விதிமீறளைக் கண்காணிக்கும் `Police Eye' ஆண்ட்ராய்டு செயலி - கோவை போலீஸின் முயற்சி !
புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..
லைக் பண்ணுங்க... "
போக்குவரத்து விதிகளை மீறுபவர்களோடு சாலையில் சண்டையிட்டு மல்லுக் கட்டிக் கொண்டிருக்க வேண்டிய அவஸ்தை கோவை மக்களுக்கு இனி இல்லை.
விதி மீறல்களில் ஈடுபடுபவரைத் தண்டிப்ப தற்காக பிரத்யேகமாக உருவாக்கப் பட்டுள்ளது `police e eye' ஆப்.
நாள்தோறும் நிகழும் விபத்துகளு க்கும், போக்குவரத்து நெரிசல்களு க்குக் காரணம் போக்குவரத்து விதிகளை மீறுவது தான். ஒவ்வொரு வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை மீறாமல் கடைப் பிடிப்பாராயின் விபத்துகளை பெருமளவில் குறைக்க முடியும்.
இதைக் கருத்தில் கொண்டு போக்குவரத்து விதிகளை மீறுபவர் களைக் கண்காணிக்கும் வகையில் கோவையில் 'police e eye' என்ற ஆண்ட்ராய்ட் ஆப் தனியார் மென்பொருள் நிறுவனத்தால் உருவாக்கப் பட்டுள்ளது.
இந்த ஆப்-ஐ துவக்கி வைத்த கோவை போலீஸ் கமிஷனர் சுமித்சரண் கூறுகையில்,``இந்த ஆப் மூலம் போக்குவரத்து விதி மீறல்களை மக்கள் எங்கு பார்த்தாலும் உடனடியாக போலீஸுக்கு தகவல் தெரிவிக்க முடியும்.
ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டுபவர்கள், இரு சக்கர வாகனத்தில் இரண்டு பேருக்கு மேல் செல்பவர்கள், போக்கு வரத்துக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் வாகனத்தை ஓட்டுபவர்கள்… என எங்கு போக்குவரத்து விதி மீறல்கள் நடந்தாலும் நீங்கள் சாலையில் இறங்கி அவரோடு சண்டை போட வேண்டிய அவசியம் இல்லை.
உடனடியாக உங்கள் போனில் இருக்கும் இந்த ஆப் மூலம் போட்டோ எடுத்து அப்லோட் செய்தால் போதும். புகைப்படம் எடுக்கப்பட்ட இடமும், நேரமும் ஆப் மூலமே போலீஸு க்குத் தெரிந்து விடும்.
உடனடியாக போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டவர் களுக்கு உரிய அபராதம் விதிக்கப்பட்டு, அதற்கான ரசீதும் அனுப்பி வைத்து விடுவோம்.
கோவை மாநகரில் சாலை விபத்துகளைக் குறைப்பதற் காக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறோம். தற்போது 13 சதவிகிதம் சாலை விபத்துகள் குறைக்கப் பட்டுள்ளது. இறப்பு சதவிகிதம் 42 ஆகக் குறைக்கப் பட்டுள்ளது’’ என்றார்.
கோவை மாநகர காவல்துறை போக்குவரத்துப் பிரிவு உதவி ஆணையர் ராஜ்கண்ணண், ``கடந்த மூன்று மாதங்களாகச் சோதனை அடிப்படையில் செயல் படுத்தப்பட்ட
இந்த ஆப் மூலம் 1200-க்கும் மேற்பட்டவர் களுக்கு, விதிக்கப்பட்ட அபராதத் தொகையாக ரூ.8 லட்சம் வசூலிக்கப் பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார்.