தண்ணீர் குடிக்க மறக்கிறீர்களா? நினைவூட்ட ஒரு செயலி ! - EThanthis

Recent Posts


தண்ணீர் குடிக்க மறக்கிறீர்களா? நினைவூட்ட ஒரு செயலி !

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது எல்லோரு க்கும் தெரிந்ததுதான்.
ஆனால் நாம் தேவையான அளவு தண்ணீர் குடிப்பதை உறுதி செய்து கொள்வது எப்படி?

வேலை பளு, மறதி என பல காரணங்க ளினால் உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் குடிக்காமல் இருக்கும் நிலையை எப்படி தவிர்ப்பது? 

இந்த கேள்வி உங்கள் மனதிலும் இருந்தால், அதற்கான பதில் அழகான செயலி வடிவில் இருக்கிறது தெரியுமா? 
கழுகில் பறந்து வந்த திருமண ஜோடி !
ஆம், மறக்காமல் தண்ணீர் குடிக்க நினைவூட்டு வதற்காக என்றே 'வாட்டர் யுவர் பாடி' செயலி உருவாக்கப் பட்டுள்ளது. 


ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோனில் செயல்படும் இந்த செயலி நீங்கள் எப்போ தெல்லாம் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதை நினை வூட்டுகிறது. 




இதை கச்சிதமாக செய்ய,  முதலில் இந்த செயலியில் உங்கள் உடல் எடையை சமர்ப்பிக்க வேண்டும். 



அதனடிப் படையில் உங்களுக்கு தேவை யான தண்ணீர் அளவை அது தீர்மானித்துக் கொள்கிறது. 



அடுத்த தாக செயலியில் உள்ள தண்ணீர் பாட்டில் மற்றும் கிளாஸ்களின் அளவை தேர்வு செய்ய வேண்டும்.

 
இந்த அளவை கொண்டு நீங்கள் ஒவ்வொரு வேளையும் பருக வேண்டிய தண்ணீரின் அளவை செயலி புரிந்து கொண்டு, 

அதற்கான நேரம் வந்ததும் சரியாக நினை வூட்டும். செயலி யில் தோன்றும் கிளாஸ் அளவு பொருத்த மாக இல்லை என்றால், 

உங்களிடம் உள்ள கிளாஸ் அளவை குறிப்பிடு வதற்கான வசதியும் இருக்கிறது. 

கிளாஸ் அளவை மட்டும் அல்லாமல், எப்போது தண்ணீர் குடிக்க துவங்குகி றீர்கள், 
நாள் முழுவதும் எச்சரிக்கை செய்யப்பட வேண்டுமா போன்ற விவரங் களையும் நாமே செட் செய்து கொள்ளலாம். 

காலையில் 10 மணிக்கு முதல் கிளாஸ் தண்ணீர் குடித்தீர்கள் என்று வைத்துக் கொள்வோம் 

அதன் பிறகு உங்களுக்கு நினைவு இருக்கிறதோ இல்லையோ இந்த செயலி 

அடுத்ததாக எப்போது தண்ணீர் குடிக்க வேண்டும் என நினைவூட்டும். கோடை காலம் என்றால் 

அடிக்கடி தாகம் எடுத்துக் கொண்டே இருக்கும் என்பதால் தண்ணீர் குடிக்க மறக்க மாட்டோம். 

ஆனால் மற்ற காலங்களில் தேவை யான அளவு தண்ணீர் குடிக்காமல் இருக்கும் வாய்ப்பு இருக்கிறது.
ஆனால் இந்த செயலியை ஸ்மார்ட் போனில் வைத்தி ருந்தால் அது உற்ற நண்பன் போல 

சரியான நேரங்களில் நினைவூட்டிக் கொண்டே இருக்கும். 

தண்ணீர் குடிப்பது இயல்பான தேவையாக இருந்தாலும் தினமும் போதுமான அளவு 

தண்ணீர் குடிப்பது என்பது ஒரு பிரச்னை யாகவே இருக்கிறது. சீரான அளவு 

தண்ணீர் குடிப்பது உடல் ஆரோக்கி யத்திற்கு அவசியம் என மருத்துவர்கள் வலியுறுத்தும் நிலையில்,  

இதற்காக என்றே ஒரு செயலி இருப்பது நல்ல விஷயம் தான்.
ஆண்ட்ராய்டில் தரவிறக்கம் செய்ய: Download
தண்ணீர் குடிப்பதை மறக்காமல் இருக்க உதவுவதோடு அதை கொஞ்சம் சுவாரஸ்ய மானதாக வும் ஆக்குகிறது இந்த செயலி. 
அத்துடன் தண்ணீர் அளவு பற்றிய விவரங் களையும் வரைபட அறிக்கை யாக தந்து அசத்துகிறது. 

எனவே பிட்ன்ஸ் செயலிகள் பட்டியலில் இந்த செயலி யையும் சேர்த்துக் கொள்ளலாம்.
தண்ணீர் குடிக்க மறக்கிறீர்களா? நினைவூட்ட ஒரு செயலி ! தண்ணீர் குடிக்க மறக்கிறீர்களா? நினைவூட்ட ஒரு செயலி ! Reviewed by Fakrudeen Ali Ahamed on December 21, 2018 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 EThanthis All rights reserved
close