ரயில் பயணத்தை லைவ் ஆக வாட்ஸ் அப் மூலம் தெரிந்து கொள்ளலாம், எப்படி? - EThanthis

Recent Posts


ரயில் பயணத்தை லைவ் ஆக வாட்ஸ் அப் மூலம் தெரிந்து கொள்ளலாம், எப்படி?

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
இந்திய ரயில்வே, தனது பயணங் களை அதிகப் பாதுகாப்பானதாக மாற்ற ஏராளமான முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. முன்னதாக 139 என்ற எண்ணை அழைத்து ரயில் எங்கே வந்து கொண்டிருக்கி றது என்ற தகவலைப் பயணிகள் பெற்றுக் கொண்டிருந்தனர். 

ஆனால் ஒரே எண்ணை, ஒரே நேரத்தில் ஏராளமானோர் அழைத்ததால், சர்வர் பிரச்சினை ஏற்பட்டு 139-ஐ உடனடியாகத் தொடர்பு கொள்ள முடியாத நிலை இருந்தது.

தற்போது அனைத்துமே இணைய மயமாகி விட்ட சூழலில், ரயில்வே வாட்ஸ் அப் மூலம் ரயில் பயண சேவையை லைவ் ஆக உடனுக்குடன் அளிக்க ஆரம்பித் துள்ளது.

எப்படி இந்த சேவையைப் பெறுவது?

* முதலில் 7349389104 என்ற எண்ணை மொபைலில் சேமித்துக் கொள்ளுங்கள்.
* வாட்ஸ் அப் செயலிக்குச் செல்லுங்கள்.

* வாட்ஸ் அப்பில் நீங்கள் சேமித்து வைத்துள்ள 7349389104 எண்ணிற்கு நீங்கள் தகவல் பெற விரும்பும் ரயிலின் எண்ணை அனுப்புங்கள்.

* அடுத்த 2 நொடிகளில் உங்கள் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி வரும். அதில் ரயில் எண், அதன் பெயர், எந்தத் தேதியில் ரயில் கிளம்பியது, எந்த ரயில் நிலை யத்தைத் தாண்டி யுள்ளது, 

அடுத்த ரயில் நிலையத்தை எப்போது வந்தடையும் உள்ளிட்ட தகவல்கள் அடங்கி இருக்கும்.

அது மட்டுமல்லாமல், 'நான் உங்களுக்கு சிறந்த சேவையை அளித்திருக் கிறேனா?' என்று கேள்வி எழுப்பபட்டு, கருத்தும் கேட்கப் படுகிறது. இந்த சேவையை ரயில்வே துறை, 'மேக் மை ட்ரிப்' உடன் இணைந்து அளிக்கிறது.
இதனால் பயணிகள் வாட்ஸ் அப் மூலமாகவே நமக்குத் தேவையான ரயில் பயணம் குறித்த அனைத்து விவரங் களையும் லைவ் ஆகத் தெரிந்துகொள்ள முடியும்.
ரயில் பயணத்தை லைவ் ஆக வாட்ஸ் அப் மூலம் தெரிந்து கொள்ளலாம், எப்படி? ரயில் பயணத்தை லைவ் ஆக வாட்ஸ் அப் மூலம் தெரிந்து கொள்ளலாம், எப்படி? Reviewed by Fakrudeen Ali Ahamed on January 06, 2019 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 EThanthis All rights reserved
close