போன் உளவாளியை எப்படிக் கண்டு பிடிப்பது? - EThanthis

Recent Posts


போன் உளவாளியை எப்படிக் கண்டு பிடிப்பது?

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
அசிங்க வியாபாரம்!

‘‘தங்கள் போனில் இப்படிப் பட்ட ஆப் இருக்கிறதா என்பதைப் பெண்கள் எச்சரிக்கை யுடன் கவனிக்க வேண்டும். 
> ஏனெனில், இதில் நடக்கும் இன்னும் பல விஷயங் களை என்னால் வெளிப் படையாகச் சொல்லவே முடியாது. 

இந்த ஸ்பை ஆப்களின் மிக முக்கிய அபாயமே, இதைக் கொண்டு போனின் கேமராவை இயக்க முடியும் என்பது தான்.

பல பெண்களின் அந்தரங் கங்களை அவர்களு க்கே தெரியாமல் படம் பிடித்து, அதை வியாபாரம் செய்வது பெரியளவில் நடக்கிறது. 

இவற்றை வைத்து, பெண்களை மிரட்டும் சம்பவங் களும் நடந்துள்ளன.

இது குறித்து போலீஸில் புகார் கொடுக்கக் கூட பெண்கள் முன் வருவதில்லை. 

அவர்களால் இது குறித்த சரியான ஆதாரங் களைத் திரட்ட முடிவ தில்லை என்பது ஒரு பிரச்னை. அப்படி ஒரு புகார் கொடுத்தால், 

சமூகத்தில் தங்களின் பெயர் பாதிக்க ப்படும் என்கிற பயம் இன்னொரு பிரச்னை. 

இதனால், வெளியில் சொல்ல முடியாமல் பல பெண்கள் தவிக் கிறார்கள்’’ என்கிறார், ‘தமிழ் ஆண்ட்ராய்டு பாய்ஸ்’ குழுவைச் சேர்ந்த வினோத்.

வெறும் 4,000 ரூபாய்!

நமக்கு வந்த ஒரு குறுந்தகவ லில் இருந்த நம்பரைக் கொண்டு சென்னை ஈக்காட்டுத் தாங்கலில்

இருக்கும் ஒரு ‘ஸ்பை ஆப்’ நிறுவன த்தைத் தொடர்பு கொண்டு பேசினோம். 

முதலில் பேசிய ஒரு பெண், அந்த ஆப்பின் சிறப்புகளை விளக்கி விட்டு,

‘‘ஒரு மொபைலில் இதை இன்ஸ்டால் செய்ய 20,000 ரூபாய் ஆகும்’’ என்று சொன்னார். 

இந்த ‘ஆப்’பின் சட்ட அனுமதிகள் குறித்துக் கேட்டதற்கு, ‘‘எங்கள் நிறுவன த்தின் தலைவர் உங்களிடம் அதை விளக்குவார்’’ என்று 

சொல்லிட்டு ‘கட்’ செய்தார். பின்னர், பல தடவை அந்த எண்ணுக்கு அழைத்துப் பார்த்தும், அது ‘ஸ்விட்ச் ஆஃப்’ என்றே வந்தது.

டெல்லியில் இருக்கும் ஒரு நிறுவன த்துக்குத் தொடர்பு கொண்டு பேசினோம். ‘‘எங்களுடையது அரசு பதிவு பெற்ற நிறுவனம் தான். 
சட்ட ரீதியில் எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. வேண்டு மென்றால், நீங்கள் இதை வாங்கி உபயோகிப்பது குறித்து 

உங்கள் சட்ட ஆலோ சகரிடம் கேட்டுக் கொள்ளுங்கள். எங்களிடம் 4,000 ரூபாயி லிருந்து பேக்கேஜ்கள் தொடங்கு கின்றன’’ என்று சொன்னார்.

எப்படிக் கண்டுபிடிப்பது?

‘ஸ்பை ஆப்’கள் நமக்கே தெரியாத பெயர்களில் நம் மொபைலில் இன்ஸ்டால் செய்யப் பட்டிருக்கும். ‘Settings’ என்ற பெயரிலோ, ‘Tools’ என்ற 

பெயரிலோ இந்த ஆப் இன்ஸ்டால் ஆகி யிருந்தால், உங்களுக்கு எப்படி சந்தேகம் வரும், சொல்லுங்கள்.

சில அறிகுறி களை வைத்து உங்கள் போனில் ஸ்பை ஆப் இருப்பதை உறுதி செய்யலாம்.

* உங்கள் போனை ஆஃப் செய்யும் போது வழக்கத்தை விட அதிக நேரம் எடுத்துக் கொள்ளும்; ஆஃப் ஆன பிறகும் சில நொடிகள் அதன் திரை ஒளிரும்.

* நீங்கள் பயன்படுத்தாமலே திடீரென மொபைலின் திரை ஒளிரும்.

* எந்தப் பயன்பாடும் இல்லாமலே திடீரென போன் சூடாகும்.

* வழக்கத்தை விட வேகமாக மொபைலின் பேட்டரி சார்ஜ் தீர்ந்து விடும்.

* மொபைல் டேட்டா பயன்பாடும் வழக்கத்தை விட அதிகமாகி யிருக்கும்.

* உங்களுக்கு வரும் மெசேஜ்களை நீங்கள் படிக்கா மலேயே, தானாகவே படிக்கப் பட்ட

மெசேஜாக மாறி யிருக்கும். அதை ‘ஸ்பை ஆப்’ பயன்படுத்தி யாரோ படித்தி ருப்பார்கள்.

* போன் அழைப்பு களைப் பேசும் போது பின்னணியில் தேவை யற்ற சத்தங்கள் எழும்.

* உங்களுடைய ‘Location’ உங்களுக்கே தெரியாமல் ‘ஆன்’ ஆகியிருக்கும்.
உங்கள் இருப்பிட த்தைக் கண்காணிப் பதற்காக மொபைலின் ஜி.பி.ஆர்.எஸ் அதிக மாகப் பயன் படுத்தப் பட்டிருக்கும்.

இது போன்ற பிரச்னைகள் இருந்தால், மொபைலில் எந்த ஆப் அதிக டேட்டாவைப்

பயன் படுத்துகிறது என்று பார்த்து ‘ஸ்பை ஆப்’ இருப்பதை உறுதி செய்யலாம். 

‘ஆன்டி வைரஸ்’ சாஃப்ட்வேர்கள் போலவே ‘ஆன்டி ஸ்பை வேர்’களும் கிடைக் கின்றன. 

இதற்கு உதவ இணைய தளங்களும் இருக்கின்றன. நம்பிக்கை யானதுதானா என்று பார்த்துப் பயன் படுத்த வேண்டும்.
போன் உளவாளியை எப்படிக் கண்டு பிடிப்பது? போன் உளவாளியை எப்படிக் கண்டு பிடிப்பது? Reviewed by Fakrudeen Ali Ahamed on December 20, 2018 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 EThanthis All rights reserved
close