மொபைலை அன்லாக் செய்ய திருடர்கள் செய்யும் திருட்டுத் தனம் !
புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..
லைக் பண்ணுங்க... "
மொபைல் தொலைந் தாலோ திருடு போனாலோ வேறு மொபைல் வாங்கிக் கொள்ளலாம் எனக் கடந்து போய்விட முடியாது..
ஸ்மார்ட்போன் என்பது ஒருவரின் தனிப்பட்ட தகவல் களை வைத்திரு க்கும் ஒரு பாது காப்பான பெட்டகம்.
எவ்வளவு தான் பாதுகாப்பு வசதிகள் செயல் படுத்தப் பட்டு இருந்தாலும் கூட நமது கையில் இருக்கும் வரை தான்
பாதுகாப்பு க்கு உத்திர வாதம். கையை விட்டுப் போய் விட்டால் என்ன நடக்கும் என்பது யாருக்குமே தெரியாது.
மொபைல் அன்லாக்
ஒரு வேளை ஒருவரது மொபைல் திருடு போனால் அது கிடைக்கும் கைகளைப் பொறுத்துத் தான் அது திரும்பி வருவதும், வராததும்.
சரி மொபைல் போனால் கூடப் பரவா யில்லை அதிலிரு க்கும் தகவல்கள் தவறான வழியில்
பயன் படுத்தப்பட்டு விடக் கூடாது என்பது தான் இன்றைக்கு பெரும்பாலோரின் மன நிலையாக இருக்கும்.
ஐபோனாக இருந்தாலும், ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போனாக இருந்தாலும் குறைந்த பட்ச செக்யூரிட்டியை
ஆன் செய்து வைத்திரு ந்தால் மட்டுமே மொபைல் தப்பிக்கும். இல்லை யென்றால் சிக்கல் தான்.
யாராவது ஒருவர் ஒரு ஸ்மார்ட்போனை தொலைத்து விட்டால் அதை அன்லாக் செய்வதற்கு பல்வேறு வழிகளைத் திருடர்கள் முயன்று பார்ப்பார்கள்.
பாஸ்வேர்டைப் பெறு வதற்குத் திருடர்கள் தற்போழுது புதுப்புது வழிகளைக் கையில் வைத்திருக் கிறார்கள் என்பதற்கு
உதாரண மாக ஒரு சம்பவம் டெல்லியைச் சேர்ந்த பிரணவ் தீக்ஷித் என்ற நிருபருக்கு நடந்திருக் கிறது.
இரண்டு வாரத்திற்கு முன்பு ஒரு நாள் பைக்கில் வந்த திருடர்கள் பிரணவ்வின் கையில் இருந்த ஐபோனை பறித்துச் சென்றிருக் கிறார்கள்.
அவரது ஐபோன் லாக் செய்யப் பட்டிருந்தது தான் என்றாலும் பாதுகாப்பை அதிகரிக்க ஐகிளவுட்டின் உதவியை நாடியிருக் கிறார்.
ஐகிளவுட் என்பது ஆப்பிளின் ஒரு சேவை. இதன் மூலமாக கிளவுட்ட் ஸ்டோரேஜில் இருக்கும் தகவல் களை எளிதாகக் கையாள முடியும்.
அதற்கு டிவைஸ் இணையத்தோடு இணைக்கப் பட்டிருந்தால் போது மானது.
ஐகிளவுட் மூலமாக மொபைலைக் கண் காணிக்கவும், அதிலுள்ள தகவல்களை அழிக்கவோ, பார்க்கவோ முடியும்.
மொபைல் தொலைந் தவுடன் ஐகிளவுட்டில் லாகின் செய்த பிரணவ் மொபைல் திருடு போனதை குறிப்பிட்டு ' Find My iPhone' என்ற வசதியை ஆன் செய்து வைத்தி ருக்கிறார்.
இந்த வசதியின் மூலமாக ஐபோன் இணையத் தோடு இணைக்கப் பட்டால் அதன் இருப்பிடத்தை அறிந்து கொள்ள முடியும்.
மொபைல் யாரேனும் நல்ல வர்களின் கையில் கிடைத்தால் தொடர்பு கொள்வ தற்காக அவரது மனைவி யின் மொபைல் எண்ணை அதில் குறிப்பிட் டிருக்கிறார்.
ஆனால், அதற்குள்ளாக மொபைலை அன்லாக் செய்வதற் கான முயற்சி களைத் தொடங்கி யிருக்கிறார் கள் திருடர்கள்.
மெசேஜ்
ஒருவாரம் கழித்து அவரது மனைவி யின் மொபைலு க்கு ஒரு மெசேஜ் வருகிறது.
