கால் டிராப் சிக்கலை தீர்க்க புதிய திட்டம் !
புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..
லைக் பண்ணுங்க... "
கால் டிராப் பிரச்சனையை சந்திக்கும் ஒவ்வொரு வாடிக்கை யாளருக்கும் அரசாங்கத் தின் புதிய திட்டம் கை கொடுக்கும். இப்பிரச்சனையை தீர்க்க தொலைதொடர்பு சேவை மற்றும் நெட்வொர்க் தரத்தை உயர்ந்த டிஜிட்டல் கிராமங்களை உருவாக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு உள்ளது.
ஒன்று முதல் ஒன்னேகால் (1-1.25) லட்சம் டிஜிட்டல் கிராமங்களை உருவாக்குவது, நெட்வொர்க் நிலைமை களை மேம்படுத்துதல், பிஎஸ்என்எல் (BSNL) மற்றும் எம்டிஎன்எல் (MTNL) சேவைகளை புதுப்பித்தல் ஆகிய வற்றுக்கு முன்னுரிமைகள் வழங்கப்படும் என்று அமைச்சர் சஞ்சய் சாம்ராவ் தோத்ரே தெரிவித்துள்ளார்.
பரங்கிப்பேட்டை சிக்கன் பிரியாணி செய்வது எப்படி?
கால்ட்ராப் போன்ற பிரச்சனைகள் வராத வகையில் தொலை தொடர்பு சேவை தரம் உள்ளிட்ட பல சேவைகளின் தரத்தை நாங்கள் மேம்படுத்த உள்ளோம். பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் மீண்டும் மக்களுக்கு நல்ல சேவையை வழங்குவதில் உயிர்ப்பெரும் என்றும், தொலை தொடர்பு சேவை தரத்தை மேம்படுத்து வதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது எனவும் கூறினார்.
அரசு தொலைத் தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் ஆகியவற்றை புதுப்பிப்பதற்கான திட்டம் மத்திய அமைச்சரவை முன் மூன்று முதல் நான்கு மாதங்களில் வைக்கப்படும் என்று அவர் கூறினார்.
அதே நேரத்தில் தொலைத் தொடர்பு செயலாளர் அருணா சுந்தராஜன், சிறுகடை, உணவகங்கள் மற்றும் சிறு வணிக வளாகம் போன்ற இடங்களில், முன்பு வைக்கப் பட்டிருந்த தொலைபேசி பூத் போன்ற வைஃபை வசதியும் வழங்கு வதற்கான ஒரு திட்டத்தை உருவாக்க அரசாங்கம் முயற்ச்சி செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.
நாட்டில் வைஃபை ஹாட்ஸ்பாட்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பொது தரவு அலுவலகம் (பி.டி.ஓ) ஏற்ப்படுத்த வேண்டும் என்று இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் (டிராய்) பரிந்துரை செய்திருந்தது.
ஆனால் தொலை தொடர்பு சேவை வழங்கி வரும் நிறுவங்களின் எதிர்ப்பால் அது செயல்பாட்டு வரவில்லை. தற்போது பொது தரவு அலுவலகம் (பி.டி.ஓ) வழிமுறைகளை கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்றும் சுந்தரராஜன் கூறினார்.