மொபைல் ஹாட்ஸ்பாட் ஏன்? - EThanthis

Recent Posts


மொபைல் ஹாட்ஸ்பாட் ஏன்?

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
ஜென் z தலை முறை மட்டு மில்லாமல், எல்லாரும் விரும்பும் முக்கிய மான ஸ்பாட் ஹாட்ஸ்பாட். மொபைல் டேட்டாவை மற்ற கேட்ஜெட் களுடன் பகிர்ந்து கொள்ள உதவும்


டெக்னாலஜியே ஹாட்ஸ்பாட். ஜியோ வந்தபின் மொபைல் மூலமாக இணை யத்தை கணினி யுடன் இணைப் பவர்கள் அதிகரி த்திருக்கி றார்கள்.

ஹாட்ஸ்பாட் என்பது ரேடியோ சிக்னல்கள் கிடைக்கக் கூடிய குறிப்பிட்ட பகுதி யாகும். 3G, 4G சப்போர்ட் செய்யும் மொபைல் இதற்கு ஏதுவான தாக இருக்கும். இதற்கு டெத்தரிங் என்று பெயர்.

இதற்கு நம்முடைய மொபை லிலும், கணினி யிலும் வைபை வசதி இருந்தால் மட்டும் போது மானது. இதற்கென தனியாக எந்த ஒரு மென் பொருளும் தேவை யில்லை.

இந்த வசதி களை ஆப்பிள், விண்டோஸ், ஆண்ட்ராய்ட் மற்றும் பிளாக்பெர்ரி மொபை ல்கள் வழங்கு கின்றன. அனைத்து மொபை லிலும் இந்த வசதிகள் இல்லை என்பது குறிப்பிடத் தக்கது.

சில மொபைல்கள் USB கேபிள் வழியாக கணினியை இணைய த்துடன் இணைக்க வழி செய்கிறது. ஹாட்ஸ் பாட்டை ஆன் செய்வதற்கு முன் நம்மிடம் போது மான

அளவில் டேட்டா உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இதற்கு பாஸ்வேர்ட் போட்டு வைப்பதின் மூலம் அடுத்த வர்கள் நம்முடைய இன்டர் நெட்டை பயன் படுத்து வதை தடுக்க முடியும்.

ஆண்ட்ராய்ட் மொபைலில் வைஃபை ஹாட்ஸ்பாட் ஆன் செய்வது எப்படி ?

2.2 இயங்கு தளத்தில் இயங்கும் மொபைல் மற்றும் டேப்லட் களில் இந்த வசதி உள்ளது. இதனைக் கொண்டு 5 பேர் வரை ஹாட்ஸ் பாட்டை பயன் படுத்த இயலும்.


சுமார் இருபது மீட்டர் வரை இந்த ஹாட்ஸ்பாட் வேலை செய்யும். Settings> Wireless & Networks > Portable WiFi Hotspot சென்று க்ளிக் செய்வதின் மூலம் ஆன் செய்து பயன் படுத்தலாம்.

ஐ போன் மொபைலில் வைஃபை ஹாட்ஸ்பாட் ஆன் செய்வது எப்படி ?

ஐபோனில் இது personal hotspot என்று அழைக்கப் படுகிறது. Settings> General> Network> Personal Hotspot> WiFi Hotspot சென்று க்ளிக் செய்து பயன் படுத்த லாம்.

விண்டோஸ் மொபைலில் வைஃபை ஹாட்ஸ்பாட் ஆன் செய்வது எப்படி ?

விண்டோஸ் மொபைலில் இது internet sharing என்று அழைக்கப் படுகிறது. Start screen > App List > Settings > Internet sharing சென்று க்ளிக் செய்வதன் மூலமாக பயன் படுத்த லாம்.

பிளாக் பெர்ரி மொபைலில் வைஃபை ஹாட்ஸ்பாட் ஆன் செய்வது எப்படி ?

குறைந்த பட்சம் ஐந்து பேர் வரை இதன் மூலம் இன்டர் நெட்டை பயன் படுத்த முடியும். Manage connections > WiFi > Mobile hotspot செல்வதின் மூலம் ஹாட்ஸ் பாட்டை பயன் படுத்த லாம்.

ஹாட்ஸ்பாட் பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டி யவை

ஹாட்ஸ் பாட்டை ஆன் செய்யும் போது அதில் Network SSID என்பதில் தங்கள் மொபை  லின் பெயர் கொடுக்கப் பட்டிரு க்கும். விருப்ப த்துக்கு ஏற்ப நம்முடைய பெயரைக் கூட வைத்துக் கொள்ள லாம்.

Security ல் நம்முடைய இணைப்பை யார் பயன் படுத்த லாம் என்பதை தீர்மானி க்கலாம். எல்லோரும் பயன் படுத்த லாம் என்றால் open என்பதை தெரிவு செய்யலாம்.


குறிப் பிட்ட நபர் களுக்கு மட்டு மென்றால் WAP2PSK க்ளிக் செய்து பாஸ்வேர்டு போட்டுக் கொள்ள லாம்.

ஹாட்ஸ் பாட்டை பயன் படுத்தும் போது அதிக இன்டர்நெட் தீரும் என்பதால் சில செயலி களின் ஆட்டோ அப்டேட் ஸ்களை ஆப் செய்து வைக்க வேண்டும். இது அதிக இன்டர்நெட் பயன் பாட்டினைக் குறைக்கும்.

ஹாட்ஸ் பாட்டை பயன் படுத்தாத நேரங் களில் அதை அனைத்து வைப்பது நல்லது.விரைவில் பேட்டரி குறைவதை இது தடுக்கும்.
மொபைல் ஹாட்ஸ்பாட் ஏன்? மொபைல் ஹாட்ஸ்பாட் ஏன்? Reviewed by Fakrudeen Ali Ahamed on September 25, 2018 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 EThanthis All rights reserved
close