ஆக்டா கோர் / குவாட் கோர் சொல்வது என்ன?
புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..
லைக் பண்ணுங்க... "
மொபைல் போன் ஒன்றை வாங்கும் முன் அதன் பல கட்டமைப்பு வசதிகள் குறித்து மற்ற போன் களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் பழக்கம் பரவி வருகிறது.
இதில் முக்கியமாக போனில் உள்ள ப்ராசசரின் இயக்க தன்மைகள் குறித்து நாம் அறிந்து கொள்ள விரும்பு கிறோம்.
அந்த வகையில், மொபைல் போன் நிறுவனங்களும், தங்கள் போனில் உள்ள ப்ராசசர் குவாட் கோர்
அல்லது ஆக்டா கோர் (நான்கு கோர் மற்றும் எட்டு கோர்) வேகத்தன்மை உடையது என்று அறிவிக் கின்றனர்.
நாம், உடனே, நான்கைக் காட்டிலும், எட்டுதானே அதிக மதிப் புடையது என்ற எண்ணத்தில்,
ஆக்டா கோர் ப்ராசசரே சிறந்தது என்ற முடிவிற்கு வருகிறோம். இது அனைத்து போன்களு க்கும் பொருந்தாது.
இதன் அடிப்படை யில் ப்ராசசரின் இயக்க தன்மை குறித்து முடிவெடுப்பது தவறாகும்.
அது குறித்து இங்கு பார்க்கலாம். தொழில் நுட்ப விவகாரங்கள் என்றை க்கும் நம்மை குழப்பத்தில் ஆழ்த்துவ தாகவே உள்ளன.
எனவே, வியாபாரத்தில் உள்ள ஒரு நிறுவனம், தொழில் நுட்ப விஷயங் களை எளிமையாக மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.
அப்போது தான், வாடிக்கை யாளர் ஒருவர், என்ன வாங்குவது என்ற முடிவினைச் சரியாக எடுக்க முடியும்.
“அதிக எண்ணி க்கையில் தரப்படுவது தான் சிறந்தது” என்பது எந்த ஒரு சராசரி மனிதனும் எண்ணக் கூடியதே.
ஆனால், அது எல்லா நேரத்திலும் சரியாக இருக்காது.
கேமராவைப் பொறுத்த வரை, இதே போல மெகா பிக்ஸெல் திறன் குறித்து கணிக்கிறோம்.
ஒரு கேமராவின் மெகா பிக்ஸெல் திறன் அதிகமாக இருப்ப தாலேயே,
அதன் வழி எடுக்கப்படும் படங்கள், மிகச் சிறந்தவை யாக இருக்கும் என்ற முடிவிற்கு வர முடியாது.
அதே போல, அதிக கோர் இயக்கம் இருப்ப தாலேயே ஒரு ப்ராசசர் மிகச் சிறந்ததாக இருக்க முடியாது.
ப்ராசசர் ஒன்றில் ஒவ்வொரு கோர் பகுதியும், ஒரு மையச் செயலக மாகச் செயல்படும்.
அதனால், அதிக எண்ணிக்கை யில் கோர் பகுதியை ப்ராசசரில் இணைப்ப தால்,
அது வேகமாகச் செயல்படும் என்று எதிர் பார்க்க முடியாது. அனைத்து கோர் பிரிவுகளும் இயங்கும் வகையில்,
சாப்ட்வேர் அப்ளிகேஷன் வடிவமைக் கப்பட்டிருந் தாலே, அது சிறந்ததா கவும் வேகமா கவும் செயல்பட வழி தரும்.
எடுத்துக் காட்டாக, எட்டு சமையல் காரர்கள் ஒரு குறிப்பிட்ட உணவினைத் தயாரிப்பதில் ஈடுபட்டால்,
அனைவரின் சக்தியும், அந்த உணவினைத் தயாரிப்பதில் ஈடுபடும் வகையில் நாம் அவர்களை நிர்வாகம் செய்திட வேண்டும்.
