மனிதகுல வரலாற்றை பதிவு செய்யும் குறுந்தகடு ! - EThanthis

Recent Posts


மனிதகுல வரலாற்றை பதிவு செய்யும் குறுந்தகடு !

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
பிரிட்டன் விஞ்ஞானிகள் 360 டெராபைட் மின்னணுத் தகவல்களை உள்ளடக்கக் கூடியதும் 1380 கோடி 

ஆண்டு களுக்கு மேல் நிலைத் திருக்கக் கூடியது மான ஐந்து பரிமாண குறுந்தகடு (5D data storage) ஒன்றினை உருவாக்கி யுள்ளனர்.

பிரிட்டனைச் சேர்ந்த செளதாம்ப்டன் பல்கலைக் கழகத்தின் கண்ணாடி மின்னணு வியல் ஆய்வு மையம் இந்த குறுந்தகட்டை உருவாக்கி யுள்ளது.

நானோ தொழில் நுட்பம் மூலம் உருவாக்க ப்பட்ட கண்ணாடி இழைகளைக் கொண்டு சிறிய நாணயத்தின் அளவில் உருவாக்கப் பட்டுள்ளது.

ஐந்து பரிமாணப் பதிவு முறை மூலம் அதிவேகத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி,

இந்த குறுந்தகட்டில் தகவல் களைப் பதிவு செய்யவும் பதிவிட்ட வற்றை மீளப்பெறவும் முடியும்.

இதன் நவீன தொழில் நுட்பம் காரணமாக ஒவ்வொரு தகவல் புள்ளியும் 5 மைக்ரோ மீட்டர்

(ஒரு மீட்டரின் பத்து இலட்சத்தில் ஒரு பகுதி) இடைவெளி யில் அமைந்துள்ள தால்,

மிகச் சிறிய இடத்திலேயே அதிக தகவல் களைப் பதிவு செய்ய முடிகிறது.

1,000 டிகிரி செல்ஷியஸ் வரையிலான வெப்பத்தை இந்தக் குறுந்தகடு தாக்குப் பிடிக்கும் என்பது இதன் மற்றொரு சிறப்பம்சம் ஆகும்.

190 டிகிரி செல்ஷியஸ் வெப்ப நிலையில் கூட இந்தக் குறுந்தகடு 1,380 கோடி ஆண்டுகள் நிலைத் திருக்கும்.

சாதாரண வெப்ப நிலையில் இந்தக் குறுந்தகடுகள் எல்லை யற்ற வாழ் நாளைக் கொண்டி ருக்கும்.

இத்தகைய சிறப்பு மிக்க இந்தக் குறுந்தகடு களுக்கு, “சுப்பர்மேன் மெமரி கிறிஸ்டல்ஸ்’ (Superman memory crystal) என்று பெயரிடப் பட்டுள்ளது.

இதில் பதிவு செய்யப்பட்ட தகவல் பல கோடி ஆண்டு களுக்கு அழியாமல் இருக்கும் என்பதால்,

வரலாற்று ஆவணங் களைப் பாதுகாக்கும் துறையினரு க்கு இந்த குறுந்தகடுகள் வரப்பிரசாத மாக அமையும் எனக் கூறப் படுகிறது.
மனிதகுல வரலாற்றை பதிவு செய்யும் குறுந்தகடு ! மனிதகுல வரலாற்றை பதிவு செய்யும் குறுந்தகடு ! Reviewed by Fakrudeen Ali Ahamed on December 14, 2018 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 EThanthis All rights reserved
close