உலகில் மன அமைதிக்காக உதவும் டிஜிட்டல் டிடாக்ஸ் எளிய வழிகள் ! - EThanthis

Recent Posts


உலகில் மன அமைதிக்காக உதவும் டிஜிட்டல் டிடாக்ஸ் எளிய வழிகள் !

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
தொழில்நுட்பம் நமது அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறி விட்டது. டிஜிட்டல் மாற்றத்தை சரியாக பயன்படுத்தினால் கம்பளி பூச்சியானது பட்டாம்பூச்சியாக மாறுவது போன்றதாக இருக்கும்.
உலகில் மன அமைதிக்காக உதவும் டிஜிட்டல் டிடாக்ஸ் எளிய வழிகள் !
நாம் ஸ்மார்ட் ஃபோன்கள் போன்ற கேஜெட்களை பயன்படுத்துவதை தவிர்த்து விட்டு வாழும் வாழ்க்கையை தற்போது கற்பனை செய்வது கடினம். 
 
நமது நண்பர்களுடன் தொடர்பில் இருப்பது, புதிய விஷயங்களைக் கற்று கொள்வது அல்லது அலுவலகப் பணிகளைச் செய்வது 
 
போன்றவற்றுக்கு நொடியில் உதவி, வாழ்க்கையை எளிதாக்கி இருக்கும் ஒரு வரப்பிரசாதமாக தொழில்நுட்பம் நமக்கு இருக்கிறது.
 
ஆனால் டிஜிட்டல் மயமாக்கலின் எதிர்மறை விளைவுகளும் ஒரு பக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. 
 
இதில் மிகவும் முக்கியமான விளைவுகளில் ஒன்று, தன்னைத் தானே நிதானப்படுத்தி கொள்வதில் ஏற்பட்டுள்ள சிரமம். 
எந்நேரமும் டிவைஸ்களுடனே வாழ்வதன் மூலம் வாழ்க்கையின் பல உண்மையான மகிழ்ச்சிகளை நம்மில் பலர் மிஸ் செய்கிறோம். 
 
இந்த சூழலில் பல உளவியலாளர்கள் அமைதி மற்றும் ஓய்வின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி வருகின்றனர். 
 
ஏனெனில் இது உடல் மற்றும் உளவியல் ரீதியாகவும் பல நன்மைகளை தரும். போதுமான ஓய்வு எடுக்காமல் டிவைஸ்களுடன் நேரத்தை கழித்து கொண்டிருந்தால் இ
 
ந்த டிஜிட்டல் மயமாக்கல் சகாப்தத்தில் வாழ்வது நமது மன நலத்திற்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.
 
இன்றைய உலகில் அமைதியாக இருக்க உதவும் முக்கிய மற்றும் எளிய வழிகள்.
 
கவனம் மற்றும் நினைவு 
உலகில் மன அமைதிக்காக உதவும் டிஜிட்டல் டிடாக்ஸ் எளிய வழிகள் !
நம்மை நாமே அமைதியாக வைத்து கொள்ள எப்போதும் கவனமாக இருப்பது முக்கியம். பல நேரங்களில் நாம் ஃபோனை எதற்காக ஸ்க்ரோல் செய்கிறோம் என்று தெரியாமலே செய்து கொண்டிருப்போம். 
 
எனவே நீங்கள் தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் விஷயங்களில் இருந்து ஓய்வு எடுத்து, தற்போதைய தருணத்தை பற்றி முழுமையாக கவனத்துடன் இருங்கள். 
 
இது நமது செயல்களையும் சூழலையும் முழுமையாக செயல்படுத்தும் திறனில் ஒன்றாகும்.

ஊறுகாய்யை அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் !

ஆழ்ந்த சுவாசம்
உலகில் மன அமைதிக்காக உதவும் டிஜிட்டல் டிடாக்ஸ் எளிய வழிகள் !
டிஜிட்டல் உலகில் நாம் மூழ்கி நிஜ வாழ்க்கையுடனான தொடர்பை இழக்கும் போது, அமைதியாக இருப்பதற்கான ஒரு எளிய வழி ஆழமாக சுவாசிப்பது தான். 
 
எளிதாக தோன்றினாலும் இதில் கவனம் செலுத்த முடியாத அளவுக்கு பல நேரங்களில் டிஜிட்டல் உலகம் நம் கவனத்தை சிதறடிக்கும். 
 