இல்லை எனில், பலரின் உழைப்பின் பலன் அந்த உணவின் தயாரிப்பில் இருக்காது.
எட்டு கோர் ப்ராசசரின் செயல் தன்மையைப் பல காரணிகள் நிச்சயிக் கின்றன.
அந்த ப்ராசசரின் செயல் வேக இடைவெளி, (frequency), அனைத்து கோர் இயக்கங் களையும்
திறமை யாகச் செயல் படுத்தும் சாப்ட்வேர், சிப் வடிவமை க்கப்பட் டுள்ள கட்டமைப்பு
ஆகிய அனை த்தும் இணைந்தே ப்ராசசரின் செயல் தன்மையை உறுதி செய்கின்றன.
இவற்றில், ப்ராசசர் ஒன்றின் செயல் தன்மையை முழுமை யாகப் பெறவிடாமல் கெடுப்பது
அதனை இயக்கும் சாப்ட்வேர் தொகுப்பாகத் தான் இருக்கும். எடுத்துக் காட்டாக,
மொபைல் சாதனங் களில் இயக்கப் படும் விளை யாட்டுகளை எடுத்துக் கொண்டால்,
அந்த கேம் இயங்க இயக்கப்படும் சாப்ட்வேர், எட்டு கோர் பிரிவு களையும்,
ஒரே நேரத்தில் முழு திறனையும் காட்டும் வகையில் அமைக்கப் பட்டிருக்கும்.
ஆனால், அனைத்து கேம்ஸ் களிலும் இது போல அமைக்கப் பட்டிரு க்கும் என எதிர் பார்க்க முடியாது.
அது போலவே, அனைத்து அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்பு களும், ப்ராசசர் சிப் ஒன்றின்
எட்டு பிரிவு களையும் வேலை வாங்கும் வகையில் வடிவமைக்கப் பட்டிருக்கும் என்று எதிர் பார்க்க முடியாது.
மொபைல் போன் களுக்கான ப்ராசசர் சிப்கள் பெரும் பாலும் ஏ.ஆர்.எம். (ARM) நிறுவனத் தால் தயாரிக் கப்படுகின் றன.
ஏனென்றால், இந்நிறுவனம் Qualcomm, Samsung, NVIDIA, and Mediatek போன்ற நிறுவனங் களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு,
அந்நிறு வனங்களு க்கு சிப் எந்த வடிவமைப்பில் இருக்க வேண்டும் என்பதனை வழங்கி
அதற்கேற்ப சிப்களைத் தயாரிக்க அனுமதி கொடுத்து பெற்றுக் கொள்கிறது.
அடுத்த இடத்தில் இருப்பது இண்டெல். ஏ.ஆர்.எம். நிறுவனம் தான், முதன் முதலில்,
இரண்டு குவாட் கோர் ப்ராசசர் களை (மொத்தத்தில் எட்டு) கொண்டு சிப் வடிவமை ப்பதில் ஈடுபட்டது.
இவற்றில் ஒரு குவாட் கோர் பிரிவு அதிக பட்ச செயல் திறன் தர பயன் படுத்தப்படும்.
இன்னொரு குவாட் கோர் பிரிவு, பேட்டரி, உஷ்ணம் போன்ற வற்றைக் கண் காணிக்கும்.
பொதுவாக இந்த இரண்டு குவாட் கோர் பிரிவுகளும் தனித்தனியே தான் செயல்படும்.
இன்றைக்கு சந்தைக்கு வரும் பெரும் பாலான ஸ்மார்ட் போன்கள். ஏ.ஆர்.எம்.
தந்த கட்டமைப்பில் குவால்காம், சாம்சங், மீடியாடெக் போன்ற நிறுவனங்கள் தயாரித்த சிப்களுடன் தான் நமக்குக் கிடைக் கின்றன.
