ட்விட்டர் சி.இ.ஓ ஜோக் டோர் சியின் ட்விட்டர் கணக்கு ஹேக் !
புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..
லைக் பண்ணுங்க... "
சமூக வலைதளமான ட்விட்டர் நிறுவனத்தின் சி.இ.ஓ ஜேக் டோர்சியின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு, இனரீதியான கருத்துக்கள், வெடிகுண்டு மிரட்டல்கள் ஆகியவற்றை ஹேக்கர்கள் பதிவிட்டனர்.
சமூக வலை தளங்களில் பிரபலமான ஒன்றான ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ஜேக் டோர்சியின், ட்விட்டர் கணக்கு நேற்று சிறிது நேரம் ஹேக் செய்யப் பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்தது.
ஹேக் செய்யப்பட்ட ஜேக் டோர்சியின் ட்விட்டர் பக்கத்தில் இருந்து திடீரென இனவெறி கருத்துக்களும், நாசி ஜெர்மனிக்கு ஆதரவான கருத்துக்களும் பதிவிடப்பட்டன.
டோர்சியை பின் தொடரும் லட்சக் கணக்கான வர்களுக்கு இந்த ட்வீட்கள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. “ஹிட்லர் வாழ்க, ட்விட்டர் தலைமை அலுவலகத்தில் வெடிகுண்டு உள்ளது” என்று பல ட்வீட்கள் பதிவிடப் பட்டன.
சிறிது நேரத்தில் ஹேக் செய்யப்பட்ட கணக்கு மீட்கப்பட்டு இந்த பதிவுகள் நீக்கப்பட்டு விட்டன.
தனது சி.இ.ஓ.வின் கணக்கையே பாதுகாப்பாக வைத்திருக்க முடியாத ட்விட்டர் நிறுவனத்தால், எங்கள் கணக்குகளை எவ்வாறு பாதுகாப்பாக வைத்திருக்க முடியும் என்ற கேள்விகளை பலரும் ட்விட்டர் நிறுவனத்தை நோக்கி எழுப்பினர்.
இது தொடர்பாக ட்விட்டர் நிறுவனம் அளித்த விளக்கத்தில், “பாதுகாப்பு அமைப்பில் எந்தவித சமரசமும் செய்யப்பட வில்லை.
ட்விட்டர் கணக்குடன் இணைக்கப்பட்டு இருந்த மொபைல் எண் மூலமாக கணக்கு ஹேக் செய்யப் பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது. ஜேட் டோர்சியின் கணக்கை 4,200,000 பேர் பின் தொடர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது.