உங்களிடம் ஸ்மார்ட்போன் இருந்தால் இந்த நோய் உங்களுக்கும் இருக்கலாம் ! - EThanthis

Recent Posts


உங்களிடம் ஸ்மார்ட்போன் இருந்தால் இந்த நோய் உங்களுக்கும் இருக்கலாம் !

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
தகவல் பரிமாற்றத் துக்கான கண்டு பிடிப்பாக உருவாக்கப்பட்ட செல்போன், இன்று எல்லாமு மாகவே மாறி விட்டது. சமூக வலை தளங்கள், வங்கி பரிவர்த்தனைகள் என செல்போன் இல்லாமல் நம்முடைய ஒரு நாளைக் கடப்பது கடினம் தான்.
ஸ்மார்ட்போன்
என்னிடம் செல்போன் இல்லை என்று சொல்பவர்கள் அதிசயமாய் பார்க்கப் படுகிறார்கள். பள்ளி, கல்லூரிகளின் முக்கிய குறிப்புகள் எல்லாம் வாட்ஸ் அப் குரூப்பில் பறந்து கொண்டி ருக்கின்றன.

பல வேலைகளின் ஆரம்ப புள்ளியே செல்போன் தான். இப்படி செல்போனை நம்பி நாம் ஓடத்தொடங்கி நீண்ட நாட்கள் ஆகிறது.

ஒரு கண்டுபிடிப்பு வேலையை எளிதாக்கி நம்மை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் செல்வது ஆரோக்ய மானது தான்.

அதே நேரத்தில் செல்போன் பயன்பாட்டால் நமக்கே தெரியாமல் நம்மை பல வியாதிகள் நெருங்கிக் கொண்டு இருக்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மை.

தனியாக இருந்தாலோ அல்லது நண்பர்கள் கூடி சேர்ந்தாலோ உடனடியாக செல்போனை எடுத்து செல்ஃபி தட்டி விட வேண்டும் என்பது இன்று பலரின் வாடிக்கையாகி விட்டது.

புகைப்படம் நல்லதொரு நினைவு தான். அதற்காக ஒரு நாளைக்கு 10 - 20 செல்ஃபி எடுப்பது ஆரோக்கிய மானது அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

ஒரு கட்டத்தில் செல்ஃபிக்கு நீங்கள் அடிமை யாகவே ஆகி விடுவீர்கள் என அதிர்ச்சி அளிக்கும் அவர்கள்,

அதனை சமூக வலை தளங்களில் பகிர வேண்டும், பலரும் அதற்கு லைக்கிட வேண்டும் என தொடர் மன நோயாகவும் வாய்ப்புள்ள தாக கூறுகிறார்கள்.

இத்தகைய தீவிர செல்ஃபி மனப்பான்மையை செல்பிடிஸ் என்கிறார்கள். ஸ்மார்ட் போன்களை ஸ்குரோல் செய்ய நாம் அதிகம் ஆட்காட்டி விரலையும், கட்டை விரலையும் பயன் படுத்துகிறோம்.

இது தொடர்ந்து செய்யப் படுவதால் விரலின் முனைப் பகுதிகளிலும் முன்கையி லும் வலி உண்டாவதை மருத்துவர்கள் கண்டு பிடித்துள்ளனர். இதற்கு 'மொபைல் எல்போ' என்றும் மருத்துவர்கள் பெயரிட் டுள்ளனர்.
இந்த நோய் உங்களுக்கும் இருக்கலாம்
நீண்ட டெக்ஸ்ட்களை டைப் செய்து அனுப்பாமல் வாய்ஸ் நோட் பயன் படுத்துவது நல்லது என்றும்,

தேவை யில்லாமல் சமூக வலை தளங்களு க்குள் புகுந்து மேலும் கீழும் ஸ்குரோல் செய்து கொண்டு இருப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் சில குறிப்பு களையும் மருத்துவர்கள் கொடுத்துள்ளனர்.

