எந்த ஏடிஎம்-ல் பணம் உள்ளது? அறியும் தளம் !
புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..
லைக் பண்ணுங்க... "
ரூ 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்கு பின் பணத்தை எடுக்க ஏடிஎம் களில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. ஆனால் அனைத்து ஏடிஎம் களிலும் பணம் இல்லை என்ற அறிவிப்பு வருவதால் மக்கள் ஏமாற்ற துடன் திரும்பு கின்றனர்.
இந்த சிரமத்தை நீக்கவும் பொது மக்கள் வசதிக் காகவும் எந்தெந்த இடங்களில் ஏடிஎம்கள் திறக்கப் பட்டுள்ளது என்பதை தெரிவிக்க வெப்சைட் ஒன்று அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது.
கறுப்புப் பணத்தை ஒழிக்க, கடந்த 10 மாதங்களாக ரகசிய நடவடிக் கைகளை மேற்கொள்ளப் பட்டு கடந்த 8- ஆம் தேதி பிரதமர் மோடி, 500 ரூபாய், ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை வெளியிட்டார்.
இதை தொடர்ந்து நாட்டில் பல பகுதிகளில் மக்கள் பணத்தை மாற்ற பல்வேறு முயற்சிகளை மேற் கொண்டு வருகின்றனர். எந்தெந்த இடங்களில் எந்தெந்த வங்கி ஏடிஎம்கள் செயல் பாட்டிலுள்ளது
என்பதை துல்லியமாக காட்ட http://atmkaro.in/ என்ற வெப்சைட் வடிவமைக்க பட்டுள்ளது. இந்த செய்தி சமூக வலைத் தளங்களில் வைரலாக பரவி வருகிறது.