நம்மை வாய் பிளக்க வைக்கும் 5G தொழில்நுட்பம் என்றால் என்ன? - EThanthis

Recent Posts


நம்மை வாய் பிளக்க வைக்கும் 5G தொழில்நுட்பம் என்றால் என்ன?

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
5G என்பது 5th generation, ஐந்தாந் தலைமுறை, கம்பியில்லாத் தொலைத் தொடர்பு- (radio) மொபைல் தொலைத்தொடர்பு தொழில் நுட்பமாகும்.
5G தொழில்நுட்பம் என்றால் என்ன?

1G என்ற முதலாந் தலைமுறை மொபைல் தொழில்நுட்பம் analog என்ற பழைய தொழில் நுட்பத்தை அடிப்படை யாகக் கொண்டு 1979ஆம் ஆண்டு அறிமுகமானது. 

Analog மொபைல் போன்கள், அடிப்படையில் தொலை பேசியாக மட்டுமே பயன்பட்டன.

இதைத் தொடர்ந்து digital தொழில் நுட்பத்தை அடிப்படை யாகக் கொண்ட 2G வந்தது. 

இதன் கையடக்கம், விலை என்பன காரணமாக இது பலரது கைகளுக்கும் எட்டியது. 3Gக்கு நாம் தாவிய போது, தகவல் பரிமாற்றத்தின் வேகம், 200 k bits/sec என்ற அளவுக்கு அதிகரித்தது மட்டுமல்ல, mobile internet access இணைய தொடர்பு, video calls, mobile tv எல்லாமே சாத்தியமாகின.

4G, இணைய தொடர்பில் படுவேகத்தையும், high definition mobile television, video conferencing, 3D television, cloud computing என்று எம்மை எங்கெங்கோ அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது. 

வரப்போகும் 5G, 4Gஐவிட 20 மடங்கு அதிகமான வேகத்தில் (200 மடங்கு என்றும் வாதிடப் படுகிறது) தரவு பரிமாற்றம் செய்யும் ஆற்றல் உள்ளது.

அதி உச்ச பயன்பாட்டு நேரங்களிலும் (peak times)குறைந்தபட்சம் 20 Gbite/sec என்ற வேகத்தில் தரவிறக்கம் செய்யும் ஆற்றல் உள்ளது.

(தற்போதைய 4Gயின் peak time download speed 1GB/ sec). Latency என்ற ‘எதிர்வினை நேரம்’ குறைவடையும். 

அத்தோடு (ability to connect more devices at once) பல உபகரணங் களை ஒரே வேளையில் இணைக்கும் செளகர்யம்,

(augmented reality, virtual reality) யதார்த்தமிகை, மெய்நிகர் நிலை அனுபவங்கள் என்பவற்றை 5G மேம்படுத்தி தரவல்லது.

மொபைல் போன்களைப் பொறுத்த வரை, congestion என்ற ‘அலைப்பகிர்வு நெரிசல்’ குறையும், dropouts என்ற ‘விலகல் நிலை’ அகலும். தரவிறக்க/ தரவேற்ற வேகம் அதிகரிக்கும். 

Cloud games என்ற தொலை விடங்களில் இருந்து கொண்டு இன்னொருவ ருடன் படுவேகமாக games விளையாட வசதியேற்படும். Facebook, YouTube, Instagram என்பவற்றின் ‘content load’ வேகம் அதிகரிக்கும்.

Telstra, பாரிய தொலைத்தொடர்பு தொழில்நுட்ப நிறுவனமான Ericsson உடன் கைகோர்த்து, 5Gக்குத் தேவையான hardware, infrastructure, processors, modems, 5G tower Equipment என்பவற்றை நிர்மாணிப்பதில் ஈடுபட்டிருக்கிறது. 

Samsung, Oppo, LG, Huawei போன்ற நிறுவனங்கள் 5G மொபைல் போன்களை ஏற்கனவே இங்கு விற்பனை க்குக் கொண்டு வந்து விட்டன.

5G யின் வேகம், ஆற்றல் என்பன மிக அதிகம் என்றபோதும், Fibre optic cables மூலமாக வழங்கப்படும் National Broadband Network இற்கு இது மாற்றாக அமைய முடியாது என்று இந்தத் துறையில் உள்ள நிபுணர்கள் கருதுகிறார்கள்.

நம்மை வாய் பிளக்க வைக்கும் 5G தொழில்நுட்பம் என்றால் என்ன? நம்மை வாய் பிளக்க வைக்கும் 5G தொழில்நுட்பம் என்றால் என்ன? Reviewed by Fakrudeen Ali Ahamed on December 30, 2019 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 EThanthis All rights reserved
close