கூகுள் வாய்ஸ் சர்ச் ஹிஸ்டரியை டெலிட் செய்வது எப்படி? - EThanthis

Recent Posts


கூகுள் வாய்ஸ் சர்ச் ஹிஸ்டரியை டெலிட் செய்வது எப்படி?

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
கூகுளின் முக்கிய நோக்கம் உங்களுக்கு நல்ல தேடல் முடிவுகளை வழங்கி சேவை செய்ய வேண்டும் என்பது தான். 
எனினும், கூகுள் வெளிப்படையாக ஆன்லைனில் எப்படி உங்கள் கூகுள் வாய்ஸ் சர்ச்களை சேமித்து வைக்க வழிவகை செய்துள்ளதோ 

அதே போல கூகுள் உங்கள் அனைத்து குரல் தேடல் தரவுகளையும் நீக்கவும் வழிவகை செய்துள்ளது. 
அப்படியாக, உங்களு க்கும் கூகுளுக்கும் தவிர வேறு யாருக்குமே உங்களின் கூகுள் வாய்ஸ் சர்ச் தரவு தெரியாக் கூடாது 

என்று நீங்கள் விரும்பினால், உங்கள் குரல் தேடல் தரவுகளை நீங்கள் நீக்க விரும்பினால், 

தமிழ் கிஸ்பாட் உங்களுக்காக வழங்கும் கீழ்வரும் எளிய வழிமுறைகளை பின்பற்றவும்.

கூகுள் வாய்ஸ் சர்ச் ஹிஸ்டரியை டெலிட் செய்வது எப்படி.?

1. கூகுளில் 'மை ஆக்டிவிட்டி பேஜ் பார் வாய்ஸ் அண்ட் ஆடியோ'வை திறக்கவும்.

2. உங்கள் பாஸ்வேர்ட்டை பதிவு செய்து உங்கள் கூகுள் அக்கவுண்ட்டி ற்குள் நுழையவும்.

3. இப்போது நீங்கள் உங்கள் 'வாய்ஸ் சர்ச் மற்றும் ஆடியோ சர்ச் ஹிஸ்டரி'யை காண்பீர்கள்

4. அனைத்திற்கும் மேல் மூன்று செங்குத்து புள்ளிகள் இருப்பதை பார்க்கலாம் (ப்ளே நியூ பாட்டனுக்கு மேலே) அதை கிளிக் செய்யவும்.

5. 'டெலிட்' பட்டனை கிளிக் செய்யவும். இதன் மூலம் நீங்கள் தனிப்பட்ட முறையில் ஆடியோ கிளிப்ஸ் களை டெலிட் செய்யலாம்.

6. கூகுள் சர்வரில் இருந்து அனைத்து ஆடியோ கிளிப்ஸ் களையும் 'டெலிட்' செய்ய 'டெலிட் ஆக்டிவிட்டி' கிளிக் செய்யவும்.

7. 'டெலிட் பை டேட்' என்பதின் கீழே 'டூடே' என்பதை கிளிக் செய்யவும். இப்போது ஒரு டிராப்-டவுன் பாக்ஸ் திறக்கும்

8. அதில் 'செலக்ட் ஆல் டைம்' ஆப்ஷன் தேர்வு செய்யவும். 9. இறுதியாக 'டெலிட்' கிளிக் செய்யவும். 
இப்போது உங்களின் அனைத்து வாய்ஸ் சர்ச் ஹிஸ்டரியும் அழிக்கப்படும்.

உங்கள் குரல் தேடல்களை கூகுள் பதிவு செய்யாமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்.?

1. கூகுள் மை ஆக்டிவிட்டி கண்ட்ரோல்ஸ் பக்கத்திற்கு செல்லவும்

2. ஸ்க்ரால் டவுன் செய்து 'வாய்ஸ் & ஆடியோ ஆக்டிவிட்டி' ஆப்ஷனை கிளிக் செய்யவும்

3. இறுதியாக வாய்ஸ் & ஆடியோ ஆக்டிவிட்டி அருகே உள்ள ஸ்விட்ச்தனை 'ஆப்' செய்யவும்.
கூகுள் வாய்ஸ் சர்ச் ஹிஸ்டரியை டெலிட் செய்வது எப்படி? கூகுள் வாய்ஸ் சர்ச் ஹிஸ்டரியை டெலிட் செய்வது எப்படி? Reviewed by Fakrudeen Ali Ahamed on September 25, 2018 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 EThanthis All rights reserved
close