கண் பாதிக்காமல் ஸ்மார்ட் போன் பயன்படுத்த ! - EThanthis

Recent Posts


கண் பாதிக்காமல் ஸ்மார்ட் போன் பயன்படுத்த !

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
இன்றைய நவீன யுகத்தில் கம்ப்யூட்டர் திரை மீதும் மொபைல் திரை மீதும் கண் வைக்காத நேரம் வெகு சொற்பம் தான். மொபைல் அறிமுகமான காலத்தில், அழைப்பு வந்தால் எடுத்துப் பேசி விட்டு, அது இருந்த இடத்திலேயே வைத்து விட்டு அடுத்த வேலைக்கு நகர்ந்திருப்போம். 
கண் பாதிக்காமல்

சிலர், `ஸ்நேக்', கிரிக்கெட் போன்ற கேம்ஸ்களை விளையாடி யிருப்பார்கள். ஆனால், ஸ்மார்ட் போன்களின் வருகைக்குப் பிறகு அது அப்படியே தலை கீழாகிப் போனது. 
வாட்ஸ்அப், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களில் அளவளாவி, ஷாப்பிங் அப்ளிகேஷன் ஆப்களை அலசி, நெட் ப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம், ஹாட் ஸ்டார், ஆல்ட் பாலாஜி என விதவிதமான என்டர்டெ யின்மென்ட் ஆப்களில் மகிழ்ந்து இணையத்தை விட்டு வெளியேற இம்மியளவும் வாய்ப்பில்லாமல் போய்விட்டது.

பார்க்கத் தவறிய, பார்க்க விரும்பும் அத்தனை விஷயங்களும் `யூடியூ'பில் கொட்டிக் கிடக்கின்றன. ஒருமுறை `யூடியூ'புக்குள் நுழைந்து விட்டால், புதிதாகப் பார்க்க வேண்டிய வீடியோக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே தான் போகின்றன. 

நேரம் போதாமல் நினைவில் வைத்து, நேரம் கிடைக்கும் போது கண்டுகளிப்பது அனைவருக்கு மான பொதுப் பழக்கமாகி விட்டது. இப்போது பலரும் மொபைல் போன்களைக் கண்களுக்கு மிக நெருக்கமாக வைத்துப் பார்த்துக் கொண்டிருக்கி றார்கள். அது முற்றிலும் தவறான விஷயம். 

அதனால், கண்வலி உள்ளிட்ட கண் சார்ந்த பாதிப்புகள் உண்டாக அது வழிவகுக்கும். கண்ணுக்கும் மொபைல் போனுக்கும் குறைந்தது 60 செ.மீ இடை வெளியாவது இருக்க வேண்டும்.

அது மட்டுமில்லாமல், தியேட்டரு க்குச் சென்று படம் பார்க்கும் பழக்கமும் இப்போது வெகுவாக குறைந்து விட்டது. இருக்கவே இருக்கிறது ஸ்மார்ட்போன்... பிடித்த திரைப்படத்தை, வீட்டில் உட்கார்ந்து, படுத்து, சாய்ந்து என அவரவர் சௌகர்யப்படி பார்த்துக் கொள்ளலாம். 

திரைப்படங்கள் மட்டுமா? விறுவிறுப்பான திரைக் கதைகளோடு மனதைக் கவரும் வெப் சீரியஸ்கள் வேறு சாரைசாரையாக வந்து கொண்டிருக்கின்றன. ஸ்மார்ட் போன்கள் வந்த பிறகு பலருக்கும் காலம் திரைக் காட்சிகளாகத் தான் மனக்கண்ணில் காட்சி யளிக்கின்றன. 

இந்தப் பழக்கம் நாளுக்குநாள் அதிகரிக்குமே தவிர இனி குறையப் போவதில்லை. ஆனால், `தொடர்ச்சியாக ஸ்மார்ட் போன்களைப் பார்த்துக் கொண்டே இருந்தால் பல்வேறு விதமான உடல்நலக் கோளாறுகள் உண்டாகும் வாய்ப்புண்டு. குறிப்பாக பார்வைக் கோளாறுகள். 

