'வாட்ஸ் அப் குழு'வை நிர்வகிப்பவரா நீங்கள்? உசாராய் இருங்கள் ! - EThanthis

Recent Posts


'வாட்ஸ் அப் குழு'வை நிர்வகிப்பவரா நீங்கள்? உசாராய் இருங்கள் !

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
புதுப்புதுச் செய்தி களாக உலவும் வதந்தி களையோ, உளறல் களையோ விட்டு விடாமல், நிஜ உலகத்தோடு அவற்றை சம்பந்தப் படுத்துகி றோம். 
 
"ஹேய் மச்சி, வாட்ஸ் அப் இன் வாட்ஸப்?" என்பது தான் பெரும் பாலான இளை ஞர்களின் முதல் கேள்வியாக இருக்கிறது. 

வளர்ந்து வரும் தொழில் நுட்ப உலகில், நமக்குத் தெரியாமலே நம்மை இணைத்துக் 

கொள்ளும் ஏராளமான வாட்ஸப் க்ரூப்பில், நாமும் இணைந்தே இருக்கிறோம். 


புற்றீசல் கணக்காய்ப் பெருகிக் கிடக்கும் குழுக்கள் பலவற்றில் இருந்து ஏராளமான 

செய்திகள் குப்பைக ளாகத் தோன்றிக் கொண்டே இருக்கின்றன. 

புதுப்புதுச் செய்திகளாக உலவும் வதந்தி களையோ, உளறல் களையோ விட்டு விடாமல், நிஜ உலகத்தோடு அவற்றை சம்பந்தப் படுத்துகி றோம். 
சட்ட அமலாக்க மையங் களும், சைபர் சட்ட வல்லுனர் குழுக்களும், இந்தியாவில் நடை முறையில் இருக்கும் 

இணையக் குற்றம் தொடர்பான சட்டங்கள் தெளி வற்றதாக இருப்பதைச் சுட்டிக் காட்டுகின்றன. 

இதனாலேயே ஒரு செய்திக் கான பொறுப்பும் முக்கியத் துவமும் மறுக்கப் படுகிறது. 

சைபர் குற்றங்கள் குறித்து சில வழக்குகளே பதியப் படுகின்றன. 
 
இவற்றைப் பற்றிய தெளிவான புரிதல் இல்லாம லேயே, தொழில் நுட்பம் தவறான வழியில் பயன் படுத்தப் படுகிறதா? 

இதோ, நிபுணர்கள் விக்கி ஷா மற்றும் விஜய் முகி ஆகியோர் அளித்த விளக்கங் களின் சுருக்கமான வடிவம்: 

ஏன் எப்பொழுதும் கடைசியில் அட்மின்களே பலிகடா ஆக வேண்டி யிருக்கிறது?

விஜய்:  
பெரும் பாலான இணைய குற்றவியல் வழக்குகளில், சர்ச்சைக் குரிய பதிவுகள் 

எங்கே உருவா கின்றன என்பதைக் கண்டு பிடிக்க முடியாமல் காவல்துறை திணறுகிறது. 
அந்த குறிப்பிட்ட செய்தி பரவிய வாட்ஸப் குழுவின் உறுப்பினர் களின் செயலுக்கு, வாட்ஸ் அப் நிர்வாகியே பொறுப்பேற்க வேண்டிய தாகிறது. 

அதே சமயம் உறுப்பினர் களால் பதியப்படும்/ பகிரப்படும் கருத்து களையும், 

பேச்சுக் களையும் படங்களையும் கட்டுப் படுத்தும் முழுப் பொறுப்பும் நிர்வாகி யுடையதே என்பதை மறக்கக் கூடாது. 

விக்கி:  

இதை இன்னொரு விதமாகவும் பார்க்கலாம். தனிநபர் ஒருவரால் பகிரப்படும் கருத்துக்கு, 

குழுவின் நிர்வாகி பொறுப்பேற்க முடியாது. ஃபேஸ்புக் குழுக்க ளைப் போல், 

தனிநபரின் பதிவு எல்லையைக் கட்டுப் படுத்தும் வசதிகள் வாட்ஸ் அப்பில் இருப்ப தில்லை. 

