அதிகமாக இயர் போன் பயன்படுத்தினால் காது கேட்காமல் போகலாம் !
புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..
லைக் பண்ணுங்க... "
தொடர் செல்ஃபோன் கதிர் வீச்சும், தினசரி இயர் ஃபோன் பயன்பாடும் உங்கள் காதுகளில் உள்ள சவ்வுகளை சேதப்படுத்தும் என ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
தொடர்ந்து அதிக ஒலியில் காதுக்குள் சொருக்கிக் கொள்ளும் வகையிலான இயர் ஃபோன் பயன்படுத்தி னால் காது கேட்காமல் போவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்கிறது ஆய்வு.
இது குறித்து டெக்கான் க்ரானிகல் செய்திக் குறிப்பில் இன்றைய மக்களுக்கு காதுப் பிரச்னை
அல்லது காது கேளாமை பிரச்னைகள் இருப்பின் அதற்கு பெரும் பான்மையான காரணம் இயர் ஃபோன் பயன்பாடுதான் என்று தெரிவித்துள்ளது.
அல்லது காது கேளாமை பிரச்னைகள் இருப்பின் அதற்கு பெரும் பான்மையான காரணம் இயர் ஃபோன் பயன்பாடுதான் என்று தெரிவித்துள்ளது.
இது குறித்து காது, மூக்கு, தொண்டை மருத்துவர் பிரகாஷ் அண்டியிடம் டெக்கான் க்ரானிகல் எடுத்த பேட்டியில் “காது கேளாமை பிரச்னை என்பது உடனடியாக தெரியக் கூடியது அல்ல.
நமக்கே தெரியாமல் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வரும். அப்படி உங்களுக்கு அதிக ஒலியான காலிங் பெல் அல்லது யாரேனும் உங்களை அழைத்தது கேட்கவில்லை எனில் உடனே மருத்துவரை அனுகுவது நல்லது” என்று கூறியுள்ளார்.
காதுகளுக்கு 40 டெசிபல்தான் பாதுகாப்பான ஒலி, அதுவே 60க்கு மேல் சென்றால் ஆபத்து என்கிறார். நம் செல்ஃபோனில் ஒலியின் அளவு 70 டெசிபல் வரை இருக்கும் என்பது குறிப்பிடத் தக்கது.
மூளைக்கு நெருக்கமான அதிர்வலையை எழுப்பக் கூடிய இயர் ஃபோன் பயன்பாட்டின் அறிகுறி முதலில் காதுகளில் நரம்புகளி லிருந்தே துவங்கும்.
இதனால் அடிக்கடி காது வலி போன்ற பிரச்னைகளை சந்திப்பீர்கள். அதன் வீரியம் அதிகரித்தால் காது கேளாமை பிரச்னை ஏற்படும்.
இது குறித்து மனநல மருத்துவர் பிராடிமா மூர்த்தி டெக்கான் க்ரானிகலுக்கு பேசிய போது “இப்படி அதீத சத்தம் காதுகளுக்கு மட்டுமன்றி அவர்களின் மன நிலையையும் மாற்றி விடும்.
அவர்களை தனிமைப் படுத்தும். சமூகத்தில் என்ன நடக்கிறது என்பதையே தெரிந்து கொள்ள விரும்ப மாட்டார்கள். அவர்களை முற்றிலுமாக சமூகத்தி லிருந்து தனிமைப்படுத்தும்” என்கிறார்.