அசூஸ் மற்றும் லெனோவா போன்ற, இண்டெல் நிறுவனத்துடன் தாங்கள் தயாரிக்கும்
கம்ப்யூட்டர் களுக்கு ஒப்பந்தம் மேற்கொண் டுள்ள நிறுவனங்கள் மட்டுமே,
இண்டெல் நிறுவன த்தின் ப்ராசசர் களைப் பயன் படுத்து கின்றன. இண்டெல், குவாட் கோர் ப்ராசசர் களுடன் நிறுத்திக் கொண்டது.
ஏ.ஆர்.எம். நிறுவனம் இரண்டு குவாட் கோர் அடங்கிய ப்ராசசர் களைக் கொண் டுள்ளது.
இண்டெல் லேப்டாப் கம்ப்யூட்டர் களுக்கு, தனியே ஒரு அமைப்பில் வடிவமை க்கப் பட்ட ப்ராசசர் களைக் கொடுத்து வருகிறது.
எனவே, ஆக்டா மற்றும் குவாட் கோர் ப்ராசசர் களிடையே செயல் திறன் வேறுபாடு அவை குறிப்பிடும் எண்களில் இல்லை.
அதனால் தான், சில மொபைல் நிறுவனங்கள் தங்கள் மொபைல் போன்களில் உள்ள
ப்ராசசர் சிப் குறித்து குறிப்பி டுகையில், அவை “உண்மை யான ஆக்டா கோர் (“True octacores”,)” எனக் குறிப்பிடுகின்றன.
அப்படிக் கூறுவதன் மூலம், தங்களுடைய சிப்களில், எட்டு கோர் பிரிவுகளும்
முழுமை யான சக்தியைத் தரும் வகையில் இயக்கப் படுவதாக அறிவிக் கின்றன.
ஆனால், இதில் என்ன வேடிக்கை என்றால், பெரும் பாலான அப்ளிகேஷன் கள் முழுமை யான பலன் தரும் வகையில்
இயங்க, எட்டு கோர் பிரிவுகளும், ஒரு ப்ராசசரில் இயங்கத் தேவை இல்லை என்பதே.
அண்மையில் வந்திருக்கும் சில ஆண்ட்ராய்ட் விளை யாட்டுகள் கூட குவாட் கோர் ப்ராசசர்களில் சிறப்பாக இயங்கு கின்றன.
ஆனால், இவை இயங்க நல்ல கிராபிக்ஸ் ப்ராசசர் துணை இருக்க வேண்டும்.
குவாட் மற்றும் ஆக்டா கோர் ப்ராசசர் களுக்கிடையே உண்மை யிலேயே இயக்க திறன்
வேறுபாடு உள்ளதா என்ற சர்ச்சை இருந்தாலும், இந்த மாயத் தன்மையை பல மொபைல் போன் நிறுவனங்கள்,
வாடிக்கை யாளர்களைக் கவர பயன்படுத்திக் கொள்கின்றன என்பதே உண்மை.
எனவே, வாங்க இருக்கும் மொபைல் போன் திறனை, அதன் ஆக்டா அல்லது குவாட் கோர் ப்ராசசரைக் கொண்டு மட்டும்
முடிவு செய்திட வேண்டாம். மற்ற வசதிகளைத் தரும் ஹார்ட் வேர் பாகங்களும் முக்கிய மானவையே.
எனவே, மொத்த செயல் திறனைக் கொண்டு தான், மொபைல் போன் ஒன்றை எடை போட வேண்டும்.
இப்போ தெல்லாம், இணைய தளங்களில், பலர் மொபைல் போன் திறன் குறித்தும், குறிப்பிட்ட போன் ஒன்றை,
அதே ஹார்ட்வேர் அமைப்பில் உள்ள மற்ற போன்களுடன் ஒப்பிட்டும் தகவல் களைப் பதிந்து வழங்கு கின்றனர்.
இவற்றைப் படித்து நாம் மொபைல் போன் ஒன்றின் திறனை முடிவு செய்திடலாம்.