இனி மெசேஜ் அனுப்புவதுக்கு குட்பை - வருகிறது RCS மெசேஜிங் !
புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..
லைக் பண்ணுங்க... "
நாம் இன்றைக்கு பயன்படுத்திக் கொண்டிரு க்கும் SMS சேவைகள் அனைத்தும் முதன்முதலில் வணிக ரீதியாக SMS சேவை தொடங்கியது 1992-ல்.
கடந்த 26 ஆண்டுகளில் SMS சேவையில் எந்தவொரு பெரிய மாறு பாடுகளும் இல்லை.
அப்போது இருந்த அதே 160 கேரக்டர்கள் தான். அதே எழுத்து வடிவம் தான்.
அதற்குப் பிறகு வந்த MMS சேவையும் பெரியளவில் பயன்பாட்டில் இல்லை.
மாறாக வாட்ஸ்அப், மெசெஞ்சர் போன்ற இன்ஸ்டன்ட் மெசேஜிங் ஆப்கள் அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டு விட்டன.
இன்றைக்கு வங்கி, ஷாப்பிங் போன்ற வணிக ரீதியான சேவைக ளுக்கு மட்டும் தான்
இந்த SMS சேவைகள் பயன்படுகிறது. மற்றபடி அனைத்து க்கும் வாட்ஸ்அப் தான்.
இந்த வாட்ஸ் அப் வருகையால், SMS மூலம் வருமானம் பார்த்து வந்த தொலைத் தொடர்பு நிறுவனங்கள் பெரிய அளவில் பாதிக்கப் பட்டன.
இதற்கு தீர்வாக RCS எனப்படும் Rich Communication Service ஐ பயன்படுத்த கூகுள் முடிவு செய்துள்ளது.
RCS- என்பது வெறும் எஸ்எம்எஸ் மட்டுமே இருக்காது.
வாட்ஸ்அப் போலவே இதிலும் படங்கள் அனுப்பலாம்; வீடியோக்கள் ஷேர் செய்யலாம்;
க்ரூப் சாட், எமோஜி, ஸ்டிக்கர்கள், QR கோடு போன்ற அனைத்தை யும் பயன்படுத்த முடியும்
கூடவே உதவுவதற் காக கூகுள் அசிஸ்டன்ட், இன்ஸ்டன்ட் ரிப்ளை செய்ய AI, நாம் சாட் செய்யும் ஆன் லைனில் இருக்கிறாரா எனப் பார்க்க உதவும் வசதி,
நிறுவனங்கள் அனுப்பும் மெசேஜை ‘Verified’ அக்கவுன்ட்கள் மூலம் உறுதிப்ப டுத்திக் கொள்ளும் அம்சம் என அனைத்தும் இருக்கும்.
இத்துடன் வீடியோ கால் வசதியும் இணைக்கப் படலாம்.
இது அனைத்தும் நாம் தற்போது SMS அனுப்ப பயன் படுத்திக் கொண்டிரு க்கும் ‘Messages’ ஆப்பிலேயே செய்ய முடியும்.
இதனை சாத்திய மாக்க வேண்டும் என்றால், இணைய வசதியும் அனைத்து தொலைத் தொடர்பு
நிறுவனங் களின் ஒத்துழைப்பும் தேவை. இந்த வசதி தற்போது ஐமெசேஜ் ஆப்பில் உள்ளது.
ஆனால் ஆண்ராய்டு தளத்தில் இதுவரை இல்லை. இதை கொண்டு வரப் போகிறது கூகுள்.
இதை சாத்திய மாக்கிட கூகுள் 55 தொலை தொடர்பு நிறுவனங் களுடன் கைகோர்த்து உள்ளது.
‘Chat’ என்ற பெயரில் RCS வசதியை கூகுள் நிறுவனம் தனது ஆண்ராய்டு ஓஎஸ்இ -ல் கொண்டு வர போகிறது.
இதற்காக இந்தியாவில், ஏர்டெல், ஜியோ ஆகிய நிறுவனங் களுடன் இணைந்து செயல்பட கூகுள் முடிவு செய்துள்ளது.
இது தவிர சாம்சங் உள்படஸ11 நிறுவனங்கள் வசதி ஏற்படுத்தும் வகையில் மொபைலை உருவாக்க வும் ஒப்புக் கொண்டுள்ளன.
எனவே இனி சாதாரண மெசேஜ் அனுப்புவது முடிவுக்கு வரும் என தெரிகிறது.
எனினும் இந்தியாவில் இத்திட்டம் முழுமையாக வருவதுக்கு சி காலம் பிடிக்கும்.
கூகுள் இந்த திட்டத்தில் சருக்காமல் லாபம் அடையும் என எதிர் பார்க்கப் படுகிறது