்டு பரிசோதகரிடம் காண்பித்தால் போதுமானது.
எஸ்எம்எஸ் மூலம் ரயில் பயனச்சீட்டு முன்பதிவு செய்வது ! எஸ்எம்எஸ் மூலம் ரயில் பயனச்சீட்டு முன்பதிவு செய்வது ! Reviewed by Fakrudeen Ali Ahamed on December 13, 2018 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 EThanthis All rights reserved
close