பிரணவ் தீக்ஷித்தின் மொபைல் நியூ டெல்லிக்கு அருகே ஆன் லைனுக்கு வந்ததாக வும்
அந்த இருப்பிடத்தைக் கண்டறி வதற்கு கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும் என்று அந்த மெசேஜில் குறிப்பிடப் பட்டிருந்தது.
கிளிக் செய்து பார்க்கிறார். அது ஐகிளவுட் பக்கத்து க்குச் செல்கிறது.
ஆப்பிள் ஐடியையும் பாஸ்வேர்டை யும் கொடுத்தால் டிவைஸ் இருக்கும் இடத்தை அறிந்து கொள்ளலாம் என்கிறது.
எல்லாமே சரியாக இருப்பது போல தோன்றி னாலும் ஏதோ ஒன்று தவறாக இருப்பதாகத் தோன்று கிறது.
பிரணவு க்கு விஷயம் புரிந்து விட்டது இது நிச்சயம் ஐகிளவுட் பேஜ் கிடையாது, அந்த பேஜின் முகவரியை செக் செய்கிறார்.
'http://icloud.com' என்று இருக்க வேண்டிய இடத்தில் 'maps--icloud.com' என்று இருந்தது.
கிட்டத் தட்ட ஐகிளவுட் பேஜ் போலவே அது பக்காவாக வடி வமைக்கப் பட்டிருந்தது.
அவரிட மிருந்து திருடப் பட்ட ஐபோனின் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டைப் பெறுவதற் காக திருடர்கள் செய்த வேலைதான் அது.
போலியான ஐகிளவுட் சைட்
இதற்காக புதியதாக ஒரு phishing website-ஐ அவர்கள் உருவாக்கி யிருக்கிறார் கள்.
உண்மை யான வெப்சைட் போலவே போலியாக ஒன்றை வடிவமைத்து அதன் மூலமாக தகவல் களைத் திருடும் முறைக்கு phishing என்று பெயர்.
பிரணவ் அவசரத்தில் கவனிக்காமல் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டை யும் கொடுத்திருந் தால்
திருடர்கள் எளிதாக மொபைலை அன்லாக் செய்தி ருப்பார்கள். ``எனக்கு இதைப் பற்றி தெரியும் என்பதால் நான் தப்பி விட்டேன்.
இதைப் பற்றி விவரம் அறியாத வர்கள் என்றால் அவர்கள் இதை நம்பியிருக்கக் கூடும்" என்கிறார் பிரணவ்.
அதன் பிறகும் கூடச் சந்தேகம் வராத அளவுக்கு வெவ்வேறு வடிவங் களில் அவரிடம் இருந்து
பாஸ்வேர்டைப் பெறுவதற்கு திருடர்கள் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருந்திருக் கிறார்கள்.
மொபைலில் பாதுகாப்பு வசதிகள் வளர வளர அதற்கேற்ற வாறு திருடர் களும் தங்களை
அப்டேட் செய்து கொள்கி றார்கள் என்பதற்கு உதாரணமாக அமைந்தி ருக்கிறது இந்தச் சம்பவம்.
இது போன்ற phishing இணைய தளங்கள் இணையம் முழுவதும் வலம் வந்து கொண்டிருக் கின்றன.
அதிகார பூர்வ வெப் சைட்களைப் போலவே வடி வமைக்கப் பட்டிருக்கும் இவை போலியாக உருவாக்கப் படுபவை.
ஆனால், போலி என்பதற் கான எந்த அடையாள மும் அதில் இருக்காது,
இணைய தளத்தின் முகவரியை உன்னிப் பாகக் கவனித்தால் மட்டுமே அதிலுள்ள மாற்றத்தைக் கண்டு பிடிக்க முடியும்.
எடுத்துக் காட்டாக https://www.apple.com/in/ என்ற முகவரி க்குப் பதிலாக https://www.appele.com/in/ என்று போலியான முகவரி யில் அது உருவாக்கப் பட்டிருக்கலாம்.
பெரும் பாலும் முகவரியை நாம் கவனிப்ப தில்லை என்பதால் தகவல் திருடுபவர் களுக்கு இது சாதகமாகி விடுகிறது.
இது போன்ற phishing இணைய தளங்களைத் தவிர்ப்ப தற்கு சில வழிகள் இருக்கின்றன. முகவரியில் HTTPS என்று இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ள லாம்.
பிரவுசர்கள் பாதுகாப் பில்லாத சைட் என எச்சரிக்கை செய்தால் அதை விட்டு உடனே வெளியேறி விட வேண்டும்.
Two-factor authentication வழி முறையைப் பின்பற்ற லாம். தேவையற்ற பாப்-அப்களை க்ளிக் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.