ஆனால், `சில உத்திகளைக் கடைப்பிடித்தால் அவற்றைத் தவிர்க்க முடியும்' என்கிறார் கண் மருத்துவர் நவீன். அதிக நேரம் ஏசி-யில் இருப்பவர் களைப் பாதிக்கும் உலர் கண்கள் பிரச்னை... தீர்வு என்ன? பலர் இருட்டில் மொபைல் போன்களைப் பயன்படுத்துவார்கள். 
சிலர் படுத்துக் கொண்டே படம் பார்ப்பது, கேம்ஸ் விளையாடுவது எனப் பல வேலைகளில் ஈடுபடுவார்கள். அதுவும் முற்றிலும் தவறான பழக்கம். போனிலிருந்து வெளியாகும் அதிகமான ஒளி கண்களைப் பதம் பார்த்து விடும்.
`இப்போது பலரும் மொபைல் போன்களைக் கண்களுக்கு மிக நெருக்கமாக வைத்துப் பார்த்துக் கொண்டிருக்கி றார்கள். அது முற்றிலும் தவறான விஷயம்.
அதனால், கண்வலி உள்ளிட்ட கண் சார்ந்த பாதிப்புகள் உண்டாக அது வழிவகுக்கும். கண்ணுக்கும் மொபைல் போனுக்கும் குறைந்தது 60 செ.மீ இடைவெளியாவது இருக்க வேண்டும். 
 அதே போல கழுத்தைத் தொங்க போட்டபடியே மொபைல் போன்களில் மூழ்கிக் கிடக்கிறார்கள் பலர். அது தொடரும் பட்சத்தில் கழுத்துத் தசை பாதிக்கப்பட்டு, கழுத்து வலியும் முதுகு வலியும் உண்டாகும். இந்தப் பாதிப்புக்கு `டெக்ஸ்ட் நெக்' (Text Neck) என்று பெயர். 
கேம்ஸ் விளையாடுவது

இந்தப் பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்க, 40 டிகிரிக்குக் கீழ் கழுத்தை வளைக்கக் கூடாது. கண்களை மட்டும் உருட்டி திரையைப் பார்க்க வேண்டும்.
அதே போல பலர் இருட்டில் மொபைல் போன்களைப் பயன்படுத்து வார்கள். சிலர் படுத்துக் கொண்டே படம் பார்ப்பது, கேம்ஸ் விளையாடுவது எனப் பல வேலைகளில் ஈடுபடுவார்கள்.
அதுவும் முற்றிலும் தவறான பழக்கம். போனிலிருந்து வெளியாகும் அதிகமான ஒளி கண்களைப் பதம் பார்த்து விடும். 
அதனால், தூக்கப் பிரச்னைகள் உண்டாகும். சரியான தூக்கம் இல்லாவிட்டால் அடுத்தநாள் சுறுசுறுப்பாக இயங்க முடியாது. அதனால் மன அழுத்தம் உண்டாகி, சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் ஆகிய பிரச்னைகளும் ஏற்பட வாய்ப்புண்டு.
தொடர்ச்சியாக மொபைல் போன், கம்ப்யூட்டர் திரைகளைப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். அத்தியா வசியமாக பார்த்தே ஆக வேண்டும் என்றால் அரை மணி நேரத்துக்கு ஒருமுறை சிறு இடைவெளி எடுத்துக் கொள்ள வேண்டும்.
பார்வையை வேறு எங்காவது தூரத்தில் உள்ள பொருள்களை நோக்கிச் செலுத்த வேண்டும். அடிக்கடி கண் சிமிட்ட வேண்டும்.
தொடர்ச்சியாகக் கணினித் திரையை, மொபைல் போன் திரையைப் பார்ப்பவர் களுக்கு உலர் கண்கள் (Dry Eyes) பாதிப்பு உண்டாகும். இதனால் கண்களில் நீர் வறட்சி உண்டாகி, கண் உறுத்தல், கண் சிவந்து போதல், பார்வை மங்குதல் போன்ற பல பாதிப்புகள் ஏற்படும். 
கண்களும் அருகில் இருப்பதை பார்க்கப் பழக்கப்பட்டு விடும். அதனால் தூரத்தில் உள்ள பொருள்களைப் பார்ப்பதில் சிக்கல் உண்டாகும். கண்களின் ஆரோக்கி யத்துக்குக் கண் சிமிட்டுவது மிகவும் இன்றி யமையாதது. ஒரு நிமிடத்துக்கு ஆறு முதல் எட்டு முறை கண் சிமிட்டியே ஆக வேண்டும்.

