ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்யும் நேரம் ! - EThanthis

Recent Posts


ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்யும் நேரம் !

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
நமது வாழ்க்கையில் பிரிக்க முடியாத கருவியாகி விட்ட ஸ்மார்ட் போன்களில் பல நாட்களாக இருக்கும் மிகப்பெரிய பிரச்சனையாக அதன் பேட்டரி பேக்கப் இருக்கின்றது.
ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்ய
என்ன செய்தாலும் காலை சார்ஜ் செய்தால் இரவு வரை கூட முழுமையாக நீடிக்க வில்லை என எல்லோரும் குற்றம் சாட்டுகின்றனர். இதற்கு முக்கிய காரணம் நாம் தான் என தெரியுமா?

இத்தனை நாட்களாக ஸ்மார்ட்போனினை நாம் அனைவரும் தவறாக சார்ஜ் செய்து வருகின்றோம். பேட்டரி யூனிவர்சிட்டி என அழைக்கப்படும் பேட்டரி நிறுவனமான கேடெக்ஸ்,

ஸ்மார்ட்போன் கருவிகளில் இருக்கும் லித்தியம் அயன் பேட்டரி மற்றும் அதில் நீண்ட ஆயுள் பெறுவது எப்படி என்பன குறித்து சில தகவல்களை வழங்கியுள்ளது.

ஸ்மார்ட்போன் முழுமையாக சார்ஜ் ஆன பின் அதனினை சார்ஜரில் இருந்து எடுத்து விட வேண்டும். இரவு முழுக்க சார்ஜரில் இருந்தால் லித்தியம் பேட்டரி நீண்ட நாள் உழைக்காது.

சார்ஜிங்
பேட்டரி 100 சதவீதம் சார்ஜ் ஆன பின் ஸ்மார்ட்போன் பேட்டரியை 100 சதவீதத்தில் வைக்க டிரிக்கல் சார்ஜ்ஸ் செய்யும். இவ்வாறு செய்யும் போது பேட்டரி அதிகளவு அழுத்த மடைகின்றது. இதனால் சீக்கிரம் பாழாகி விடும்.

உணர்வு

பேட்டரி 100 சதவீதம் சார்ஜ் ஆனதும் ஆதனினை சார்ஜரில் இருந்து எடுப்பது நீண்ட உடற்பயிற்சிக்குப் பின் உடலை ஆசுவாசப் படுத்து வதைப் போன்றதாகும் என பேட்டரி யுனிவர்சிட்டி தெரிவித் துள்ளது.
போனை சார்ஜ் செய்ய
லி-அயன் 'Li-ion' பேட்டரிகளை 100 சதவீதம் வரை சார்ஜ் செய்ய வேண்டிய அவசியம் கிடையாது, அதிகளவு வோல்டேஜ் பேட்டரியை பாழாக்கி விடம் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. முடிந்த வரை நாள் முழுக்க கிடைக்கும் சமயங்களில் கருவியை சார்ஜ் செய்வது போதுமானது.

சார்ஜ்

அதிக நேரம் போனினை சார்ஜரில் வைப்பதை விட, கிடைக்கும் நேரங்களில் மட்டும் அவ்வப்போது சார்ஜ் செய்தால் பேட்டரி ஆயுள் நீடிக்கும். பேட்டரி 10 சதவீதம் இருக்கும் போது ஆதனினை சார்ஜ் செய்ய வேண்டும்.

சார்ஜிங்
நீண்ட நேரம் பேட்டரியை அதிக சூடேற்று வதை தவிர்த்து, நாள் முழுக்க பல முறை கருவியை சார்ஜ் செய்வது பேட்டரிக்கு நல்லதாகும்.

சார்ஜ்

முடிந்த வரை ஸ்மார்ட்போன் பேட்டரி களை குளிர்ச்சியாக வைக்க வேண்டும். கருவியை சார்ஜ் செய்யும் போது சூடாகும் பட்சத்தில் அதன் கவரை உடனே கழற்றி விடுங்கள். மேலும் வெயிலில் செல்லும் போது கருவியை முடிந்த வரை நேரடியாக வெயிலில் படாமல் பார்த்துக் கொண்டால் பேட்டரி நீண்ட நேரம் கிடைக்கும்.
ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்யும் நேரம் ! ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்யும் நேரம் ! Reviewed by Fakrudeen Ali Ahamed on July 14, 2019 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 EThanthis All rights reserved
close