மொபைல் போனை குழந்தைகள் மறக்க தீர்வு சொல்லும் மருத்துவர் ! - EThanthis

Recent Posts


மொபைல் போனை குழந்தைகள் மறக்க தீர்வு சொல்லும் மருத்துவர் !

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
அதீத மொபைல் உபயோகம், கட்டுப் பாடுகளற்று டிஜிட்டல் திரையைப் பார்ப்பது போன்றவை பார்வைக் குறைபாடு தொடங்கி பல வகையான உடல்நலப் பிரச்னைகளை ஏற்படுத்தும். 
மொபைல் போனை குழந்தைகள் மறக்க தீர்வு சொல்லும் மருத்துவர்
உடலுறுப்பு சார்ந்த வளர்ச்சி, பேச்சுத்திறன், பார்வைத்திறன் போன்றவை முழுமை பெற்ற பெரியவர் களுக்கே

டிஜிட்டல் திரைகள் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. எனில், குழந்தை களுக்கு சொல்லவே வேண்டாம். 

'தொடர்ச்சியாக டிஜிட்டல் திரைகளைப் பார்த்தால், குழந்தை களுக்கு என்ன மாதிரியான உடல்நல பாதிப்புகள் ஏற்படும்' என்பது குறித்து விரிவாகப் பேசுகிறார், குழந்தைகள் நல மருத்துவர் ஜெ.ஷியாமளா.

"குழந்தைகளைப் பொறுத்த வரையில், பிறந்து நான்கு மாதங்கள் கடந்தபிறகு, அவர்களுக்கு கேட்கும் திறன், பேசும் திறன் போன்றவை வளர்ச்சிபெறத் தொடங்கும். 

அந்த நேரத்தில் அவர்களுக்கு டிஜிட்டல் திரைகளைக் காண்பித்து வந்தால், அந்த வளர்ச்சிகள் தடைப்படவும், தாமதப்படவும் வாய்ப்பிருக் கிறது. 

அப்படியான குழந்தைகள், வளர வளர நடத்தை தொடர்பான மாற்றங்களை எதிர்கொள்வ தற்கான வாய்ப்புகளும் அதிகம். 

ஆட்டிஸமே இல்லாமல், அதற்கான அறிகுறிகள் மட்டும் ஏற்படும் வாய்ப்பு அதிகம். உடல் பருமன் ஏற்படுவதற் கான வாய்ப்பும் அதிகம்.

'மொபைல் காட்டினால் தான் என் குழந்தை சாப்பிடவே செய்கிறான்' எனக் கூறி, பல பெற்றோர்கள் பிறந்த குழந்தை களுக்கும் டிஜிட்டல் திரைகளைக் காண்பிக்கின்றனர். 
சாப்பிட வைப்பதற்காக, குழந்தைக்கு மொபைலைக் காட்டுவதை விட மோசமான ஒரு பழக்கம் இருக்கவே முடியாது. 

குழந்தை சாப்பிட அடம் பிடித்தால், அவர்களை வெளியில் அழைத்துச் சென்று இயற்கையை வேடிக்கை காட்டுங்கள். 

முடிந்த வரை, அவர்களுடன் பேசிக் கொண்டிருங்கள். மொபைலை குழந்தை மறக்க ஒரேவழி, நீங்கள் அவர்களுடன் நேரம் செலவிடுவது தான்.

கொஞ்சம் வளர்ந்த குழந்தையாக இருந்தால், அவர்களின் எண்ணங்களில் தடுமாற்றம் ஏற்படும் வாய்ப்பும் அதிகம். 

காரணம், வளர்ந்த குழந்தை களுக்கு, அனைத்தையும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக இருக்கும். 

அதனாலேயே மொபைலில் வீடியோக்கள் பார்க்கும் போது, 'அடுத்து என்ன' என்பதில் அதிக கவனமாக இருப்பார்கள். 

இது, மிக இளம் வயதிலேயே 'அடல்ட் வீடியோ' பார்க்கும் பழக்கத்துக்கு அவர்களை உட்படுத்தக் கூடும்.

குழந்தைக ளுக்கு டிஜிட்டல் திரைகளைக் காண்பிப்பதை பெற்றோர் தவிர்த்தே ஆகவேண்டும். 

ஒரு வேளை பார்க்க வேண்டு மென்றால், அது உங்களின் நேரடி கண்காணிப்புக்கு உட்பட்டு தான் இருக்க வேண்டும்" என்கிறார், மருத்துவர் ஷியாமளா .
மொபைல் போனை குழந்தைகள் மறக்க தீர்வு சொல்லும் மருத்துவர் ! மொபைல் போனை குழந்தைகள் மறக்க தீர்வு சொல்லும் மருத்துவர் ! Reviewed by Fakrudeen Ali Ahamed on January 01, 2020 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 EThanthis All rights reserved
close