சீன செல்போனில் எதையும் ஊடுருவும் கேமரா.. அந்தரங்கள் பறிபோகும் பெண்களுக்கு ஆபத்து !
புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..
லைக் பண்ணுங்க... "
சீனாவைச் சேர்ந்த ஒரு மொபைல் நிறுவனம் செல்போன் வழியாக 'எதையும்' ஊடுருவி பார்க்கும் எக்ஸ்ரே வசதியை அறிமுகப் படுத்தியுள்ளது.
பெண்களுக்கு பெரும் ஆபத்தை உருவாக்கும் இந்த வசதியால் அந்தரங்கம் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. 2020 உலகத்தில் எல்லோரிடம் இன்றைக்கு செல்போன் உள்ளது.
குறிப்பாக பலரிடமும் ஸ்மார்ட்போன் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன்களில் எந்த அளவிற்கு சாதகமான அம்சங்கள் உள்ளனவோ அதே அளவுக்கு பாதகமான விஷயங்களும் உள்ளன.
இன்றைக்கு ஒவ்வொரு வரும் புதுபுது மாடல் செல்போன்களை வாங்கி பயன்படுத்துவதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.
டிஜிட்டல் கேமராவில் உள்ள அத்தனை வசதிகளும் இப்போது செல்போனிலேயே வந்தது மிக முக்கிய காரணம் ஆகும்.
அத்துடன் கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப்பில் செய்ய வேண்டிய வேலைகளையும் எளிதில் ஸ்மார்ட்போன்களில் செய்ய முடிகிறது. கையடக்க கணிணியாக செல்போன்கள் மாறி கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் ஆகிவிட்டது.
ஒவ்வொரு மொபைல் நிறுவனமும் ஏதேனும் புதிய வசதியை கூடுதலாக சேர்த்தால் மட்டுமே அதை விற்க முடியும் என்ற நிலை சந்தையில் உருவாகி உள்ளது.
புதுபுது வசதி அறிமுகம்
இதனால் நவீன வசதிகள் உள்ள செல்போன்களுக்கு உலகம் முழுவதும் உள்ள மார்க்கெட்டை பார்த்து பல நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு பல வசதிகளை அறிமுகப்படுத்தி வெளியிட்டு வருகின்றன.
மக்கள் பலரும் விரும்புவது நல்ல கேமரா வசதி உள்ள போன்களைத் தான். இதற்கு தான் மார்க்கெட்டில் டிமாண்ட் உள்ளது. செல்பி மோகமும் இதற்கு முக்கிய காரணமாகும்.
ஆடைகளை ஊடுருவி புகைப்படம்
பல வசதிகள் வந்துவிட்ட நிலையில், சீனாவைச் சேர்ந்த பிரபல செல்போன் நிறுவனம் இதுவரை எதிலும் இல்லாத புதிய வசதியுடன் ஒரு மாடலை அறிமுகப் படுத்தியுள்ளது.
அதில் எக்ஸ்ரே கதிர்களை போன்று அகச்சிவப்பு கதிர்களை பயன்படுத்தி பிளாஸ்டிக், ஆடைகளை ஊடுருவி போட்டோ எடுக்கும் தொழில்நுட்பத்தை கொண்டு வந்திருக்கிறது .
அந்த செல்போனிலுள்ள கேமிராவை ஒபன் செய்து ‘போட்டோகுரோம்' கலர் பில்டரை ஸ்வைப் செய்து கண்ணுக்கு தெரியாத பொருட்களை போட்டோ எடுக்க புரோகிராம் செய்யப்பட்டுள்ள ஆப்சனை கிளிக் செய்தால் பார்க்க முடியும் என்கிறார்கள்.
பெண்களுக்கு ஆபத்து
சரியான வெளிச்சம் உள்ள இடங்களில் இதை பயன்படுத்தி ரிமோட் போன்ற மெல்லிய பிளாஸ்டிக்காலானா பொருட்களை கூட ஊடுருவி உள்ளே உள்ளவற்றை படம் எடுத்துவிட முடியும்.
இந்த கேமிராவை பயன்படுத்தி மனிதர்களின் ஆடைகளை ஊடுருவி படம் எடுக்க முடியும் என்பது தான் அதிர்ச்சிகரமான விஷயம் ஆகும்.. இதனால் பலரின் அந்தரங்கம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
குறிப்பாக, பெண்களுக்கு பெரும் ஆபத்தான தொழில் நுட்பம் ஆகும். ஆனால் அதிலும் சில கட்டுப்பாடுகளுடன் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த கட்டுப்பாடுகள் இல்லா விட்டால் எல்லா அந்தரங்கமும் பறிபோகும் ஆபத்து உள்ளது.
கட்டுப்பாடுகள் தேவை
தீயணைப்பு வீரர்கள் அகச்சிவப்பு கதிர்கள் கேமிராக்களை கொண்டு தான் தீப்பற்றிய கட்டிடங்களில் புகை வரும் இடங்களுக்குள் சிக்கியவர்களை கண்டுபிடிக்கிறார்கள்.
ஆனால். இதை பயன்படுத்த சில கட்டுப்பாட்டுகள் உள்ளது. ஆபத்தான இடங்களில் பயன்படுத்த முடியும்.
எனவே பெண்களுக்கு ஆபத்தை விளை விக்ககூடிய இந்த தொழில் நுட்பத்திற்கு எதிர் காலத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.