போனை பார்த்து கத்துங்கள் சார்ஜ் ஏறி விடும் !
புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..
லைக் பண்ணுங்க... "
உங்கள் செல்போனில் சார்ஜ் தீர்ந்து விட்டால் இனி கவலைப்பட வேண்டிய தில்லை.
புதிதாக உருவாக்கப் பட்டுள்ள சாதனத்தை போனில் பொருத்தி விட்டு அதை பார்த்து
கத்தினால் சார்ஜ் ஏறிவிடும் என விஞ்ஞானிகள் தெரிவித்து ள்ளார்கள்.
ஸ்மார்ட் போன் வைத்திருப் பவர்களின் மிகப்பெரிய பிரச்சனை பேட்டரி சார்ஜ் தீர்ந்து போவது தான்.
இதை சமாளிப் பதற்கு பலர் இரண்டு போன்களை கையில் வைத்துக் கொண்டு அலைகி றார்கள்.
இந்த பிரச்சனையை தீர்ப்பதற்கு உலகம் முழுவதும் பல ஆராய்ச் சிகள் நடந்து வருகின்றன.
அதன் விளைவாக ஜார்ஜியா தொழில் நுட்ப பல்கலைக் கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் காகித ஒலி வாங்கியை தயாரித் துள்ளார்கள்.
போனில் பொருத்தப் பட்டிருக்கும் இந்த ஒலி வாங்கியை நோக்கி சத்தமாக கத்தும் போது
காகிதத்தில் அதிர்வு ஏற்பட்டு அதன் மூலம் மின் உற்பத்தி செய்யப் படுகிறது.
இந்த மின் ஆற்றலை கொண்டு செல்போனை சார்ஜ் செய்து கொள்ள முடியும்.
ஆனால் இந்த குறைந்த அளவிலான மின் ஆற்றலை கொண்டு முழு பேட்டரி யையும் சார்ஜ் செய்ய முடியாது.
உற்பத்தி செய்யப் படும் மின் ஆற்றலின் அளவானது ஒலி வாங்கி யின் அளவை பொறுத்து மாறுபடும்.
தற்போது ஒரு சதுர மீட்டருக்கு 121 மில்லி வாட்ஸில் உற்பத்தி செய்யப் படுகிறது.
தேவை யில்லாமல் அதிக சத்தம் ஏற்படும் இடங்களில் இந்த வகையான ஒலி வாங்கியை வைத்து
மின் உற்பத்தி யிலும் ஈடுபட முடியும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித் துள்ளார்கள்.