ஆனால், மொபைல் போன், கம்ப்யூட்டரைத் தீவிரமாகப் பார்த்துக் கொண்டிருந்தால் கண் சிமிட்டுவது நிமிடத்துக்கு ஒருமுறை, இரு முறையாகக் குறைய வாய்ப்பிருக்கிறது. 

அதனால், கண்ணீர் மிக விரைவில் ஆவியாகி விடும். இது மிகவும் ஆபத்தானது. அதனால் தொடர்ச்சியாக மொபைல் போன், கம்ப்யூட்டர் திரைகளைப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.
ஏ.சி அறைகளில் வேலை செய்பவ ர்களுக்கும் உலர் கண்கள் (Dry Eyes) பாதிப்பு உண்டாக வாய்ப்பு அதிகம். ஏ.சி. அறைகளில் வேலை பார்ப்பவர்கள் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை அந்த அறையை விட்டு வெளியேறி ரிலாக்ஸ் செய்து கொள்வது நல்லது .
அத்தியா வசியமாக பார்த்தே ஆக வேண்டும் என்றால் அரை மணி நேரத்துக்கு ஒரு முறை சிறு இடைவெளி எடுத்துக் கொள்ள வேண்டும். பார்வையை வேறு எங்காவது தூரத்தில் உள்ள பொருள்களை நோக்கிச் செலுத்த வேண்டும். அடிக்கடி கண் சிமிட்ட வேண்டும். 
மேக்னி ஃபையிங் ஸ்கிரீன்

`மேக்னிஃபையிங் ஸ்கிரீன்' பொருத்தியும் பார்க்கலாம். ஆனாலும், கண்ணுக்கு மிக அருகில் வைத்துப் பார்க்கக் கூடாது. உலர் கண்கள் பாதிப்புக்கு ஆரம்பத்திலேயே சிகிச்சை எடுத்துக் கொண்டால், மருந்துகளின் மூலமாகச் சரி செய்து விடலாம். 
தவறும் பட்சத்தில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்படும். கண்ணில் லென்ஸ் பயன்படுத்து பவர்களுக்கு இயல்பாகவே கண்ணீர் வறட்சி இருக்கும்.

அவர்கள் மொபைல் போனை அதிக நேரம் பயன்படுத்தி னால் பிறரைக் காட்டிலும் வெகு சீக்கிரமாகவே உலர் கண்கள் பாதிப்பு உண்டாகும். 

ஏ.சி அறைகளில் வேலை செய்பவர் களுக்கும் இந்தப் பாதிப்பு உண்டாக வாய்ப்பு அதிகம். ஏ.சி. அறைகளில் வேலை பார்ப்பவர்கள் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை அந்த அறையை விட்டு வெளியேறி ரிலாக்ஸ் செய்து கொள்வது நல்லது'' என்கிறார் மருத்துவர் நவீன்.
கண் பாதிக்காமல் ஸ்மார்ட் போன் பயன்படுத்த ! கண் பாதிக்காமல் ஸ்மார்ட் போன் பயன்படுத்த ! Reviewed by Fakrudeen Ali Ahamed on August 16, 2019 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 EThanthis All rights reserved
close