Smart Phone ல் ஏற்படும் பிரச்சினைகளை ஆய்வு செய்ய TestM !
புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..
லைக் பண்ணுங்க... "
நம்முடைய இருசக்கர வாகணம் அல்லது நான்கு சக்கர வாகணம் போன்றே நாம் நம்முடைய வாழ்க்கை யின
அத்தியாவசிய பொருளாக பயன்படுத்தி வரும் நம்முடைய திறன் பேசியும் அவ்வப்போது இயக்கம் நின்று போதல்
அல்லது மெதுவாக இயங்குதல் என்பன போன்ற பல்வேறு பிரச்சினை களை எதிர் கொண்டு நமக்கு அளவற்ற எரிச்சலையும் வெறுப்பையும் உருவாக் கிடும்
அவ்வாறான நிலையில் இந்த TestMஎனும் பயன் பாட்டினை கொண்டு திறன் பேசியின்
உள்ளுறுப்பு களை தனித்தனி யாக கழற்றி எந்த பகுதியி னால் பிரச்சினை ஏற்படு கின்றது என
பார்த்திடாமல் அல்லது சிறப்பு கருவிகளை கொண்டு ஆய்வு செய்திடாமல் திறன் பேசி முழுவது மாக ஆய்வு செய்து
என்ன பிரச்சினை எங்கு உருவானது என கண்டு பிடித்து சரிசெய்து கொள்ள முடியும்
இந்த பயன்பாடு ஆண்ட்ராய்டு ,ஐஓஎஸ் இயக்கமுறைமை பயன்படும் 6500 வகைகளின் திறன் பேசிகளிலும் செயல்படும் திறன் மிக்கது
இந்த பயன் பாட்டினை நம்முடைய திறன் பேசியில் பதிவிறக்கம் செய்து நிறுவுகை செய்து செயல் படுத்திடும் போது quick test ,full test
ஆகிய இரண்டு வாய்ப்பு களில் முதல் வாய்ப்பினை தெரிவு செய்தால் திறன் பேசியில்
உள்ள கேமரா, ஸ்பீக்கர் போன்ற முக்கிய உறுப்புகளை மட்டும் விரைவாக பரிசோதித்து பார்த்து அவைகளின் நிலையை காண்பிக்கும்
இரண்டாவது வாய்ப்பானது அவை மட்டு மல்லாது திறன் பேசியில் உள்ள அனைத்து வசதி வாய்ப்பு களையும்
முழுவது மாக அலசி ஆராய்ந்து எந்தப் பகுதியில் பிரச்சினை உள்ளது என கூறும் நம்முடைய கையிலிருந்து தவறி கீழே விழுந்த
நம்முடைய திறன் பேசி யின் உள்ளுறுப்பு களில் ஏற்பட்ட பாதிப்பை அந்த திறன் பேசியை கழற்றி பார்க்கா மலேயே
அல்லது சிறப்பு கருவிகளை கொண்டு ஆய்வு செய்திடா மலேயே இந்த TestM எனும் பயன் பாட்டினை கொண்டு
திறன் பேசி முழுவது மாக ஆய்வு செய்து என்ன பிரச்சினை எங்கு உருவானது என
இதனுடைய ஆய்வின் முடிவில் உருவாகும் ஆய்வறி க்கையின் வாயிலாக கண்டு பிடித்திட முடியும்
மேலும இந்த ஆய்வறிக் கையை இந்த பயன்பாடானது நாம் விரும்பும் மொழிகளில் வழங்கும் திறன் மிக்கது
இந்த TestM எனும் பயன் பாட்டினுடைய ஆய்வறிக்கை யின் வாயிலாக நம்முடைய திறன் பேசியின் எந்த பகுதியில் என்ன பிரச்சினை ஏற்பட்டுள்ளது
என அறிந்து கொண்டு அந்த பகுதியை மட்டும் பிரித்து சரிசெய்து கொள்ள இந்த பயன்பாடு பேருதவி யாக விளங்கு கின்றது