PHP என்றால் என்ன தெரியுமா உங்களுக்கு? - EThanthis

Recent Posts


PHP என்றால் என்ன தெரியுமா உங்களுக்கு?

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
PHP என்பது ஒரு Server Side Scripting language. எளிமை யாக சொல்ல வேண்டு மானால் உங்களு க்கு ஒரு புத்தகம் தேவைப் படுகிறது. 
அதை இணைய மூலம் வாங்குவ தற்காக ஏதோ ஒரு பதிப்பக த்தின் இணைய தளத்திற்கு செல்கிறீர்கள்.

அந்த பதிப்பக த்தின் இணைய தளம் PHP மூலம் உருவாக் கப்பட்ட தெனில்.

அந்த இணைய தளத்தில் செய்யும் அனைத்து வேலை களும் உங்களுடைய கணினி யில் (Client Side) Process ஆகாமல்,

பதிப்பக த்தின் இணைய தளம் எந்த வெப் சர்வரில் (Server Side) இருக்கிறதோ அங்கு Process செய்யப் பட்டு உங்களுக்கு தேவையான விபரங் களை இணைய தளம் கொடுக்கும்.

அவ்வாறு Server இல் செயல் படுத்தப் படும் நிரல்கள் Server Side Scripting Language எனப்படும்.

PHP நிரல்கள் அனைத்தும் Server Side இல் Process செய்யப் படுவதால். PHP ஒரு server side scripting language ஆகும்.

Ruby, Python, Perl ஆகிய மொழிகளும் Server Side Scripting Language ஆக பயன் படுத்தப் படுகிறது.

அது போலவே PHP யும் இருந் தாலும், PHP சில தனிச் சிறப்பு களைக் கொண் டுள்ளது.

அது என்ன வெனில் நம்முடைய இணைய தள உருவாக்க வேலை களை எளிமை யாக செய்வ தெற்கென நிறைய Extension களை வைத்தி ருக்கிறது.

குறிப்பாக Database இல் தகவல் களை சேமிப்ப தற்கும், Database இல் இருக்கும் தகவல் களை

இணைய தளத்தின் மூலம் பெறுவ தற்கும், இணைய தளங்களை Dynamic ஆக வடிவமை க்கவும்,

Content களை திறம்பட கையாள் வதற்கும் மிகவும் எளிமை யான வழிகளை PHP கொண் டுள்ளது.
அதனால் மேற் காணும் வேலை களை நாம் மற்ற மொழி களில் செய்வதை விட PHP யில் எளிமை யாக செய்யலாம். 

PHP -யால் என்னென்ன வெல்லாம் செய்ய முடியும்?

Dynamic Page Content களை உருவாக்க முடியும்.

Web Server இல் கோப்பு களை உருவாக் குதல், அழித்தல், நீக்குதல், திறத்தல், எழுதுதல் ஆகியவை களை செய்ய முடியும்.

படிவத்தின் தகவல் களை (Form Data) சேகரிக்க முடியும்.

Cookies களை அனுப்ப மற்றும் பெற முடியும்.

தகவல் தளத்தில் (Database) தகவல் களை சேர்த்தல், நீக்குதல், மாற்றுதல் ஆகியவை களை செய்ய முடியும்.
பயனர்க ளினுடைய (Users) செயல் பாடுகளை கட்டுப் பாட்டிற் குள் வைக்க முடியும்.

தகவல்களை Encrypt செய்ய முடியும்.

HTML ஆக மட்டு மில்லாமல், Images, PDF Files, Flash Movies XML, XHTML ஆகிய வடிவங் களிலும் வெளியீடு களை கொண்டு வர முடியும்.

ஏன் PHP?
பல்வேறு இயங்கு தளங் களில் PHP – ஐ இயக்க முடியும்.
(உதாரணமாக. Windows, Linux, Unix, Mac OS X, etc…)

இன்றை க்கு பயன் பாட்டில் உள்ள அனைத்து Server (Apache, IIS, etc ) களுடனும் ஒத்து இயங்கக் கூடியது.

MySQL, SQLite, Postgres, Oracle, MS SQL போன்ற அனைத்து தகவல் தளங்க ளையும் PHP ஆதரிக் கிறது.

PHP என்பது அனைவருக்கும் இலவசம். PHP யினுடைய அதிகாரப் பூர்வ மான இணைய தளத்தில் (www.php.net) இருந்து

அனை வரும் இலவச மாகவே தர விறக்கம் செய்து கொள்ளலாம்.

கற்றுக் கொள்ள எளிமை யான மொழி யாகவும், Server Side இல் சிறப்பாக இயங்க்க கூடிய மொழி யாகவும் PHP இருக்கிறது.
PHP என்றால் என்ன தெரியுமா உங்களுக்கு? PHP என்றால் என்ன தெரியுமா உங்களுக்கு? Reviewed by Fakrudeen Ali Ahamed on December 13, 2018 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 EThanthis All rights reserved
close