மொபைலில் சேமிக்காத எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பும் வசதி - வாட்ஸ் அப்பில் ! - EThanthis

Recent Posts


மொபைலில் சேமிக்காத எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பும் வசதி - வாட்ஸ் அப்பில் !

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
ஃபேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ் அப் செயலியில் பல்வேறு புதிய வசதிகள் அறிமுக படுத்தப் பட்டுள்ளன. 
மொபைலில் சேமிக்காத எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பும் வசதி

வீடியோ அழைப்புகளில் இனி குழுவாக இணைந்து அழைக்கும் வசதி குறிப்பிட்ட சில பயனாளர் களுக்கு மட்டும் சோதனை அடிப்படையில் வழங்கப் பட்டுள்ளது. 

இதே போன்று மொபைலில் சேமிக்கப் படாத எண்களுக்கும் குறுஞ்செய்தி அனுப்பும் வசதி உருவாக்கப் பட்டுள்ளது. 

பிரவுசரில் ‘api.whatsapp.com/send?phone= என டைப் செய்து பின்னர், தொலைபேசி எண்ணை டைப் செய்வதன் மூலம் எண்ணை சேமிக்கா மலேயே செய்தி அனுப்ப முடியும். 

இதே போன்று வாட்ஸ் அப் மீடியாக்களில் 30 நாட்களுக்குள் டெலிட் செய்யப்பட்ட வீடியோ அல்லது புகைப்படத்தை மீண்டும் பதிவறக்கம் செய்வதற் கான வசதியும் வழங்கப் படுகிறது.

ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டா கிராம் வீடியோக்களை வாட்ஸ் அப் செயலிலேயே காண்பதற்கான வசதியும் சேர்க்கப் பட்டுள்ளது. முதற்கட்டமாக ஆப்பிள் ஐ-போன் செயலியில் மட்டுமே இந்த வசதி சேர்க்கப் பட்டுள்ளது. 
இதேபோன்று ஐ-போன் பயனாளர் களுக்கான புதிய வசதியாக வாட்ஸ் அப்பில் பதிவிறக்கம் செய்யப்படும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை செல்போனின் கேலரி யிலிருந்து மறைக்கவும் முடியும்.

இது மட்டுமல்லாது, இந்தியாவில் யுபிஐ சார்ந்த டிஜிட்டல் பண பரிமாற்றங் களை வழங்கும் சேவை களுக்கான போட்டி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், 

வாட்ஸ் அப் செயலியில் பேமென்ட்ஸ் வசதி வரும் நாட்களில் வெளியிடப்படும் என தகவல் வெளியாகி யுள்ளது.
மொபைலில் சேமிக்காத எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பும் வசதி - வாட்ஸ் அப்பில் ! மொபைலில் சேமிக்காத எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பும் வசதி - வாட்ஸ் அப்பில் ! Reviewed by Fakrudeen Ali Ahamed on November 12, 2019 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 EThanthis All rights reserved
close