ரத்தம் தேவைக்கு புதிய செயலி !
புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..
லைக் பண்ணுங்க... "
ரத்ததானம் செய்பவர் களையும், ரத்தம் தேவைப்படு வோரையும் ஒருங்கி ணைத்து, உடனுக்குடன் ரத்தம் பெறும் விதமாக புதிய செயலி ஒன்றை சேலத்தை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவன் வடிவமைத் துள்ளார்.
பொது நலன் கருதி செயலி வடிவமைப்பு ரத்ததானம் குறித்த விழிப்புணர்வு நாளுக்கு நாள் பரவலாக்கப் பட்டு தான் வருகிறது.
இருப்பினும் அவசர காலங்களில் ரத்தம் கிடைக்காமல் உயிரிழப் போரின் எண்ணிக்கையும் குறைந்த பாடில்லை. குறிப்பாக ஒருவருக்கு ரத்தம் தேவைப்படும் போது பாதிக்கப் படுவோரின் குடும்பத் தினரின் செய்வ தறியாது படபடப்புக்கு ஆளாகும் நிலை சொல்லில் அடங்காது.
ரத்ததானம் செய்ய விருப்ப முள்ளவர்கள் அவர் உருவாக்கி யுள்ள செயலியில் தங்கள் விவரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் ரத்தம் தேவைப் படுவோர் இவர்களை எளிதில் கண்டறிந்து பயன் பெறலாம்.
இதற்கு தீர்வு காண வேண்டும் என்று மனதில் தோன்றிய எண்ணங் களுக்கு செயலி வடிவம் கொடுத்துள்ளார் சேலத்தை சேர்ந்த மாணவன் ரஞ்சித். சேலம் அழகாபுரம் நகரமலை அடிவாரம் பகுதியை சேர்ந்த ராஜா-தவமணி தம்பதியின் இளைய மகன் ரஞ்சித் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார்.
ரத்ததானம் செய்ய விருப்ப முள்ளவர்கள் அவர் உருவாக்கி யுள்ள செயலியில் தங்கள் விவரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் ரத்தம் தேவைப் படுவோர் இவர்களை எளிதில் கண்டறிந்து பயன் பெறலாம்.
அதே நேரத்தில், தனது செயலியை பயன் படுத்துவதன் மூலம், நேரத்தை மிச்சப்படுத் தலாம் என்றும், இதன் மூலம் தேவையற்ற பதற்றம் தவிர்க்கப்படு வதோடு, உரிய நேரத்தில் ரத்தம் கிடைக்கும் என்று ரஞ்சித் கூறுகிறார்.
பொதுநலன் கருதி செயலியை உருவாக்கி யிருக்கும் 10ஆம் வகுப்பு மாணவனின் முயற்சி பாராட்டப் படத்தக்க ஒன்றாக உள்ளது. இதன் மூலம் உரிய நேரத்தில் ரத்த தானம் கிடைத்து, மனித உயிர்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.