ஆங்கிலத்தில் எழுத குறிப்புகள் ! - EThanthis

Recent Posts


ஆங்கிலத்தில் எழுத குறிப்புகள் !

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
நாம் அனைவருமே, ஆங்கிலத்தில் பேச, எழுத விரும்புகிறோம். அயல் மொழியாக இல்லாமல், ஆங்கிலம் இரண்டாவது மொழியாக நம்முடன் கலந்து விட்டது.


இருப்பினும் ஆங்கில மொழியைப் பிழை இன்றி எழுத நமக்குக் கல்லூரி படிப்பு முழுமையாகக் கை கொடுப்ப தில்லை. 
மொழியைத் தொடர்ந்து பயன்படுத்தி னால் மட்டுமே, தெளிவாக அதனைக் கையாள முடியும்.

இந்த வகையில், நாம் பயன்படுத்தும் போது, குறிப்பாக எழுதும் போது, நமக்குப் பல சந்தேகங்கள் எழுதுவது இயற்கையே. 

இணையத்தில் ஆங்கில மொழிப் பயன்பாடு குறித்து குறிப்புகள் தருவதற்குப் பல தளங்கள் உள்ளன.

அண்மையில் இத்தகைய தளம் ஒன்றினைப் பார்க்க நேரிட்டது. அந்த தளம் குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம். அத்தளத்தின் பெயர் Daily Writing Tips. 
தளம் கிடைக்கும் முகவரி dailywritingtips.com
ஆங்கில மொழி இலக்கணம், டெக்ஸ்ட்டில் நிறுத்தற் குறிகள், சரியான எழுத்து பயன்படுத்தல், கதை எழுதுதல் 

மற்றும் குறிப்பிட்ட வகை ஆவணங் களைத் தயாரித்தல் ஆகியவை குறித்து இந்த தளம் குறிப்புகளைத் தருகிறது.

இந்த தளத்தில் நுழைந்தவுடன், இதன் இடது பக்கத்தில், எழுதுவது குறித்த குறிப்புகள் கிடைக்கின்றன. 

வலது பக்கத்தில், உதவிக் குறிப்புகள் வகைகள் வாரியாகத் தரப்படு கின்றன.

அவை Business Writing, Mistakes, Expressions, Fiction Writing, Freelance Writing, General, Grammar, Grammar 101, Misused Words, Punctuation, Spelling, Style, Vocabulary, Word of the Day, Writing Basics, மற்றும் Usage Review என வகைப் படுத்தப் பட்டுள்ளன.

இந்த வகைப் பிரிவுக்கு மேலாக, தேடல் மெனு தரப்பட் டுள்ளது. இதில் நாம் நமக்குத் தேவைப்படும் பிரிவினை உள்ளீடு செய்து தேடி குறிப்புகளைப் பெறலாம்.

எடுத்துக் காட்டாக, Participles எனக் கொடுத்து, அவற்றைப் பயன் படுத்துவதில் ஏற்படும் சந்தேகங் களுக்குத் தீர்வுகளைப் பெறலாம்.

வகைப் பிரிவிற்குக் கீழாக, ஆங்கில மொழிப் பயன்பாடு குறித்த கட்டுரைகள் தரப்படு கின்றன. 
எடுத்துக் காட்டாக சில: 10 rules for writing numbers, Passed Vs Past, Creative Writing 101, 44 Resume writing tips, Among Vs Amongst என இந்தப் பட்டியல் நீள்கிறது.

மொத்தத்தில் நமக்கு ஆங்கில மொழிப் பயன்பாட்டில் ஏற்படும் அனைத்து சந்தேகங் களுக்கும் இந்த தளம் ஒரு தீர்வினைத் தருகிறது. 

சந்தேகம் இல்லை என்றாலும், ஆங்கில மொழிப் பயன்பாடு குறித்து கற்றுக் கொள்ளவும்

இந்த இணைய தளம் பயனுள்ள ஒன்று. இன்றே பார்த்து, வீட்டில் உள்ள சிறுவர்களு க்கும், மாணவ ர்களுக்கும் அறிமுகப் படுத்துங்கள்.
ஆங்கிலத்தில் எழுத குறிப்புகள் ! ஆங்கிலத்தில் எழுத குறிப்புகள் ! Reviewed by Fakrudeen Ali Ahamed on September 25, 2018 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 EThanthis All rights reserved
close