வீடியோக்கள் பார்ப்பது, சமூக வலைதளம் பயன் படுத்துவது, கேம் விளையாடுவது போன்ற பல காரணங் களுக்காக நீண்ட நேரம் தலையை சாய்த்துக் கொள்கிறார்கள் செல்போன் பயனாளர்கள்.

இதனால் கழுத்து தசையில் வலி ஏற்பட்டு 60 பவுண்ட் அழுத்தம் ஏற்படுகிறது. இதற்கு டெக்ஸ்ட் நெக் என்று பெயர். நீண்ட நேர செல்போன் பயன்பாட்டை குறைத்துக் கொள்வது தான் இதற்கு தீர்வு என மருத்துவர்கள் குறிப்பிட் டுள்ளனர்.

செல்போனில் அதிக ஆபத்தாக பார்க்கப்படும் வீடியோ கேமில் உலகளவில் 100கோடிக்கும் அதிக மானவர்கள் மூழ்கிக் கிடக்கிறார்கள்.

பொழுது போக்கு என்ற நிலையை தாண்டி உயிரை பறிக்கும் நிலையையும் ஆன்லைன் விளையாட்டுகள் அடைந்து விட்டன.

செல்போன் விளையாட்டு களில் மூழ்கிக் கிடப்பவர்கள் 'கேமிங் டிஸ்ஸார்டர்' என்ற ஆபத்தில் இருப்பவர்கள் என்கிறது சுகாதார அமைப்பு.

இவர்கள் பொறுப்பின்மை, தூக்க மின்மை, சலிப்பு, உடல் சோர்பு என உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிப்படை கின்றனர்.

மற்ற வியாதிகளை விடவும் ஆபத்தான தாக இருக்கிறது நோமோபோபியா. அடிக்கடி செல்போனை பயன்படுத்திக் கொண்டு இருக்கும் ஒரு நபர் ஏதோ வேலை காரண மாகவோ
ஸ்மார்ட்போன் இருந்தால்
அல்லது சார்ஜ் இல்லாமல் செல்போன் ஆஃப் ஆகி விட்டாலோ செல்போனை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது.

இதனால் அவர்கள் மனதளவில் பாதிக்கப் படுகிறார்கள். அவர்கள் எதையோ இழந்ததை போல ஆகிறார்கள். இதற்குத் தான் நோமோபோபியா என்று பெயர்.

பல இளைஞர்கள் நோமோ போபியாவால் பாதிக்கப் பட்டுள்ளனர். வாரம் ஒரு நாளாவது செல்போன் இல்லாமல் பழகிக் கொள்ள வேண்டும்.

புத்தகங்கள் படிப்பது, விளையாடுவது, நண்பர்களுடன் நேரம் செலவழிப்பது போன்ற மற்ற செயல்களில் மனதை செலுத்தி செல்போன் எண்ணத்தை குறைத்துக் கொள்ளலாம் என்பது மருத்துவர்களின் அறிவுரையாக இருக்கிறது.

எந்த ஒரு கண்டு பிடிப்பாக இருந்தாலும் நன்மை, தீமை உள்ளடக்கிய தாகவே இருக்கும் என்பது நியதி. அதனை பயன்படுத்தும் நாம் தான் அதனை சரியான விதத்தில் கையாண்டு நமக்கு சாதமாக்கிக் கொள்ள வேண்டும்.

சிறிது எச்சரிக்கையாக நாம் இருந்தால், நமக்கே தெரியாமல் நம்மை அணுகும் புதிய வியாதிகளை தூர விரட்டலாம்.
உங்களிடம் ஸ்மார்ட்போன் இருந்தால் இந்த நோய் உங்களுக்கும் இருக்கலாம் ! உங்களிடம் ஸ்மார்ட்போன் இருந்தால் இந்த நோய் உங்களுக்கும் இருக்கலாம் ! Reviewed by Fakrudeen Ali Ahamed on November 10, 2019 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 EThanthis All rights reserved
close