பேஸ்புக் டிஸ்ப்ளே பிக்சர் தரம் உயர்த்த !
புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..
லைக் பண்ணுங்க... "
ஃபேஸ்புக்கில் ப்ரொஃபைல் படத்தை மாற்று வதற்காக அரை நாள் முழுக்க போஸ் கொடுத்து, ஃபில்டர்களில் முக்கியெடுத்து புகைப் படங்களை எடிட் செய்திருப்போம்.
ஆனால் ஃபேஸ்புக்கில் அவற்றை அப்லோடு செய்த பின், பிக்சல் உடைந்து சுமார் மூஞ்சி குமாராக நாம் தெரிவோம்.
இப்படி ஆகாமல் ஃபேஸ்புக்கில் தெளிவான தரத்தில் புகைப் படங்களை அப்லோடு செய்ய சில வழிகள் உள்ளன.
ஃபேஸ்புக் கம்ப்ரெஸ் :
ஃபேஸ்புக்கில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 350 மில்லியன் புகைப் படங்கள் அப்லோடு செய்யப் படுவதாக அந்நிறுவனம் தெரிவி க்கிறது.
இவை அனைத்தும் ஒரிஜினல் அளவில் அப்லோடு செய்யப் பட்டால் சர்வரில் லோடு அதிகமாகி, ஃபேஸ்புக் தளமானது செயலிழந்து விடும்.
எனவே, ஃபேஸ்புக் ஒவ்வொரு புகைப் படத்தின் அளவையும் குறைத்து, தானாகவே அவற்றை கம்ப்ரெஸ் செய்து கொள்ளும்.
புகைப் படங்களின் அளவு கம்ப்ரெஸ் செய்யப் படுவதால் தான், எவ்வளவு தெளிவான புகைப் படங்களும்,
அதிக சைஸ் கொண்ட ஃபைல்களும் கூட தரம் குறைந்தது மாதிரிக் காட்சியளி க்கின்றன.
அதிக சைஸ் கொண்ட ஃபைல்களும் கூட தரம் குறைந்தது மாதிரிக் காட்சியளி க்கின்றன.
720, 920 மற்றும் 2048 ஆகிய பிக்சல் அளவுக ளில் தான் ஃபேஸ்புக் புகைப் படங்களின் அளவை மாற்றி அப்லோடு செய்கிறது.
கவர் ஃபோட்டோவைப் பொறுத்த வரை 851 x 315 என்ற பிக்சல் அளவில் மட்டும் தான் ஃபேஸ்புக் அப்லோடு செய்ய அனுமதி க்கிறது.
எனவே, நாம் அப்லோடு செய்ய விரும்பும் புகைப் படங்களை இந்த ஃபார்மட் டிலேயே எடிட் செய்து, 'சேவ்' செய்து கொள்ள வேண்டும்.
இந்த ஃபார்மட்களில் அப்லோடு செய்யும் போது பொதுவாக புகைப் படங்களின் பிக்சல் உடையாது.
எனவே இனி புகைப் படங்களின் அளவை இதற்கேற்ப மாற்றிப் பின் அப்லோடு செய்யுங்கள்.
எனவே இனி புகைப் படங்களின் அளவை இதற்கேற்ப மாற்றிப் பின் அப்லோடு செய்யுங்கள்.
ஃபேஸ்புக்கில் கவர் ஃபோட்டோவை அப்லோடு செய்யும் போது, 851 x 315 என்ற பிக்சல் அளவில் தான் புகைப் படங்கள் அப்லோடு ஆகும்.
இதன் அளவானது கிலோ பைட்களில் தான் இருக்கும்.
இதன் அளவானது கிலோ பைட்களில் தான் இருக்கும்.
அப்லோடு செய்ய விரும்பும் கவர் புகைப் படத்தின் அளவை 100 KB-க்கு அதிகம் இல்லாத வாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
இப்படிச் செய்வதன் மூலம், புகைப் படங்கள் கம்ப்ரெஸ் ஆகாமல் பார்த்துக் கொள்ளலாம்.
ஃபேஸ்புக் பிரவுசர்
நீங்கள் பிரவுசரில் ஃபேஸ்புக் பயன் படுத்தினால், வழக்கமாக ஸ்டேட்டஸ் எழுதும் இடத்தின் கீழே இருக்கும் 'Photo/Video' ஆப்ஷன் மூலமாகப்
புகைப் படங்களை அப்லோடு செய்வ தற்குப் பதிலாக, 'Photo/Video Album' ஆப்ஷன் வழியாகப் புகைப் படங்களை அப்லோடு செய்யுங்கள்.
மேலே உள்ள படத்தில் இருப்பது போன்ற திரை தோன்றும். அதில் More Options என்பதன் கீழ், 'High Quality' என்பதை டிக் செய்து தேர்ந் தெடுத்துக் கொள்ளுங்கள்.
இப்போது, புகைப் படங்கள் அப்லோடு ஆக கொஞ்சம் நேரம் எடுத்துக் கொள்ளும் என்றாலும், நல்ல தரத்தில் புகைப் படங்கள் அப்லோடு ஆகும்.
ஃபேஸ்புக் அப்ளிகேஷன்
நீங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போனில் ஃபேஸ்புக் அப்ளிகே ஷனைப் பயன் படுத்து கிறீர்கள் என்றால்,
Menu-வை கிளிக் செய்து, App Settings செல்லுங்கள். அதில் 'Upload HD Photos' என்ற ஆப்ஷனைத் தேர்ந் தெடுத்துக் கொள்ளுங்கள்.
இனி அப்ளிகேஷன் மூலமாகப் புகைப் படங்களை அப்லோடு செய்யும் போதும், தரம் குறையாமல் புகைப் படங்கள் அப்லோடு ஆகும்.
ஐபோன் ஃபேஸ்புக் அப்ளிகேஷனில் தரமான புகைப் படங்களை அப்லோடு செய்ய, Facebook Account settings சென்று,
Videos and photos என்ற மெனுவில், 'Upload HD' என்ற ஆப்ஷனைத் தேர்வு செய்ய வேண்டும்.
Videos and photos என்ற மெனுவில், 'Upload HD' என்ற ஆப்ஷனைத் தேர்வு செய்ய வேண்டும்.
ஃபேஸ்புக் மெசெஞ்சர் அப்ளிகேஷன் மூலம் பேமன்ட் செய்யும் வசதியே வந்து விட்டாலும்,
அடிப்படை வசதிகளைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.
அடிப்படை வசதிகளைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.