நம் ஆதார் எங்கெங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை அறிய? - EThanthis

Recent Posts


நம் ஆதார் எங்கெங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை அறிய?

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
நாம் அன்றாட வாழ்வில் எந்த ஒரு அரசாங்க த்தைச் சார்ந்த வேலை செய்யவும் அல்லது எந்தத் துறையிலும் ஆதார் அட்டை இன்றியமை யாததாக இருக்கிறது. 

ஆனால், ஆதார் தகவல்கள் எளிதில் திருடப்பட்டு விடலாம் எனவும் சிலர் எச்சரிக் கின்றனர். அதன் காரணமாகவே வெளியில் ஆதார் அட்டையைக் கொடுப்பதற்கு சிலர் பயப்படு கிறார்கள். 

நம் ஆதார் அட்டை இதுவரை எத்தனை முறை எங்கு எங்கு பயன்படுத்தப் பட்டது என்பதைக் குறித்து நிறைய பேருக்குக் குழப்பம் இருக்கும். அது மட்டு மில்லாமல் இதை எப்படித் தெரிந்து கொள்வது என்ற கேள்வி பல பேருக்கு மனதில் இருக்கும். 

பல்வேறு அங்கீகாரங் களுக்காக வும், சரி பார்ப்பு நோக்கங் களுக்காக வும், உங்கள் ஆதார் அட்டையைப் பயன் படுத்தினீர்கள் எனில், உங்கள் தனியுரிமை குறித்து நீங்கள் கவலைப்பட வேண்டியது அவசியம் தான். 

கடந்த 6 மாதங்களில் உங்கள் ஆதார் எண் எங்கு எங்கு பயன்படுத்தப் பட்டது என்பதைத் தெரிந்து கொள்ள ஒரு வழி உள்ளது. 

அதன் மூலம் எங்கெங்கு பயன்படுத் தினீர்கள் என்பதைத் தெரிந்து கொண்டு, உங்கள் ஆதார் அட்டை உபயோகத்தில் ஏதேனும் முரண்பாடு இருந்தால், UIDAI இணையத் தளத்தில் புகார் கொடுக்க லாம். 

உங்கள் ஆதார் எங்கு எங்கு பயன்படுத்தப் பட்டது என்பதை சரிபார்ப்பது எப்படி? UIDAI வெப்சைட் சென்று ஆதார் ஆத்தன்டிகேசன் ஹிஸ்டரி (Aadhaar Authentication History) பக்கத்து க்குச் செல்ல வேண்டும். 

அங்கு உங்களின் 12 டிஜிட் ஆதார் எண் மற்றும் அங்கு கொடுக்கப் பட்டிருக்கும் செக்யூரிட்டி கோடையும் (Security Code) பதிவு செய்ய வேண்டும் OTP ஜெனரேட் ஆப்சனில் க்ளிக் செய்ய வேண்டும். 

இப்பொழுது உங்கள் ஆதார் அட்டையில் இணைக்கப் பட்டிருக்கும் கைபேசி எண்ணிற்கு OTP வரும். OTP -ஐ பெறுவதற் காக, உங்கள் கைபேசி எண்ணை UIDAI இணையத் தளத்தில் சரிபார்க்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். 

OTP – ஐப் பதிவு செய்த பிறகு அங்கீகரிப்பு வகை, தேர்வு தேதி ரேஞ்ச், பதிவு எண்ணிக்கை (அதிக பட்ச பதிவு 50) மற்றும் OTP போன்ற தேர்வுகளுடன் ஒரு பக்கம் திறக்கும். 

நீங்கள் தேடும் அனைத்து விஷயங் களையும் தேர்வு செய்ய வேண்டும் மற்றும் தேதி வரம்பைத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் அதிகபட்ச காலமாக ஆறு மாதங்களு க்கு உண்டான தகவல் களைப் பெறலாம். 

இப்போது, ​​நீங்கள் பார்க்க விரும்பும் பதிவுகளின் எண்ணிக் கையைப் பதிவு செய்து , OTP – ஐப் பதிவு செய்து சப்மிட் செய்ய வேண்டும். தேதி, நேரம் மற்றும் ஆதார் அங்கீகரிப்புக் கோரிக்கை களின் வகை ஆகியவற்றை நீங்கள் இப்போது பார்ப்பீர்கள். 

இந்தக் கோரிக்கை களை யார் செய்தார் என்பதை இந்த பக்கம் காண்பிப்ப தில்லை என்றாலும், கடந்த 6 மாதங்களில் உங்கள் ஆதார் எங்கே பயன்படுத்தப் பட்டது என்பதையும், 

உங்கள் விபரங்கள் உங்கள் அனுமதி இல்லாமல் உபயோகப் படுத்தப் பட்டு இருக்கிறதா என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
நம் ஆதார் எங்கெங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை அறிய? நம் ஆதார் எங்கெங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை அறிய? Reviewed by Fakrudeen Ali Ahamed on January 02, 2019 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 EThanthis All rights reserved
close