டச் ஸ்கிரீன் மொபைல் ! - EThanthis

Recent Posts


டச் ஸ்கிரீன் மொபைல் !

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
நமக்கு ஒரு கெட்ட பழக்கம்... நிறைய பேர்கள் ஒரு பொருளை வாங்க ஆரம்பித் தால் உடனே ஓடிப் போய் நாமும் அதை வாங்கி விடுவோம்...

சமீப காலமாக அப்படி ஒரு பொருளை எல்லோரும் கண்ணை மூடிக் கொண்டு

வாங்குகி றார்கள் என்றால் அது டச் ஸ்கிரீன் மொபைல் போன் தான்!

உங்களு க்கும் டச் மொபைல் வாங்கும் எண்ணம் இருந்தால் இதை முதலில் படித்து விட்டு அதன் பிறகு செயலில் இறங்குங்கள்...

வசதிகள் 

டச் ஸ்கிரீன் மொபைல் போனை முதன் முதலில் அறிமுகப் படுத்தியது ஹெச்.டி.சி. நிறுவனம் தான்.

சாதாரண மொபைல் போனை விட டச் ஸ்கிரீன் போன் விலை கொஞ்சம் அதிக மாகவே இருக்கிறது.
சீன அதிகாரிகள் முரட்டுத் தனமானவர்கள் - மகாராணி !
காரணம் இதில் இருக்கும் டச் பேட். பிராண்டட் டச் போன்கள் என்று போனால் குறைந்தபட்சம் 4,000 ரூபா யாவது தேவைப்படும்.

அதற்கு குறைந்து வேண்டு மென்றால் சீன, லோக்கல் தயாரிப்பு களைத் தான் நாட வேண்டிய திருக்கும்.

கேமராவைப் பொறுத்த வரை மற்றவகை போன்களில் இருக்கும் அதே கிளாரிட்டி தான் இருக்கும்.

ஆனால் இதில் எல்.சி.டி. ஸ்கிரீன் இருப்பதால் படங்கள் பளிச்சென இருக்கும். டச்சில் இருக்கும் கலர்களும் பளிச்சென இருக்கும்.

எழுத்துக்கள் படிப்பதற்கு சுலபமாக இருக்கும். தேவையெனில் குவாட்டரி கீபோர்டு ஆப்ஷனையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
டாக்கு மென்ட்டுகள், பி.டி.எஃப். ஃபைல்கள், எக்செல், வை-பைஃவ் வசதி, 3ஜி, வேகமான இன்டர்நெட் வசதி இருக்கிறது.

மேலும் வேறு சாஃப்ட்வேர்கள் தேவை யெனில் அவற்றை யும் டவுன்லோட் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஸ்கிரீன் பெரிதாக இருப்பதினால் வெப் பிரவுஸிங் செய்வத ற்கும், போட்டோக்கள், திரைப் படங்கள் பார்ப்பத ற்கும் வசதியாக இருக்கும்.

பிரச்னைகள் 

போனை லாக் செய்யா விட்டால் கைபட்டு தெரியாமல் யாருக்காவது அழைப்பு போய் விடும்.

ஸ்கிரீன் சிறியதாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் நினைக்கும் ஆப்ஷனு க்குச் செல்லாமல்,

தவறுத லாக வேறு ஆப்ஷனு க்குப் போய் விடும் வாய்ப் பிருக்கிறது.
ஸ்பைசி கோபி மஞ்சூரியன் ரெசிபி !
ஸ்கிராச் கார்டு, பவுச் போன்றவை இல்லாமல் டச் போனைப் பயன் படுத்துவது பாதுகாப்பானது அல்ல.

காதில் வைத்து பேசும் போது வியர்வை பட்டாலோ, மழைக் காலத்தில் சிறிது

தண்ணீர் பட்டால் கூட டச் வீணாகி உச் கொட்டவேண்டிய தாகி விடும்.

கீழே போட்டு விட்டால் அவ்வளவு தான்! சில பேர் தங்களின் கோபத்தை போனில் காட்டு வார்கள்.

அவர்களுக்கு டச் போன் நிச்சயமாக ஒத்து வராது. பெரிய ஸ்கிரீன் என்பதால் பேட்டரியின் லைஃப் குறைவாக இருக்கும்.

டச், டிஸ்ப்ளே போய் விட்டாலே மொத்த டச் பேடையும் மாற்ற வேண்டியது வரும்.
கேரன்டி பீரியட் முடிந்து விட்டால் இதற்கு ஆயிரக் கணக்கில் செலவாகும்.

எனவே எதையும் பாதுகாப்பா கக் கையாள் பவர்களு க்கு மட்டுமே ஏற்ற போன் இது.
மினி தோசை ரெசிபி !
பார்க்க ஸ்டைலாக இருக்கிறது என்பதற்காக டச் போனை வாங்காமல் அதிலிரு க்கும்

பிரச்னை களையும் அறிந்து உங்கள் பயன் பாட்டைப் பொறுத்து, யோசித்து வாங்கவும்.
டச் ஸ்கிரீன் மொபைல் ! டச் ஸ்கிரீன் மொபைல் ! Reviewed by Fakrudeen Ali Ahamed on December 21, 2018 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 EThanthis All rights reserved
close