சைலண்டாக 7 நிறுவனத்திற்கு தலைவரான சுந்தர் பிச்சை ! - EThanthis

Recent Posts


சைலண்டாக 7 நிறுவனத்திற்கு தலைவரான சுந்தர் பிச்சை !

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
உலகிலேயே மிகப்பெரிய நிறுவனமான கூகிள்-இன் தலைவரான நம்ம ஊர் செல்லப் பிள்ளை சுந்தர் பிச்சை, பதவி உயர்வு பெற்று கூகிளின் நிறுவனர் களான லேரி பேஜ் மற்றும் செர்கி பிரின் ஆகியோர் 
சைலண்டாக 7 நிறுவனத்திற்கு தலைவரான சுந்தர் பிச்சை
தலைமை வகித்த மாபெரும் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனத் திற்கும் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

இதன் மூலம் இரு நிறுவனர்களும் தற்போது நேரடி நிர்வாகத்தில் இருந்து முழுமையாக வெளியேறி நிர்வாகக் குழுவில் மட்டும் இடம் பெற்று உள்ளனர்.

சுந்தர் பிச்சையின் இந்த வளர்ச்சி தமிழர்கள் அல்லாமல் ஒட்டு மொத்த இந்தியா விற்கும் பெருமைப்படும் விஷயமாக இருக்கும் நிலையில்,

சுந்தர் பிச்சை கையில் கூகிள், ஆல்பபெட் அல்லாமல் சுமார் 7 நிறுவனங்கள் இவரின் கட்டுப் பாட்டிற்குள் வருகிறது.

கூகிள் பைபர் நிறுவனம்

கூகிள் நிறுவனத்தின் கீழ் க்ரோம், யூடியூப், தேடுதல், கருவிகள் எனப் பல விஷயங்கள் இருக்கிறது. 
கூகிள் பைபர்
இதே போல் அமெரிக்காவில் பிராண்ட்பேன்ட் இண்டர்நெட் சேவைகளை வழங்கும் கூகிள் பைபர் என்கிற நிறுவனம் அல்பபெட் கீழ் இயங்குகிறது.

தற்போது ஆல்பபெட் நிறுவனத்திற்குச் சுந்தர் பிச்சை தலைவரான நிலையில் கூகிள் பைபர் நிறுவனத்திற்கும் தலைவர் ஆகிறார்.

நெஸ்ட் நிறுவனம்

ஸ்மார் ஹோம் சேவைகளை வழங்கும் நெஸ்ட் நிறுவனத்தைக் கூகிள் 2014ஆம் ஆண்டுக் கைப்பற்றியது. 2018 வரையில் தனி நிறுவனமான இயங்கி வந்த நெஸ்ட் பின் நாளில் கூகிள் நிறுவனத் துடன் இணைந்தது. 
நெஸ்ட் நிறுவனம்
தற்போது இது கூகிள் நெஸ்ட் என்னும் பெயரில் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தி ற்கும் தற்போது சுந்தர் பிச்சை தலைவராகிறார். காலிகோ

ஆல்பபெட் கட்டுப்பாட்டில் இருக்கும் காலிகோ என்னும் நிறுவனம் பயோ டெக்னாலஜி துறையில் சார்ந்து இயங்குகிறது.

இந்நிறுவனம் வயது முதிர்வை எதிர்கொள்ள மிகப்பெரிய அளவிலான ஆராய்ச்சியைச் செய்து வருகிறது. இந்த நிறுவனத் திற்கும் தற்போது சுந்தர் பிச்சை தலைவராகிறார்.

வெரிலீ லைப் சயின்ஸ் நிறுவனம்

லைப் சயின்ஸ் துறையில் பல ஆராய்ச்சிகளைச் செய்யும் வெரிலீ லைப் சயின்ஸ் நிறுவனம் கூகிள் எக்ஸ் நிறுவனத்தின் ஒரு பகுதியாக இயங்கி வருகிறது.

இந்தக் கூகிள் எக்ஸ் நிறுவனம் ஆல்பபெட் நிறுவனத்தின் கீழ் இயங்குகிறது. ஆல்பபெட் நிறுவனத்திற்குச் சுந்தர் பிச்சை தலைவர் ஆன நிலையில் வெரிலீ லைப் சயின்ஸ் நிறுவனத் திற்கும் அவர் தலைவர் ஆகிறார். கூகிள் வென்சர்ஸ்
வெரிலீ லைப் சயின்ஸ் நிறுவனம்
கூகிள்-இன் வென்சர்ஸ் கேப்பிடல் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனமான கூகிள் வென்சர்ஸ் 2009ஆம் ஆண்டுத் துவங்கப்பட்ட நிலையில் இதை லேரி பேஜ் மற்றும் செர்கி பிரின் ஆகியோர் நிர்வாகம் செய்து வந்தனர்.

தற்போது இருவரும் நேரடி நிர்வாகத்தில் இருந்து வெளியேறிய நிலையில் இதற்கும் சுந்தர் பிச்சை தலைவர் ஆகிறார். எக்ஸ் டெவலப்மென்ட்

கூகிள் நிறுவனத்தின் ஆராய்ச்சி அமைப்பான கூகிள் எக்ஸ் எனக் கூறப்பட்ட எக்ஸ் டெவலப்மென்ட் நிறுவனத்தை லேரி பேஜ் மற்றும் செர்கி பிரின் ஆகியோர் நிர்வாகம் செய்து வந்த நிலையில் தற்போது சுந்தர் பிச்சை தலைவர் ஆகிறார்.

கேப்பிடல் ஜி நிறுவனம்
கேப்பிடல் ஜி நிறுவனம்
டெக் ஸ்டார்ட்அப் நிறுவன பங்குகளில் அதிகளவில் முதலீடு செய்யும் ஒரு தனியார் நிறுவனம் கேப்பிடல் ஜி.

இந்த நிறுவனமும் கூகிள் நிறுவனத்தின் கட்டுப் பாட்டில் தான் இதைக் கூகிளின் நிறுவனங்கள் கவனித்து வந்த நிலையில் தற்போது சந்தர் பிச்சை தலைவர் ஆகிறார்.
சைலண்டாக 7 நிறுவனத்திற்கு தலைவரான சுந்தர் பிச்சை ! சைலண்டாக 7 நிறுவனத்திற்கு தலைவரான சுந்தர் பிச்சை ! Reviewed by Fakrudeen Ali Ahamed on December 06, 2019 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 EThanthis All rights reserved
close