ஹேக் செய்யப்படும் இணையதளங்கள் - இல‌வ‌ச‌ கிளவுட்! - EThanthis

Recent Posts


ஹேக் செய்யப்படும் இணையதளங்கள் - இல‌வ‌ச‌ கிளவுட்!

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
ஹேக் செய்யப்படும் இணைய தளங்கள் இலவச கிளவுட் ஸ்டோரேஜ் சேமிப்பு, கருத்துக் கணிப்பில் பங்கேற்றால் இலவச கூப்பன், 
பயனர் கணக்கு உள்ளவர் களுக்கே உள்நுழைய அனுமதி, புதிய கணக்கை துவங்கினால் வாங்கும் பொருளில் 30% தள்ளுபடி போன்ற 

பல்வேறு கவர்ச்சி கரமான விளம்பரங் களை நம்பி பலரும் தங்களது அந்தரங்க தகவல்களை உள்ளீடு செய்தோ அல்லது ஜிமெயில், ஃபேஸ்புக் போன்ற 

கணக்கு களை முதலாக கொண்டு நம்பகத் தன்மையற்ற இணைய தளங்களில் உள்நுழை கின்றனர். 

மேற்குறிப்் பிடப்பட்டது போன்ற விளம்பரங் களை நம்பி முன்பின் தெரியாத இணைய தளங்களில் அந்தரங்க தகவல் களை அளித்த பயனீட்டாளர் களுக்கு என்றாவது ஒரு நாள், 

தன்னுடைய போட்டோ மார்பிங் செய்யப்பட்டு வெளிவரும் போதோ அல்லது வங்கியி லுள்ள பணம் நூதமான முறையில் திருடப்படுமா போதோதான் அதன் தீவிரம் தெரிய வருகிறது. 

உதாரணமாக, கிளவுட் ஸ்டோரேஜ் சேவையில் உலகின் முன்னணி நிறுவனமான Dropboxன் 164,611,595 கணக்குகளும், LinkedInன் 164,611,595 கணக்குகளும், 

யாஹூ நிறுவனத்தின் 453,427 கணக்குகளும் என 334 இணைய தளங்களின் 5,688,097,942 கணக்குகள் பல்வேறு இணைய ஹேக்கிங் குழுக்களால் திருடப்பட்டு 

அவற்றில் பெரும் பாலானவை இலவசமாக இணையத்தில் எவரும் பார்க்கும், பதிவிறக்கம் செய்யும் வகையில் உள்ளது என்று haveibeenpwned என்னும் ஆய்வு இணைய தளத்தின் தரவுகள் கூறுகின்றன. 

இதில் அதிர்ச்சி கரமான தகவல் என்ன வென்றால் ஹேக்கிங் மற்றும் வைரஸ் பிரச்சனை களை தவிர்ப்பதற் காக நாம் பயன்படுத்தும் 

அவாஸ்ட் ஆன்டி வைரஸ் (Avast Antivirus) நிறுவனத்தின் 422,959 கணக்குகளும் ஹேக் செய்யப் பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது. 

முன்பின் தெரியாத இணைய தளங்களில் அந்தரங்க தகவல்களை அளிப்பதன் தீவிரத்தை மேற்கண்ட பிரபல இணையதளங்களின் ஹேக்கிங் செயல்பாடுகளின் மூலம் புரிந்துகொள்ள முடியும்.
ஹேக் செய்யப்படும் இணையதளங்கள் - இல‌வ‌ச‌ கிளவுட்! ஹேக் செய்யப்படும் இணையதளங்கள் - இல‌வ‌ச‌ கிளவுட்! Reviewed by Fakrudeen Ali Ahamed on November 29, 2019 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 EThanthis All rights reserved
close