எனவே டிவைஸ்களை பயன்படுத்தாத போது குறைந்த பட்சம் 1 நிமிடம் ஆழ்ந்து சுவாசிப்பதில் கவனம் செலுத்த பயிற்சி செய்யுங்கள்.
 
டிஜிட்டல் டிடாக்ஸ்
உலகில் மன அமைதிக்காக உதவும் டிஜிட்டல் டிடாக்ஸ் எளிய வழிகள் !
நாம் ஏற்கனவே கூறியபடி கேஜெட்டுகள் இல்லாத நம் அன்றாட வாழ்வை கற்பனை செய்வது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. 
 
இருப்பினும் இவற்றை தொடர்ந்து பயன்படுத்துவதில் இருந்து சிறிது நேரம் ஓய்வு எடுப்பது முக்கியம். இந்த ஓய்வு நமது மன ஆரோக்கியத்திற்கு மிகவும் உதவும். 
 
ஒரு நபர் ஸ்மார்ட் போன்கள் அல்லது கணினிகள் போன்ற மின்னணு சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும் இந்த டிஜிட்டல் டிடாக்ஸ் காலம். 
 
மன அழுத்தத்தைக் குறைக்க அல்லது உடல் ரீதியாக சமூக தொடர்புகளில் கவனம் செலுத்த வைக்கும் சிறந்த வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. மனதை அமைதியாக உணர வைக்கிறது.

சுவையான சிக்கன் ஊறுகாய் செய்வது எப்படி?

இலக்கு
உலகில் மன அமைதிக்காக உதவும் டிஜிட்டல் டிடாக்ஸ் எளிய வழிகள் !
டிஜிட்டல் உலகில் இருப்பதால் நம்மைச் சுற்றி நடக்கும் பல விஷயங்களை உணர முடியாமல் போகிறது. 
 
எனவே அத்தியாவசிய விஷயங்களுக்கு முன்னுரிமை அளிப்பது, இலக்குகளை நிர்ணயிப்பது உள்ளிட்ட செயல்களில் படிப்படியாக ஈடுபட்டு மன அழுத்தத்தை குறைக்கலாம்.
 
வெளி உலகம் 
உலகில் மன அமைதிக்காக உதவும் டிஜிட்டல் டிடாக்ஸ் எளிய வழிகள் !
டிஜிட்டல் உலகமே கதி என்று மூழ்கி இருக்காமல் புத்துணர்ச்சியை அனுபவிக்க தினமும் குறைந்தபட்சம் 2 மணி நேரமாவது வீட்டை விட்டு வெளியே சென்று வாருங்கள். 
 
கேஜெட்களின் பயன்பாட்டிலிருந்து விடுபட்டு உலகை அனுபவிக்க ஒரு வாக்கிங் பயிற்சி கூட உதவும்.
 
பிடித்தது 
உலகில் மன அமைதிக்காக உதவும் டிஜிட்டல் டிடாக்ஸ் எளிய வழிகள் !
சிலருக்கு இசை கேட்பது, புத்தகம் படிப்பது அல்லது நீண்ட நேரம் குளிப்பது போன்றவை அமைதியாக இருக்க உதவுகின்றன. 
 
எனவே டிஜிட்டல் மீடியாவில் இருந்து விலகி உங்களை அமைதி மற்றும் நிம்மதியாக உணர செய்யும் விஷயங்களை செய்வதில் கவனம் செலுத்துங்கள்.

ஊறுகாய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் தெரியுமா?

கேஜெட்கள் மூலம் நாம் பார்க்கும் பல விஷயங்கள் எப்போதும் சரியானவை அல்லது உண்மையானவையாக இருப்பதில்லை. 
 
எனவே அமைதியாக மற்றும் நிதானமாக உணர அடிக்கடி அவற்றை பயன்படுத்துவதில் இருந்து பிரேக் எடுத்து கொள்ள தவறாதீர்கள்.
உலகில் மன அமைதிக்காக உதவும் டிஜிட்டல் டிடாக்ஸ் எளிய வழிகள் ! உலகில் மன அமைதிக்காக உதவும் டிஜிட்டல் டிடாக்ஸ் எளிய வழிகள் ! Reviewed by Fakrudeen Ali Ahamed on February 25, 2022 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 EThanthis All rights reserved
close