ஃபோன்களை ஊடுருவும் ஸ்ட்ராண்ட்ஹாக் மால்வேர் குறித்து மத்திய அரசு எச்சரிக்கை !
புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..
லைக் பண்ணுங்க... "
சர்வர்கள், கம்யூட்டர்கள், ஸ்மார்ட்போன்களை தாக்கி செயலிழக்கச் செய்யவும், தகவல்களை திருடவும் மால்வேர் எனப்படும் நாசவேலை செய்யும் சாஃப்ட்வேர்கள் உருவாக்கப் படுகின்றன.
செக்கோஸ்லோவேயா நாட்டில் ஏராளமானோரின் வங்கிக் கணக்குகளில் தன்னிச்சையாக பணம் குறைந்து வந்ததை அடுத்து,
அதன் பின்னணியில் ஸ்ட்ராண்ட்ஹாக் (StrandHogg) மால்வேரின் கைவரிசை இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது
அதன் பின்னணியில் ஸ்ட்ராண்ட்ஹாக் (StrandHogg) மால்வேரின் கைவரிசை இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது
ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனாளர்களின் அந்தரங்க தகவல்கள்,
வங்கி கணக்கு விவரங்களை திருடும் புதிய ஸ்ட்ராண்ட்ஹாக் (StrandHogg) மால்வேரிடம் இருந்து எச்சரிக்கையாக இருக்கும்படி மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி யுள்ளது.
வங்கி கணக்கு விவரங்களை திருடும் புதிய ஸ்ட்ராண்ட்ஹாக் (StrandHogg) மால்வேரிடம் இருந்து எச்சரிக்கையாக இருக்கும்படி மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி யுள்ளது.
குறிப்பாக ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களை தாக்கும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ள இந்த மால்வேர், ஆண்ட்ராய்டின் அனைத்து பதிப்புகளிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
ஸ்மார்ட்போன்களில் ஏற்கனவே பதிவிறக்கம் செய்து நாம் பயன்படுத்தி வரும் சுமார் 500 ஆப்களை இந்த மால்வேர் தாக்கி தகவல்களை திருடி வருகிறது.
போட்டோ, வீடியோ, மைக் வசதிகளை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் ஸ்ட்ராண்ட்ஹாக் மால்வேர், நமது அந்தரங்க தகவல்களை திருடவும், ஒட்டுக் கேட்கவும் ஹேக்கர்களுக்கு உதவுகிறது.
ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற ஆப்களை மீண்டும் லாகின் செய்ய சொல்லியும் குறுக்கு வழியில் இந்த மால்வேர் நமது ஸ்மார்ட்போன்களில் புகுந்து வருகிறது.
ஏதேனும் லிங்க்குகள் திறக்கவில்லை என்றால், ஆப்கள் மூலம் அனுமதி தாருங்கள் என கேட்கும் மால்வேர், நமது சம்மதத்துடன் உள்ளே நுழைந்து உளவு பார்க்க ஆரம்பிக்கிறது.
இது குறித்து அனைத்து மாநில அரசுகளும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி யுள்ளது.
தெரியாத ஆப்களை கவனமாக டவுன்லோடு செய்தலும், ஆப்கள் கேட்கும் அனைத்திற்கும் கண்ணை மூடிக்கொண்டு அனுமதி கொடுக்காமல் இருத்தலுமே இந்த ஆபத்தில் இருந்து தப்பிக்க வழி.