எப்படி ஆண்ட்ராய்டு இயங்கு தளத்தில் கூகுள் தேடலை அழிப்பது?
புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..
லைக் பண்ணுங்க... "
ஆண்ட்ராய்டு இயங்கு தளத்தில் நீங்கள் மேற்கொண்ட கூகுள் தேடல்களை, உங்களது அனுபவத்தை மேம்படுத்த கூகுள் சேமித்து வைக்கும். இவ்வாறு சேமிக்கப்பட்ட தேடல்களை அழிப்பது எப்படி?
உலகின் பிரபல தேடுப்பொறி சேவை வழங்கும் நிறுவனமான கூகுள், ஆண்ட்ராய்டு இயங்கு தளத்தில் அதன் வாடிக்கை யாளர்கள் மேற்கொள்ளும் தேடல்களை சேவை மேம்பாட்டு காரணங் களுக்காக சேமித்து வைக்கும்.
முன்னதாக கூகுள் சர்ச் செயலியை மேம்படுத்திய கூகுள் உங்களது தேடல்களை ஸ்கிரீன் ஷாட் முறையில் சேமிக்க துவங்கி யுள்ளது.
செயலியை திறந்ததும், கடிகாரம் போன்ற ஐகான் திரையின் கீழ் காணப்படும் இதனை கிளிக் செய்ததும், உங்களது தேடல்கள் ஸ்கிரீன்ஷாட் முறையில் சேமிக்கப் பட்டிருப்பதை காண முடியும்.
இந்த செயலி உங்களது அனைத்து தேடல்களையும் காண்பிக்கும். இங்கு வலது புறமாக ஸ்வைப் செய்து, தேடல்களை முழுமையாக பார்க்க முடியும்.
இந்த அம்சம் சிலருக்கு பயனுள்ளதாக தெரிந்தாலும், சிலர் பயனற்றதாக நினைக்க லாம். அவ்வாறா னவர்கள் தங்களது தேடல்களை அழிக்கும் வழி முறைகளை தொடர்ந்து பார்ப்போம்.
ஸ்கிரீன் ஷாட்களை அழிக்க கூகுள் செயலியை திறந்து, அதில் காணப்படும் ஹிஸ்ட்ரி ஐகான் கிளிக் செய்ய வேண்டும்.
இனி உங்களது சாதன த்தில் கடந்த ஏழு நாட்களில் மேற்கொண்ட தேடல்கள் காணப்படும். இதில் ஸ்வைப் செய்து ஸ்கிரீன்ஷாட்களை அழிக்க முடியும்.
ஸ்கிரீன் ஷாட்களை அழிப்பது மட்டுமின்றி இந்த அம்சத்தையும் முழுமையாக டிசேபிள் செய்ய முடியும்.
இதை செயல்படுத்த மெயின் ஸ்கிரீன் சென்று இடது புறத்தின் மேலே காண் பிக்கப்படும் மூன்று புள்ளிகளை கிளிக் செய்ய வேண்டும். இனி செட்டிங்ஸ் சென்று அக்கவுண்ட்ஸ் மற்றும் பிரைவசி ஆப்ஷன் செல்ல வேண்டும்.
இவ்வாறு செய்தபின் மற்றொரு திரையில் காணப்படும் எனேபிள் ரீசன்ட் ஆப்ஷனை ஆஃப் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தபின் ஸ்கிரீன் ஷாட்கள் சேமிக்கப் படாது.