சிகிச்சையில் மலர்ந்த திருமணம் - குழந்தை பெற நிதி திரட்டிய ஃபேஸ்புக் நண்பர்கள் ! - EThanthis

Recent Posts


சிகிச்சையில் மலர்ந்த திருமணம் - குழந்தை பெற நிதி திரட்டிய ஃபேஸ்புக் நண்பர்கள் !

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
ஃபேஸ்புக் நண்பர்கள் மூலம் கிடைத்த நிதியைக் கொண்டு, பிரிட்டனைச் சேர்ந்த தம்பதியினர் செயற்கைக் கருவூட்டல் மூலம் குழந்தை பெற்றுள்ளனர். புற்று நோயால் பாதிக்கப்பட்ட தம்பதியினர் மரிஷா சாப்ளின் (26), ஜான் ஹிப்ஸ் (29). 
இருவரும் சிகிச்சைக் காகச் சந்தித்த இடத்தில் காதல் மலர்ந்தது. திருமணம் செய்து கொண்டனர். புற்று நோய்க்கான சிகிச்சை எடுத்துக் கொண்டிருந் ததால், இயல்பாகக் குழந்தை பெற மரிஷா வின் உடல் ஒத்துழைக்க வில்லை.

இதனால் செயற்கைக் கருவூட்டல் ( ஐவிஎஃப்) முறையில் குழந்தை பெற முடிவு செய்தனர். அதன் படியே முதல் பெண் குழந்தை யையும் பெற்றெடுத்தனர்.

இரண்டாவது முறை குழந்தை பெற ஆசைப் பட்டவர்களு க்கு நிதி தடங்கலாய் இருந்தது. குறிப்பிட்ட ஃபேஸ்புக் குழுவைச் சேர்ந்த சில நண்பர்கள், இது குறித்துக் கேள்விப் பட்டனர்.

மரிஷாவுக்காக ரகசியமாக நிதி திரட்டினர். சுமார் 2,000 பவுண்டுகள் (சுமார் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம்) சேர்ந்தன. அதை இதுவரை சந்தித்திராத மரிஷாவுக்கு அனுப்பினர். ஐவிஎஃப் மூலம் கருவுற்றார் மரிஷா.

அதையடுத்து கடந்த சனிக்கிழமை அன்று சிசேரியன் மூலம் பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார் மரிஷா.
இது குறித்துப் பேசிய மரிஷா, ’’அறுவை சிகிச்சை முடிந்தவுடன் குழந்தை பிறந்த கையோடு, என் ஃபேஸ்புக் நண்பர் களுக்கு இஸ்லா பிறந்த செய்தியைச் சொன்னேன்.

இந்த உணர்வு அற்புதமானது. இதுவரை சந்திக்கவே செய்யாத நண்பர்கள், எங்களுக் காக இவ்வளவு பெரிய தொகையை அளித்தது ஆச்சர்யமாக இருக்கிறது.

எனக்காக நிதியுதவி செய்தவர் களுக்கு நன்றி உடையவ ளாக இருப்பேன்’’ என்று நெகிழ்ந்தார்.
சிகிச்சையில் மலர்ந்த திருமணம் - குழந்தை பெற நிதி திரட்டிய ஃபேஸ்புக் நண்பர்கள் ! சிகிச்சையில் மலர்ந்த திருமணம் - குழந்தை பெற நிதி திரட்டிய ஃபேஸ்புக் நண்பர்கள் ! Reviewed by Fakrudeen Ali Ahamed on December 31, 2018 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 EThanthis All rights reserved
close