ஜியோ ஃபைபர் பிராட்பேண்ட் சேவை தொடக்கம் !
புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..
லைக் பண்ணுங்க... "
ஜியோ ஜிகாஃபைபர் பிராட்பேண்ட் சேவை இன்று முதல் குறிப்பிட்ட சில பெரு நகரங்களில் அறிமுக மாகிறது. படிப்படியாக அனைத்து பகுதிகளு க்கும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.
கடந்த மாதம் நடைபெற்ற ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில், ஜியோ ஜிகா பைபர் பிராட்பேண்ட் சேவையை முகேஷ் அம்பானி அறிமுகம் செய்தார்.
பேஸ்புக் பதிவால் ஐந்து பேரின் பாஸ்போர்ட்டை ரத்து செய்யும் மத்திய அரசு !இது குறித்து பேசிய அவர், ஜிகாஃபைபர் சேவையை பயன்படுத்தி 5 கோடி வீடுகளுக்கு அதிவேக இணைய வசதி வழங்க முடியும் என்றார். மேலும், இந்த சேவை முதற்கட்டமாக 1100 நகரங்களில் தொடங்கப்படும் என்றார்.
இந்த சேவையை பெற அந்தந்த பகுதியில் உள்ளோர் ஆன்லைனில் பதிவு செய்தால், பெரும் பான்மையை பொறுத்து, முன்னுரிமை அடிப்படையில் பிராட்பேண்ட் சேவையை ஜியோ நிறுவனம் வழங்கும்.
jio.com அல்லது My Jio மொபைல் செயலி வழியாக உங்களது தகவல்களைக் கொடுத்து முன் பதிவு செய்யலாம். உங்கள் பகுதியில் ஜிகாஃபைபர் பிராட்பேண்ட் சேவையை பெறுவதற்கான விருப்பப் பதிவாகும்.
இதே போல், உங்கள் பகுதியினரும் விருப்பங்களை தெரிவிப்பதன் மூலம் முன்னுரிமை பேரில் இணைப்புகள் வழங்கப்படும் என ஜியோ அறிவித்துள்ளது.
இண்டர்நெட், கேபிள், லேண்ட்லைன் ஆகியவை குறைந்த பட்சம் 700 முதல் ரூ 10000 வரை பிளான்களுக்கு ஏற்ப கிடைக்கப் பெறும். இந்த சேவைகளை ஆண்டுக்கும், மாதத்துக்கும் பெற்று கொள்ளலாம். 100 Mbps வேகம் கொண்ட இணையதள சேவை ரூ 700க்கு கிடைக்கப் பெறும்.
டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஜெய்ப்பூர், ஹைதராபாத், சூரத், வதோதரா, சென்னை, நொய்டா, காஸியாபாத், புவனேசுவரம், வாரணாசி, அலகாபாத், பெங்களூர், லக்னோ, பஞ்சாப்,
போர்ட் பிளேர், கயை, பாட்னா, மீரட், ஆக்ரா, விசாகப்பட்டினம் உள்ளிட்ட நகரங்களில் இன்று அறிமுகப்படுதப்பட இருக்கிறது. விரைவில் அனைத்து நகரங்களு க்கும் விரிவு படுத்தப்படும்.
இந்த பிராட்பேண்ட் சேவையுடன், ஜியோ ரௌட்டர், ஜியோ ஜிகாடிவி செட் டாப் பாக்ஸ் ஆகியவையும் வழங்கப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது.
இதன் மூலம், 1 ஜிபிபிஎஸ் (1 GBPS) வரையிலான அதிவேக இணைய சேவை கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும், தொலைக் காட்சி சேவை களையும் எளிதாக காணலாம்.