திருட்டு போன மொபைலை கண்டுபிடிக்க புதிய வழி - அரசின் திட்டம் !
புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..
லைக் பண்ணுங்க... "
ஸ்மார்ட் போன்கள் பெருகி விட்ட இன்றைய காலத்தில், அந்த போன்கள் திருடு போவதும் சகஜமாகி விட்டது. தற்போது அதற்கான தீர்வை அளிக்கத் தொலைத் தொடர்பு அமைச்சகம் முன் வந்துள்ளது.
தொலைந்த அல்லது திருடு போன மொபைல் போன்களைப் பற்றி காவல் துறையில் புகார் அளித்து விட்டு,
அந்த புகார் படிவத்துடன் Central Equipment Identity Register என்ற அரசின் இணைய தளத்தில் பதிவு செய்து நமது மொபைலை நாமே ட்ராக் செய்து கொள்ளலாம்
என ஏற்கெனவே அறிவித்திருக் கிறது தொலைத் தொடர்புத் துறை அமைச்சகம்.
என ஏற்கெனவே அறிவித்திருக் கிறது தொலைத் தொடர்புத் துறை அமைச்சகம்.
இந்தத் திட்டத்தை டெல்லியில் அறிமுகப்படுத்தி அதைத் தொடர்ந்து தொலைத் தொடர்பு செயலாளர் பேசிய போது, ``தற்போது டெல்லியில் உள்ளவர்கள் இந்த இணைய தளத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
திருடப்பட்ட மொபைலைப் பற்றி காவல் துறையில் புகார் கொடுத்து, அந்தப் படிவம் மற்றும் உங்கள் அடையாள அட்டையைச் சேர்த்து பதிவேற்றம் செய்து மொபைலை நீங்களே ப்ளாக் அல்லது அன்ப்ளாக் செய்யலாம்" எனக் கூறியுள்ளார்.
அந்த இணைய தளத்தின்படி திருடப்பட்ட மொபைலின் IMEI நம்பர், உங்கள் மொபைல் நம்பர்,
தொலைந்த இடம், தேதி, காவல்துறை புகார் படிவம் மற்றும் உங்கள் அடையாள அட்டை ஆகிய வற்றைப்
தொலைந்த இடம், தேதி, காவல்துறை புகார் படிவம் மற்றும் உங்கள் அடையாள அட்டை ஆகிய வற்றைப்
பதிவேற் றுவதன் மூலம் உங்கள் மொபைலை திருடியவர் எந்த வகையிலும் உபயோகிப்பதி லிருந்து தடுக்க முடியும்.
மேலும், அந்த மொபைலே எங்கேயாவது பயன்படுத்தப் பட்டால் அதை ட்ராக் செய்யவும் முடியும்.
மேலும், அந்த மொபைலே எங்கேயாவது பயன்படுத்தப் பட்டால் அதை ட்ராக் செய்யவும் முடியும்.
தற்போது டெல்லி மற்றும் மகாராஷ்டிராவில் மட்டும் கொண்டு வரப்பட்டுள்ள இந்த வசதி விரைவில் இந்தியா முழுவதும் விரிவு படுத்தப்பட விருக்கிறது.