செல்போன்களின் கதிரியக்க வீச்சு ஆபத்து பட்டியலில் உள்ளதா?’ - EThanthis

Recent Posts


செல்போன்களின் கதிரியக்க வீச்சு ஆபத்து பட்டியலில் உள்ளதா?’

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
மிக அதிகமான கதிரியக்க வீச்சை வெளிப்படுத்தி, உடலுக்குத் தீங்கை ஏற்படுத்தும் செல்போன்கள் பட்டியலில், இந்தியாவில் அதிக அளவில் விற்கப்படும் சீனாவின் இரண்டு மிகப் பெரிய நிறுவனங் களின் செல்போன்களும் இடம் பெற்றுள்ளன. இதில் ஆப்பிள் பிராண்டும் இடம் பெற்றுள்ளது செல்போன் பயன்பாட்டாளர் களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. 
செல்போன்களின் கதிரியக்க வீச்சு ஆபத்தா?’

செல்போன் கதிர்வீச்சு செல்போன்களின் கதிரியக்க வீச்சு தொடர்பாக நடத்தப்பட்ட சோதனை குறித்து ஜெர்மனியின் ஃபெடரல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``ஜியோமி மற்றும் ஒன் ப்ளஸ் ஆகிய 2 சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களின் செல்போன்கள் அதிக கதிர்வீச்சு உள்ள செல்போன்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
இதில் முதலாவதாக ஜியோமியின் ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனும் எம்.ஐ.ஏ.ஒன் போனும் இடம் பெற்றுள்ளன. இந்த இரண்டு போன்களும் மிக மோசமான அளவுக்கு கதிரியக்க வீச்சை வெளிப்படுத்து வதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. இவற்றைத் தொடர்ந்து ஒன் ப்ளஸ் நிறுவனத்தின் தயாரிப்புக ளான 5டி ஸ்மார்ட் போன் இடம் பெற்றுள்ளது. 

அதே சமயம் சீனாவின் பிரபலமான ஆப்போ, விவோ ஆகிய நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட வில்லை. அதே சமயம், மிகக் குறைந்த கதிர் வீச்சு உடைய செல்போன்கள் பட்டியலில் சாம்சங் நிறுவன தயாரிப்பு செல்போன்கள் இடம் பெற்றுள்ளது’’ எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

ஜியோமி எம்.ஐ.ஏ.ஒன், கிலோவுக்கு 1.75 வாட்ஸ் கதிரியக்கத்தை வெளியிடுவ தாகவும், அதைத் தொடர்ந்து ஒன் ப்ளஸ் 5டி 1.68 ஜியோமி மை மேக்ஸ் 1.58 மற்றும் ஒன் ப்ளஸ் 6டி 1.55 வாட்ஸ் கதிரியக்கத்தை வெளிப்படுத்துவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள 16 முன்னணி ஸ்மார்ட் போன்களில் 8 போன்கள் ஜியோமி மற்றும் ஒன் ப்ளஸ் பிராண்டு களுக்கு உரியதாக உள்ளன.

அதே போன்று ஆப்பிள் மற்றும் கூகுள் பிராண்ட் போன்களின் கதிரியக்க வீச்சும் ஆபத்துக்கு உட்பட்டதாகவே இருக்கிறது. ஆப்பிள் ஐ போன் 7 ஸ்மார்ட்போனின் கதிர் வீச்சு அளவு ஒன் ப்ளஸ் 5 போன் அளவுக்குக் கீழ் தான், அதாவது 1.38 வாட்ஸாக உள்ளது. ஆப்பிள் ஐ போன் 8 மற்றும் கூகுள் பிக்செல் 3 எக்ஸ்எல் மற்றும் பிக்ஸெல் 3 ஆகிய போன்கள் வெளியிடும் கதிர் வீச்சின் அளவும் அதிகமாக இருப்பதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

ஆனால், சாம்சங் போன்கள் அதிக கதிர் வீச்சுப் பட்டியலில் இடம் பெறவில்லை. கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன், மிகக் குறைந்த அளவிலான, அதாவது 0.17 வாட்ஸ் கதிர்வீச்சை வெளிப்படுத்து வதாகவும், சாம்சங் கேலக்ஸி ஏ8 போன் 0.24, சாம்சங் கேலக்ஸி எஸ்8+ போன் 0.26, சாம்சங் கேலக்ஸி எஸ்9+ போன் 0.29 வாட்ஸ் கதிர்வீச்சை வெளிப்படுத்துவதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இதே போன்று மிகக் குறைந்த கதிர்வீச்சு உடைய செல்போன்கள் பட்டியலில் எல்ஜி ஜி7 (0.24), ஹெச்டிசி யு11 லைஃப் ( 0.28) மற்றும் மோட்டாரோலா மோட்டோ இசட் (0.30) ஆகியவை இடம் பெற்றுள்ளன. மேலும், ஹுவேய் மேட் 20 புரோ மற்றும் ஹானர் 8 ஸ்மார்ட் போன்களின் கதிர்வீச்சு முறையே 0.4 வாட்ஸ் மற்றும் 1.28 வாட்ஸ் ஆக உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

கதிர்வீச்சு

தற்போதை க்கு, செல்போன்களின் பாதுகாப்பான கதிர்வீச்சு வெளிப்பாடு எவ்வளவு என்பதை அளவிட உலகம்  பொதுவான ஒரு அளவீட்டு முறை எதுவும் இல்லை என்றபோதிலும், கிலோவுக்கு 0.60 வாட்ஸ் என்ற கதிர்வீச்சு அளவு பாதுகாப்பானது என டியஎ புளூ ஏஞ்சல் என்ற ஜெர்மனைச் சேர்ந்த சூழலியல் நேச அமைப்பின் அளவீடு தெரிவிக்கிறது. 

இந்தப் பட்டியலில் உங்கள் செல்போனின் கதிர்வீச்சு அளவு எவ்வளவு என்பதைத் தெரிந்து கொண்டீர்களா?
செல்போன்களின் கதிரியக்க வீச்சு ஆபத்து பட்டியலில் உள்ளதா?’ செல்போன்களின் கதிரியக்க வீச்சு ஆபத்து பட்டியலில் உள்ளதா?’ Reviewed by Fakrudeen Ali Ahamed on June 25, 2019 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 EThanthis All rights reserved
close