சம்பந்தப்பட்ட தனிநபர் சார்ந்தே அதைப் பார்க்க வேண்டும்.உச்ச நீதி மன்றத்தின் அறிவுரையின் பேரில் 

தகவல் தொழில் நுட்ப சட்டம் 2000, 66- A பிரிவுக்கு பதிலாக இந்திய தண்டனைச் சட்டம் 1860 பிரிவு பின்வரும் கூற்றுகளை முன்னெடு க்கிறது. 

1. சமூக ஊடகங்களில் நடக்கும் குற்றங்களின் தன்மைக் கேற்ப விசாரணை மற்றும் தண்டனை முறைகள் மாறும். 

2. பதியப்பட்ட பதிவு / கருத்துக் களைப் பொறுத்து, அது இந்திய தண்டனைச் சட்டம் 

அல்லது தகவல் தொழில் நுட்பச் சட்டத்துக்கு உட்பட்டதா என்று முடிவு செய்யப்படும். 

சர்ச்சைக் குரிய பதிவுகள் மற்ற குழுக்களில் இருந்தோ, மற்றொரு வரிடம் இருந்தோ நமக்குப் பகிரப் பட்டால் என்ன செய்வது? 

விக்கி: 

 மற்றவர்கள் மூலம் ஒரு தகவலைப் பெறுவது குற்றமாகாது. 

ஆனால் ஒருவர், தகவலின் உண்மைத் தன்மையை அறியாமல், அதனை மற்றவர்க ளுக்கு அனுப்பினாலோ, காண்பித்தாலோ அது குற்றமாகும். 

தவறான செய்தியைப் பகிர்வதன் மூலம் சம்பந்தப் பட்டவரு க்குத் தவறிழை த்தாலோ, 

இழப்பை ஏற்படுத்தி னாலோ, அவர் விசாரணைக்கு உட்படுத்தப் பட்டு, குற்றம் சாட்டப் பட்டவர் ஆவார். 

"குறிப்பிட்ட செய்தி, மற்றவர் களுக்கு தீங்கு விளை விக்கக் கூடியது என்று எனக்குத் தெரிந்திருக்க வில்லை" என்று கூறினால் என்ன நடக்கும்?

விஜய்:  

அது மேலும் கெடுதலையே விளை விக்கும். ஒரு மதுக்கடை நிர்வாகி போலியான 

மது பானத்தைத் தன் வாடிக்கை யாளர்களு க்குக் கொடுத்து, அதனால் யாராவது இறந்து போனால், 

நிர்வாகியே இறப்புக்குப் பொறுப்பேற்க வேண்டும். வெறுமனே மது உற்பத்தி யாளர் மீது குற்றம் சுமத்த முடியாது. அது போலத் தான் இங்கேயும்.
விக்கி:  

சட்டத்தின் முன்னால் ஒருவர், 'அறியாமை யால் இதைச் செய்தேன்' என்று சொல்ல முடியாது.

'எனக்கு வந்ததை அப்படியே பகிர்ந்தேன்' என்றும் கூற முடியாது. 

முடிவில் விசாரணை செய்யும் அதிகாரியே யாரைக் கைது செய்ய வேண்டும் என்று முடிவு செய்வார். 

விக்கி:  

கிடைத் திருக்கும் தகவலை வைத்துக் கொண்டு, சட்டம் - ஒழுங்கை நிலை நாட்ட, பாதுகாப்பு நடவடிக்கை களை எடுப்பார்கள். 
புகார் கொடுப்ப வர்களோ அல்லது தவறான தகவலால் பாதிக்கப் பட்டவர்களோ முதல் சாட்சி யாகக் கருதப் படுவார்கள். 

வாட்ஸ் அப் தகவலின் உள்ளடக் கத்தின் தன்மையைப் பொறுத்து, மற்றவர் களும் புகார் கொடுக்க முடியும். 

விக்கி: 
வாட்ஸ் அப் குழு நிர்வாகி, இந்தியர் அல்லாதவ ராக இருக்கும் பட்சத்தில் கூட, 

அவர்களின் மீது நடவடிக்கை எடுக்க அரசிய லமைப்புச் சட்டத்தில் இடமிருக்கிறது என்பதை மறக்க வேண்டாம். 
'வாட்ஸ் அப் குழு'வை நிர்வகிப்பவரா நீங்கள்? உசாராய் இருங்கள் ! 'வாட்ஸ் அப் குழு'வை நிர்வகிப்பவரா நீங்கள்? உசாராய் இருங்கள் ! Reviewed by Fakrudeen Ali Ahamed on December 20, 2018 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 EThanthis All rights reserved
close